சோயா பீன்ஸ் பற்றி அறிய தகவல்..!
அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய பதிவில் சோயா பீன்ஸ் பற்றிய தகவலை பார்க்க போகின்றோம். நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் இந்த சோயா பீன்ஸ் பற்றி பலருக்கும் அது எங்கு விளைவிக்கப்படுகிறது அதில் என்னென்ன சத்துக்கள் நிறைந்துள்ளன, எப்படி விளைவிக்கபடுகிறது என்பது பற்றிய தகவல்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு தான். இவற்றையெல்லாம் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாங்க..
சோயா பீன்ஸ் பற்றி தகவல்கள்:
இந்த சோயா பீன்ஸ் என்பதை சோயா அவரை மற்றும் மீல் மேக்கர் என்றும் கூறுவார்கள். இது ஒரு அவரை வகை தாவரம் ஆகும். இதன் பிறப்பிடம் கிழக்கு ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான், கொரியா, ரஷ்யா ஆகும். இது கிழக்காசியாவில் பயிரிடப்படும் முக்கிய பயிர் ஆகும்.
ஆண்டு முழுவதும் விளைவதால் இதனை ஆண்டுத் தாவரம் என அழைக்கப்படுகிறது. இந்த சோயாவின் மத்திய நிலையம் சீனா என்றாலும் இது வேறு நாடுகளிலும் பயிரிடப்படுகிறது.
சோயா சீனாவிலேயே பெரிய அவரை ஆகும். இந்த சோயா அவரை சீனாவின் உணவாகும் அங்குள்ள மருந்துகளிலும் 5,000 ஆண்டுகளுக்கு மேலாகப பயன்பட்டு வருகின்றது.
நீண்டகாலப் பயிரிட்டு வளர்க்கும் பிற தாவரங்களைப் போலவே தற்கால சோயாத் தாவரத்துக்கும், தானாகக் காட்டில் வளரும் சோயாத் தாவரத்துக்கும் இடையே பெரும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. பயிரிட்டு வளர்க்கும் சோயா இனங்கள் பல வகைகளில் உள்ளன.
கிளைசின் வைல்ட் என்பது தாவர பேரினம் ஆகும். அதில் கிளைசீன், சோஜா என்று இரண்டு துணை பேரினங்கள் உள்ளன. சோஜா என்பதில் பயிரிடப்படும் சோயா, காட்டுச் சோயா என்ற இரண்டு வகைகள் உள்ளன.
சோயா மனிதனுக்குத் தேவையான அனைத்து அமினோ அமிலங்களையும் குறிப்பிடத்தக்க அளவில் கொண்டிருப்பதனால், இது புரதச் சத்துக்கான சிறந்த மூலப்பொருளாக உள்ளது. பால் பொருட்களுக்கு மாற்று உணவுப்பொருளாக இந்த சோயா உள்ளது.
இதையும் படியுங்கள்=> மீல் மேக்கரை ஆண்கள் அதிகம் சாப்பிட கூடாது! ஏன் தெரியுமா?
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |