குடும்ப அட்டை வகைகள் அதன் குறியீடு..! | NPHH, PHH,AAY, NPHH-S குடும்ப அட்டை என்றால் என்ன?

Advertisement

ரேஷன் அட்டை குறியீடு  | NPHH, PHH,AAY, NPHH-S குடும்ப அட்டை என்றால் என்ன?

ரேஷன் கார்டு வகைகள் | குடும்ப அட்டை எண் விவரம்: தமிழகம் முழுவதும் தற்போது பழைய குடும்ப அட்டைக்கு பதிலாக ஸ்மார்ட் ரேஷன் கார்டு எனும் புதிய குடும்ப அட்டை மத்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் மிக முக்கிய அடையாள ஆவணமாக இருந்து வருகிறது ரேஷன் ஸ்மார்ட் கார்டு. தமிழ்நாட்டில் 5 வகையான ரேஷன் அட்டைகள் உள்ளன. அவை அனைத்தும் குடும்பத்தின் வருவாயை பொறுத்து மாற்றம் ஆகும்.  குடும்ப அட்டை அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்தாலும் அதில் இருக்கும் குறியீடுகளை வைத்தே நாம் எந்த வகையை சேர்ந்தவர்கள் என்று அறிந்துகொள்ள முடியும். இந்த குடும்ப அட்டை மூலம் தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு தேவைப்படும் பல அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் வாங்கி வருகின்றனர்.

பழைய ரேஷன் அட்டைகளில் முன் பக்கத்தில் உங்களுடைய குடும்ப அட்டை எந்த வகையை சேர்ந்தது என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அது போன்று தற்போது நடைமுறையில் உள்ள ஸ்மார்ட் ரேஷன் அட்டையில் இருக்கும் குறியீடுகளுக்கு என்ன அர்த்தம் என்று தெரிந்துக்கொள்ளுவோம். 

எளிமையாக ஸ்மார்ட் ரேஷன் கார்டில் போட்டோ மாற்றுவது எப்படி..!
ரேஷன் கார்டு நம்பர்-ஐ கண்டுபிடிப்பது எப்படி?

PHH Ration Card Meaning Tamil:

PHH Ration Card Meaning Tamil

PHH (Priority house hold) – முன்னுரிமை உள்ளவர்கள்

  • PHH குடும்ப அட்டை என்றால் என்ன ?- Priority Household என்று பொருள்
  • PHH பிரிவில் உள்ள குடும்ப அட்டைகள் மொத்தமாக தமிழ்நாட்டில் 76,99,940 உள்ளன.
  • PHH எனும் குறியீடு உங்கள் குடும்ப அட்டையில் இருந்தால் ரேஷன் கடையில் மாதத்திற்கு 8 கிலோ அரிசி நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

PHH – AAY Ration Card Meaning Tamil:

PHH – AAY Ration Card Meaning Tamil

PHH – AAY (Priority house hold – Antyodaya Anna Yojana) – வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்

  • PHH- AAY குடும்ப அட்டை என்றால் என்ன ? – Priority house hold – Antyodaya Anna Yojana Card என்று பொருள்.
  • இந்த PHH – AAY எனும் குறியீடு உள்ள குடும்ப அட்டை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படும்.
  • இந்த பிரிவில் உள்ளவர்களுக்கு 35 கிலோ அரிசி குறைந்த விலையில் வழங்கப்படும்.
  • PHH – AAY பிரிவில் உள்ள குடும்ப அட்டைகள் மொத்தமாக தமிழ்நாட்டில் 18,64,600 உள்ளன.

NPHH Ration Card Meaning Tamil:

NPHH Ration Card Meaning Tamil

NPHH ( Non Priority House Hold) – முன்னுரிமை இல்லாதவர்கள்

  • NPHH குடும்ப அட்டை என்றால் என்ன ? – Non Priority House Hold என்று பொருள்.
  • NPHH எனும் குறியீடு உங்கள் குடும்ப அட்டையில் இருந்தால் ரேஷன் கடையில் அரிசி உட்பட சர்க்கரை மற்றும் அனைத்து பொருள்களும் வாங்க முடியும்.
  • NPHH பிரிவில் உள்ள குடும்ப அட்டைகள் மொத்தமாக தமிழ்நாட்டில் 90,08,842 உள்ளன.
ஆன்லைன் மூலம் புதிய ரேஷன் கார்டு அப்ளை பண்ணுவது எப்படி?

NPHH-S Ration Card Meaning Tamil:

NPHH-S Ration Card Meaning Tamil

  • NPHH-S எனும் குறியீடு உங்கள் குடும்ப அட்டையில் இருந்தால் ரேஷன் கடையில் அரிசியை தவிர்த்து மற்ற அனைத்து பொருள்களும் வாங்கலாம்.
  • NPHH-S பிரிவில் உள்ள குடும்ப அட்டைகள் மொத்தமாக தமிழ்நாட்டில் 10,01,605 உள்ளன.

NPHH-NC Ration Card Meaning Tamil:

NPHH-NC Ration Card Meaning Tamil

NPHH-NC எனும் குறியீடு உங்களுடைய குடும்ப அட்டையில் இருந்தால் நீங்கள் நியாய விலை கடையில் எந்த ஒரு பொருளும் வாங்க இயலாது. குடும்ப அட்டையை நீங்கள் ஏதோ ஒன்றிற்காக அடையாளத்திற்கோ அல்லது முகவரி சான்றாகவோ மட்டுமே வைத்துக்கொள்ள முடியும்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement