கல்பாசியை உணவில் சேர்த்து கொள்வதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிகோங்க..!

Stone Flower in Tamil

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவை முழுதாக படித்து முடிக்கும் பொழுது ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்ட மனத்திருப்தி உங்களுக்கு கிடைக்கும். அப்படி என்ன பயனுள்ள தகவல் என்று நீங்கள் சிந்தனை செய்வது புரிகின்றது. அது என்ன தகவல் என்றால் கல்பாசி பற்றிய தகவல்கள் தான். அதாவது நாம் அனைவருமே இந்த கல்பாசியை உணவில் பயன்படுத்தி இருப்போம். ஆனால் அதன் பிறப்பிடம், அதன் பிறபெயர்கள் மற்றும் பயன்கள் போன்ற தகவல்கள் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது.

அப்படி உங்களுக்கு இவை அனைத்தும் தெரிந்திருந்தால் பரவாயில்லை, மாறாக தெரியவில்லை என்றால் இன்றைய பதிவை முழுதாக படித்து அறிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Stone Flower Information in Tamil:

Stone Flower Information in Tamil

பொதுவாக இந்தியாவில் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் ஒன்றான இந்த கல்பாசி ஒரு லிச்சென் ஃப்ளோரா இனத்தை சேர்ந்தது. அதாவது ஒரு பூஞ்சை இனமாகும்.

இந்த லிச்சென் ஃப்ளோராவில் மொத்தம் 300 இனங்கள் உள்ளது. இந்த கல்பாசி பொதுவாக இந்திய அசைவ உணவுகளில் ஒரு முக்கிய மசாலா பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

மேலும் சில சைவ உணவுகளிலும் மசாலா பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது பொதுவாக மென்மையான பழுப்பு மற்றும் கருப்பு நிறத்தில் காணப்படும். மேலும் இது மிகவும் வறண்ட மற்றும் லேசான பஞ்சு போன்ற அமைப்பை கொண்டிருக்கும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ டிராகன் பழத்தை சாப்பிடுவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பிறப்பிடம்:

இந்த கல்பாசிகள் பொதுவாக வடக்கு மற்றும் தெற்கு அரைக்கோளங்கள் முழுவதும் பரவி உள்ளன. அதனால் இவை தான் அவற்றின் பிறப்பிடமாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

வேறுபெயர்கள்:

பொதுவாக இது கருங்கல் பூ என்று அழைக்கப்படுகிறது. ஆனால் சமஸ்கிருதத்தில் ஷைலேயம், தமிழில் கல்பாசி, பஞ்சாபியில் டாகர் பூல் (Dagar Phool), மராத்தியில் தாகத் பூல், தெலுங்கில் பண்டா புவ்வு, கன்னடத்தில் கல்லு ஹூவு மற்றும்  போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ துரியன் பழத்தை சாப்பிடுவதற்கு முன் அதனை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்

Benefits of Stone Flower in Tamil:

  1. சிறுநீரக கற்களைக் கரைக்க பயன்படுகிறது.
  2. செரிமானத்தை மேம்படுத்துகிறது.
  3. அல்சருக்கு ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
  4. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து கொள்ள பயன்படுகிறது.
  5. உடலின் ஆக்ஸிஜனேற்ற செயல்பாட்டிற்கு பயன்படுகிறது.
  6. இவை பாக்ட்ரியாவுக்கு எதிராக செயல்படுகிறது.
  7. உடலில் ஏதேனும் வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதனை போக்க பயன்படுகிறது.
  8. தோல் சம்பந்தப்பட்ட நோய்களின் சிகிச்சையில் இது பயன்படுத்தப்படுகிறது.
  9. இதன் புகையை சுவாசிப்பதால் தலைவலி நீங்கும் என்று கூறப்படுகிறது.
  10. வலி மற்றும் அழற்சியை குறைக்க உதவுகிறது.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ ரோஸ்மேரி பற்றிய தகவல் உங்களுக்கு தெரியுமா

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil