சூரிய கிரகணம் அன்று கர்ப்பிணி பெண்கள் வெளியே சென்றால் என்ன ஆகும் தெரியுமா?

Solar eclipse is dangerous for pregnant women

சூரிய கிரகணம் அன்று கர்ப்பிணி பெண்கள் 2022

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம் இன்றைய பதிவில் ஒரு அருமையான தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். அதாவது இன்று 2022-ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம். ஆக இன்றைய நாள் கர்ப்பிணி பெண்கள் வெளியே செல்ல கூடாது. அது ஏன்? அப்படி வெளியே சென்றால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவு மூலம் நாம் படித்தறியலாம் வாங்க.

சூரிய கிரகணத்தால் கர்ப்பிணி பெண்களுக்கு ஆபத்தா?

இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் மாலை 4.29 மணிக்கு தென்படும். இந்தியாவில் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் இந்த சூரிய கிரகணம் தென்படும். சூரிய கிரகணம் மாலை 4 மணி 29 நிமிடங்களுக்குத் தொடங்கி இதனுடைய உச்சகட்ட மறைப்பு நிலை மாலை 5 மணி 30 நிமிடங்களுக்கும், சூரியன் மறையும்போது 5 மணி 48 நிமிடமுமாகும்.

ஆன்மிக ரீதியாக:

திருமணம் முடித்து மாதவிடாய் நாட்கள் தள்ளி போய் இருக்கும் பெண்கள், கர்ப்பிணி பெண்கள் இவர்கள் கண்டிப்பாக சூரிய கிரேக்கம் ஆரம்பிப்பதற்கு முன் உணவருந்துவிட்டு, வீட்டில் அமைதியாக எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் ஒரு பக்கமாக, நிம்மதியாக தூங்குங்கள்.

அதிலும் 45 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை உள்ள கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக எந்த ஒரு வேலைகளும் பார்க்க கூடாது. அதாவது வெங்காயம் உரிப்பது, பூண்டு உரிப்பது, காய்கறிகள் வெட்டுவது இது போன்ற விஷயங்களை செய்ய கூடாது. ஏன் செய்ய கூடாது என்றால் இந்த கால கட்டத்தில் தான் குழந்தை வளர்ச்சி அடையும். ஆக நாம் இது போன்ற வேலைகளை செய்யும்பொழுது குழந்தை ஊனமாக பிறக்கும் என்று சொல்லப்படுகிறது. எதனால் இந்த பிரச்சனை ஏற்படும் என்றால் கிரகணத்தின் போது அதில் இருந்து வரும் கதிர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு ஆபத்துகளை ஏற்படுத்திவிப்பிடும் என்று சொல்லப்படுகிறது.

அறிவியல் ரீதியாக:

கிரகணச் சமயத்தில் சூரியனில் எந்தவொரு சிறப்பு மாற்றமும் ஏற்படுவதில்லை. எப்போதும் போல நாற்புறமும் தன் ஒளியை வீசிக்கொண்டு இருக்கிறது. வேறு எந்த சிறப்பு மர்மக்கதிர்களும் வெளிப்படுவது இல்லை. கிரகணத்தின் போது உணவு உண்ணக்கூடாது என்று கூறுவது தவறானது. கிரகணத்தின் போது எந்தவித சிறப்பு கதிர்களும் பூமியில் வருவதில்லை.

கிரகணத்தின் போது உண்பதால் பிரச்சினைகள் ஏற்படும் என்பதற்கு எந்தவித அறிவியல் பூர்வமான ஆதாரங்களும் இல்லை. கிரகணத்தின் போது பறவைகள் உணவு உண்கின்றன. ஆடு, மாடுகள் புல்லை மேய்கின்றன அவைகளுக்கு எந்தவித தீங்கும் ஏற்படுவதில்லை. எனவே வதந்திகளை நம்பாமல் தாராளமாக உணவை உட்கொண்டு மகிழுங்கள்.

பூமி இருக்கும் திசையில் இடையில் நிலவு வந்து மறைத்து விடுவதால் பூமியில் சில பகுதிகளில் சூரிய முகம் மறைக்கப்படுகிறது. அந்த பகுதியில் மட்டும் கிரகணம் தென்படும்.

உலகில் வேறெங்கும் கிரகணத்தைக் கண்டு கர்ப்பிணிப் பெண்கள் ஓடி ஒளிந்துக்கொள்வதில்லை. அங்கெல்லாம் கர்ப்பிணிப் பெண்களுக்கும் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படுவதில்லை. கருக்கொண்ட பூச்சிகள் முதல் விலங்குகள் வரை அதன் போக்கில் கிரகணத்தின் போது வெளியே திரிந்துகொண்டு தான் உள்ளன. அவற்றுக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படுவதில்லை.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇👇
2022-ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரணம் அக்டோபர் 25 கடும் அவஸ்தைகளை சந்திக்க போகும் ராசிகள் யார் தெரியுமா?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்