ரேஷன் பொருட்கள் விலை பட்டியல் 2024 | Ration Shop Items Prices 2024 in Tamil

Advertisement

நியாய விலை கடை பொருட்கள் விலை 2024 | Niyaya Vilai Kadai Porul Price in Tamil

நமக்கு தேவையான பொருட்கள் மிகவும் விலை மலிவாக கிடைப்பது ரேஷன் கடைகளில் தான். அதுமட்டுமல்லாமல் மக்களுக்கு இலவசமாக அரிசி கிடைக்கிறது. இந்த சலுகையானது தமிழக மாநிலத்தில் மட்டும் தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த முன்னால் முதல்வர் கருணாநிதி அவர்களின் ஆட்சி காலத்தில் ஒரு கிலோ அரிசி ரூ. 1-க்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு அம்மா அவர்களின் ஆட்சி வந்த போது தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக அரிசி கொடுக்கப்பட்டது.

இதுமட்டுமல்லாமல் பண்டிகை காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு நியாய விலை கடையில் பரிசு பொருட்களும் வழங்கப்படுகிறது. சிலருக்கு நியாய விலை கடையில் விற்பனை செய்யும் பொருள்களின் விலை என்னவென்று தெரியாது. நாம் இந்த பதிவில் ரேஷன் கடையில் விற்பனை செய்யப்படும் மளிகை பொருட்களின் விலை பட்டியலை அறிந்துகொள்ளுவோம் வாங்க..

ரேஷன் அட்டை வகைகள் அதன் குறியீடு
ரேஷன் கடை நேரம் மற்றும் விடுமுறை நாட்கள்

ரேஷன் கடை பொருட்கள் விலை பட்டியல் | நியாய விலை கடை பொருட்கள் விலை பட்டியல்:

வ.எண்  ரேஷன் பொருள்  விலை (Kg/ Litre) 
1 அரிசி  இலவசமாக வழங்கப்படுகிறது 
2 சர்க்கரை  ரூ. 13.50/- (1 கிலோ)
3 கோதுமை  ரூ. 07.50/- (1 கிலோ)
4 மண்ணெண்ணெய்  ரூ. 16.50/- (லிட்டருக்கு)
5 துவரம் பருப்பு  ரூ. 30.00/- (1 கிலோ)
6 உளுத்தம் பருப்பு  ரூ. 30.00/- (1 கிலோ)
7 பாமாயில்  ரூ. 25.00/- (1 லிட்டர்)
8 உப்பு  ரூ.8 (1 கிலோ)
9 டீ தூள்  ரூ.24 (100 கிராம்)
10 சோப்பு  1 அல்லது 2 

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement