தேற்றான் கொட்டை பற்றிய சுவாரசியமான தகவல்..!

thetran kottai benefits in tamil

தேற்றான் கொட்டை பற்றிய தகவல்..!

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது மிகவும் புதுமையான மற்றும் பயனுள்ள ஒரு தகவல் தான். அது என்னவென்றால் தேற்றான் கொட்டை பற்றிய தகவல் தான். இந்த தேற்றான் கொட்டையில் பல பயன்கள் உள்ளன. மேலும் இந்த தேற்றான் கொட்டை பற்றி நம்மில் பலரும் அறிந்திருக்கும் வாய்ப்புகள் குறைவு. அதனால் இன்றைய பதிவில் இந்த தேற்றான் கொட்டை பற்றிய பல சுவாரசியமான தகவல்களை பற்றி பார்க்கலாம். சரி வாங்க பதிவினுள் செல்லலாம்.

தேற்றான் கொட்டை பற்றிய சுவாரசியமான தகவல்:

thetran kottai uses in tamil

தேற்றான் அல்லது தேத்தான் என்பது ஒரு மரம் ஆகும். இந்த தேற்றான் மரம் பொதுவாக தமிழகத்தின் மலைக் காடுகளில் மற்றும் சமவெளியில் காணப்படும். இந்த தேற்றான் மரத்தின் அனைத்து பாகங்களும் பல மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. மேலும் இந்த தேற்றான் மரம் திருக்குவளை என்னும் ஊரில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் ஸ்தல விருச்சமாக உள்ளது.

தேற்றான் கொட்டை பயன்கள்:

தேற்றா மரத்தின் விதை தேற்றான் கொட்டை என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இந்த தேற்றான் கொட்டையை கலங்கிய நிலையில் உள்ள நீரில் சிறிது நேரம் ஊற வைத்தால் கலங்கிய நிலையில் உள்ள அந்த நீர் தெளிவாக மாறும்.

இப்படி கலங்கிய நிலையில் உள்ள நீரை தெளிவாக்குவதாலும், உடலை பல நோய்களிலிருந்து காப்பாற்றி தேற்றுவதாலும் தான் இதனை தேற்றான் கொட்டை என அழைக்கின்றனர்.

பின்பு இந்த தேற்றாங்காயிலிருந்து அதன் கொட்டையை எடுத்த பிறகு மீதமுள்ள சதைப்பகுதியை இடித்து மீன்கள் நிறைந்த உள்ள நீர்நிலைகளில் போடுவதால் இதிலிருந்து  வரும் ஒரு நறுமணம் மீன்களை மயக்க நிலைக்கு கொண்டு செல்லுவதால் அவை கரையில் ஒதுங்கும். இதை  மீன்களை எளிதில் பிடிக்க இந்த தேற்றங்காய்யை சிலர் பயன்படுத்துவார்கள்.

மேலும் இந்த தேற்றான்கொட்டையை நன்கு வறுத்து பிறகு அதனை நன்கு பொடியாக அரைத்து அந்த பொடியில் காபி போடலாம்.

தமிழ் இலக்கியத்தில் தேற்றான் கொட்டை பற்றிய தகவல்:   

தமிழ் இலக்கியத்தில் தேற்றான் மரத்தை சில்லம், இல்லம் மற்றும் கதலிகம் போன்ற பெயர்களை கொண்டு குறிப்பிடப்படுகின்றது.

“இல்ல மரப்பெயர் விசைமர இயற்றே “ என்று இந்த தேற்றா மரத்தை தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“குல்லை குளவி கூதளம் குவளை
இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன் ” என்று தேற்றா மரத்தின் மலர்களை பற்றி நற்றிணை பாடலில் கூறப்பட்டுள்ளது.

“இல்லத்துக்காழ் கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் தெளிந்து” என்று தேற்றா மரத்தினை பற்றி கலித்தொகையில்  பாடலில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவப் பயன்கள்:

இந்த தேற்றா மரத்தின் அனைத்து பாகங்களும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதன் பழம் சளியை போக்கும், வயிற்றுப்போக்கை சரி செய்யும், காயங்களை குணமாக்கும், சிறுநீரக பிரச்சனைகள் சரி செய்யும் மற்றும் கண்ணில் உள்ள கோளாறுகளை நீக்கும்.

மேலும் இதன் விதைகள் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் லேகியம் உடல் இளைக்கவும், நோய்வாய்ப்பட்ட உடலை தேற்றுவதற்கும் பயன்படுகின்றது.

இதையும் படியுங்கள் => சணல் விதை பற்றி உங்களுக்கு தெரியுமா..?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –>Today Useful Information in tamil