எந்த நட்சத்திரத்தில் பெண் ருதுவானால் என்ன பலன் தெரியுமா?

Ruthu Natchathira Palan

ருது நட்சத்திர பலன்கள்..! Ruthu Nakshatra Palan in Tamil..!

Ruthu Natchathira Palan/ ருது நட்சத்திர பலன்: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம்-ல் பெண்கள் எந்த கிழமையில் ருதுவானால் என்ன பலன் உள்ளது என்பதை போலவே எந்த நட்சத்திரத்தில் ருதுவானால் என்ன பலன் இருக்கிறது என்பதை பற்றித்தான் தெரிந்துக் கொள்ளப்போகிறோம். ஒரு பெண் பூப்பெய்தல் என்பது பெண்மையின் மறுபிறப்பு என்று கூறுகிறார்கள். அந்த வகையில் ஒரு பெண் எந்த நட்சத்திரத்தில் ருதுவானால் என்னென்ன பலன் இருக்கிறது என்பதை பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.

newபெண்கள் ருதுவான பலன்

ருது நட்சத்திர பலன்/ Ruthu Nakshatra Palan in Tamil:

 • அஸ்வினி ருது நட்சத்திர பலன்கள்: பெண்கள் அஸ்வினி நட்சத்திரத்தில் ருதுவானால் சுபத்துடன் இருப்பார்கள்.
 • பரணி ருது நட்சத்திர பலன்கள்: பரணி நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவாகின்றாள் என்றால் அந்த பெண்ணிற்கு நல்ல சந்ததி உண்டாக போகிறது என்று அர்த்தம்.
 • கிருத்திகை ருது நட்சத்திர பலன்கள்: கிருத்திகை நட்சத்திரத்தில் பெண் ருதுவானால் தரித்தரம் கொண்டவளாகவும், அந்த பெண்ணிற்கு குழந்தை பிறப்பதில் தாமதம் ஆகும் எனவும் சாஸ்திரம் கூறுகிறது.
 • ரோகிணி ருது நட்சத்திர பலன்கள்: ஒரு பெண் ரோகிணி நட்சத்திரத்தில் ருதுவானால் நன்மைகளை உடையவளாய் இருப்பாள்.
 • மிருகசீரிஷம் ருது நட்சத்திர பலன்கள்: மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் ருதுவாகின்ற பெண் தன் கணவனுக்கு நல்ல பெண்ணாக இருப்பாள்.
 • திருவாதிரை ருது நட்சத்திர பலன்கள்: திருவாதிரை நட்சத்திரத்தில் ருதுவான பெண் மற்றவர்களை வெறுக்கும் குணமும், நேர்மறை எண்ணம் இல்லாமல் எதிர்மறை எண்ணத்துடன் எப்போதும் இருப்பாள்.
 • புனர்பூசம் ருது நட்சத்திர பலன்கள்: புனர்பூசத்தில் பூப்பெய்த பெண் சுகத்தினை உடையவளாக இருப்பார்கள்.
 • பூசம் ருது நட்சத்திர பலன்கள்: பூசம் நட்சத்திரத்தில் வயதிற்கு வந்த பெண் வீட்டில் எப்போதும் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் இருப்பார்கள்.
 • ஆயில்யம் ருது நட்சத்திர பலன்கள்: பெண் ஆயில்யம் நட்சத்திரத்தில் ருதுவானால் அடிக்கடி வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் மற்றும் எதிர்காலத்தில் அதிகமாக மருத்துவ செலவுகள் ஏற்படும்.
 • மகம் ருது நட்சத்திர பலன்கள்: மகம் நட்சத்திரத்தில் ருதுவான பெண் தன்னுடைய கணவன்மார்களுக்கு நல்ல பெண்ணாக திகழ்வாள்.
 • பூரம் ருது நட்சத்திர பலன்கள்: பூரம் நட்சத்திரத்தில் ருதுவான பெண் கர்ப்ப நேரத்தில் மிகவும் கவனத்துடன் இருப்பது அவசியம். மேலும் இந்த நட்சத்திரத்தில் ருதுவானால் குழந்தை பிறப்பதற்கு தாமதம் ஆகும்.
 • உத்திரம் ருது நட்சத்திர பலன்கள்: உத்திரம் நட்சத்திரத்தில் ருதுவான பெண் மற்றவர்களுக்கு எப்போதும் உதவி செய்பவர்களாக இருப்பார்கள்.
 • அஸ்தம் ருது நட்சத்திர பலன்கள்: அஸ்தம் நட்சத்திரத்தில் ருதுவாகின்ற பெண் நல்லவளாக இருப்பாள்.
 • சித்திரை ருது நட்சத்திர பலன்கள்: சித்திரை நட்சத்திரத்தில் ருதுவாகின்ற பெண் மிகவும் திறமை வாய்ந்த பெண்ணாக இருப்பாள்.
 • சுவாதி ருது நட்சத்திரம் பலன்கள்: சுவாதி நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவாகின்றாள் என்றால் அந்த பெண்ணால் குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்படும்.
 • விசாகம் ருது நட்சத்திரம் பலன்கள்: விசாகம் நட்சத்திரத்தில் பெண் ருதுவானால் உடல்நல குறைபாட்டினால் அதிக மருத்துவ செலவுகள் ஏற்படும்.
 • அனுஷம் ருது நட்சத்திரம் பலன்கள்: அனுஷம் நட்சத்திரத்தில் ருதுவான பெண் அதிக நோயுடன் இருக்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.
 • கேட்டை ருது நட்சத்திரம் பலன்கள்: கேட்டை நட்சத்திரத்தில் ருதுவான பெண் தன்னுடைய கற்புக்கு எந்த வித பாதிப்பும் வராமல் கவனமாக பாதுகாத்து கொள்ளவும்.
 • மூலம் ருது நட்சத்திரம் பலன்கள்: மூலம் நட்சத்திரத்தில் ருதுவான பெண் நன்மை உடையவளாக இருப்பாள்.
 • பூராடம் ருது நட்சத்திரம் பலன்கள்: பூராடம் நட்சத்திரத்தில் ருதுவான பெண் அடுத்தவர்களுக்கு அடிமை போன்று இருக்க வாய்ப்பு ஏற்படும். இல்லையென்றால் ஏதேனும் ஒரு விதத்தில் பிறர் வசம் இருப்பதற்கு வாய்ப்பு உண்டாகக்கூடும்.

மேலும் இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் பதிவு செய்கின்றோம் நன்றி வணக்கம்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மீக தகவல்கள்