பள்ளி தின்பண்டங்கள்
அனைவருக்கும் வணக்கம் பொதுவாக நாம் அனைவரும் பள்ளிக்கு சென்றிருப்போம் அது ஒரு காண காணும் காலங்கள் அன்று நாம் செய்த சேட்டைகளும் அங்கு நண்பர்களுடன் பழகிய நாட்களும் எங்கு சென்றாலும் கிடைக்காது. அதே போல் பள்ளி பருவங்களில் பள்ளி வாசலில் நாம் வாங்கி சாப்பிட பொருட்களும் நம் மனதைவிட்டு மறையாது இன்றும் அதனை பற்றி நினைத்தால் கண்களில் கண்ணீர் வரும் அந்த அளவிற்க்கு அதன் நினைவுகளும் சுவையும் மறையாது. நாம் பள்ளியில் வாங்கி சாப்பிட ஒவ்வோரையும் பற்றி இப்போது பார்ப்போம்.
பள்ளி பருவம் நினைவுகள்:
நம் பள்ளி பருவம் என்றால் நம் கூடவே இருப்பது இரண்டு தான் ஒன்று நண்பன் இரண்டாவது தின்பண்டங்கள் நமக்கு பிடித்த இரண்டும் நம் கூடவே இருந்தால் வேறு ஒன்றிற்கு மனம் செல்லாது.
பள்ளிக்குள் செல்வதற்கு முன் இரண்டு விஷயம் இருந்தால் பள்ளிக்கு செய்வோம். ஒன்று தின்பண்டங்கள் இரண்டாவது நாளை நான் பள்ளிக்கு போகமாட்டேன் என்று சொல்லிவிட்டு செல்வோம். இது போல் யார் செய்திர்களோ? அவர்கள் இந்த பதிவு சில நல்ல நினைவுகளை நினைவு படுத்தும்.
அதே போல் பள்ளிக்கு செல்லும் வழியில் என்னென்ன தின்பண்டங்கள் விற்க்குமோ அனைத்தையும் வாங்கிக்கொண்டு தான் செல்வோம். அதில் சிலவற்றை இப்போது பார்ப்போம்.
- மாங்காய் இதற்கு அடிவாங்கி சாப்பிடக்கலாம் அதிகம் உள்ளது. அதிலும் திருட்டு மாங்காய் என்பது மிகவும் சுவையானது.
கொய்யாக்காய் என்பது தனி சுவை இதை ஒன்று வணங்கி நண்பர்களுடன் பிரித்து என்று சாப்பிடுவதும் அதில் மிளகாய் தூள் உப்பு சேர்த்து சாப்பிடால் அதில் தனி சுவை இப்போது அதனை சாப்பிடவேண்டும் என்று நினைத்தால் யோசிக்காமல் வாங்கி சாப்பிடுங்கள்.
நெல்லிக்காய் பார்த்தாலே வாய் ஊற ஆரம்பித்து விடும். இது போல் இப்போது சாப்பிடாலும் அந்த சுவை கிடைப்பதில்லை எவ்வளவு செய்தாலும் பள்ளி பருவம் பள்ளி பருவம் தான். இதனை சாதாரண நெல்லிக்காய் 1 ரூபாய் ஊறவைத்த நெல்லிக்காய் 2 ரூபாய் என்று வாங்கி சாப்பிட்டுருப்போம்.
இதன் சுவை சூடமிட்டாய் போல் இருந்தாலும் பெரும்பாலானோருக்கு இதை குருவிமிட்டாய் என்றால் தான் தெரியும். இதை சாப்பிடுவது மட்டுமில்லாமல் இதனை வாங்கி விளையாட அதிகம் ஆசை இருக்கும்.
நீங்கள் 12th படித்துவிட்டு அடுத்து என்ன படிப்பது என்று தெரியவில்லையா.! |
தேன்மிட்டாய் பார்த்தவுடன் வாயில் எச்சி ஊறுகிறதா? இதை ஒரு ரூபாய்க்கு இரண்டு தருவார்கள்.
கல்கோனா இதை வாங்கி மதியம் வாயில் போட்டால் மதியம் வரும் தூக்கத்தை தடுக்க முடியும். ஒரு ரூபாய்க்கு வாங்கி நான்கு நபர்கள் சாப்பிடுவார்கள்.
மேல் இருக்கும் படத்தில் உள்ளதை யாராலும் சாப்பிடாமல் இருந்திருக்க வாய்ப்பு இல்லை ஏனென்றால் இதை சுவை தனி ஆகும்.
இந்த படத்தில் உள்ளதை இந்த காலத்தில் உள்ளவர்கள் பார்த்திருப்பார்கள் என்றால் அது ஆச்சிரியம் தான். இப்போது இது கடைகளுக்கு வருவதும் இல்லை அதை செய்வதும் இல்லை என்கிறார்கள்.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |