சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாக்கெட் உணவு பொருட்கள் வாங்கும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்..!

Things to Consider Before Buying Food Products in Tamil

Things to Consider Before Buying Food Products in Tamil

அன்பு நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய காலகட்டத்தில் நாம் வாங்கும் உணவு பொருட்கள் அனைத்துமே பாக்கெட் பொருட்களாக தான் கிடைக்கின்றன. நாம் வாங்கும் மளிகை பொருட்கள் முதல் உணவு பொருட்கள் வரை அனைத்துமே பாக்கெட் மூலம் பேக் செய்யப்படுகிறது. அதுபோல நாம் வாங்கும் பாக்கெட் பொருள்களில் இருக்கும் விவரங்களை பற்றி என்றாவது கவனித்திருப்போமா..? அந்த பாக்கெட் உணவுகளில் என்ன கொடுக்கப்பட்டிருக்கிறது என்று இனியாவது பாருங்கள். அந்த வகையில் பாக்கெட் உணவு பொருட்கள் வாங்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இந்த 7 உணவுகளை மறந்தும் சாப்பிடாதீர்கள்..!

பாக்கெட் உணவு பொருட்களில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

பாக்கெட் உணவு பொருட்களில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

நாம் உணவு பொருட்கள் வாங்கும் முன் சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். உணவு பொருட்கள் வாங்கும் போது அதில் ஒரு தகவல்  தெளிவாக அச்சிடப்பட்டிருந்தால் அது ஆரோக்கியமான உணவு பொருளாக கருதப்படுகிறது. அதாவது அதில் தேதி, என்ன பொருட்களில் தயாரிக்கிறார்கள் என்று அச்சடிக்கப்பட்டிருந்தால் அது ஆரோக்கியமான பொருளாக இருக்கும். அதேபோல் நாம் வாங்கும் ஒவ்வொரு உணவு பொருட்களிலும் அது குறித்த தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதுமட்டுமில்லாமல் பாக்கெட் உணவுகளில் காலாவதி தேதி முதல் தரச்சான்று பெற்ற முத்திரை வரை நாம் கவனிக்க வேண்டும். சரி நாம் வாங்கும் பாக்கெட் உணவு பொருள் ஆரோக்கியமான உணவு பொருள் என்று எப்படி தெரிந்து கொள்வது. அதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

  1. முதலில் நாம் வாங்கும் உணவு பொருட்களின் தயாரிப்பு தேதி முதல் காலாவதி தேதி வரை கவனித்து வாங்க வேண்டும்.
  2. அடுத்ததாக நீங்கள் வாங்கும் பொருள் தரச்சான்று பெற்ற உணவு பொருளா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தரச்சான்று முத்திரை பெற்ற உணவுப் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்.
  3. ஒரு உணவு பொருள் வாங்குகிறோம் என்றால், முதலில் அந்த பொருள் தயாரிக்கும் போது என்னென்ன பொருட்கள் சேர்த்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
  4. நிறமூட்டிகள், சர்க்கரை, பதனிடும் பொருட்களின் பயன்பாடு அதிகமாக இருந்தால் அந்த பொருள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
  5. அதுபோல நீங்கள் வாங்கும் உணவு பொருள் சைவமா அல்லது அசைவமா என்ற குறியீடு இருக்கும். அந்த குறியீடு இருக்கிறதா என்பதை பார்த்து வாங்க வேண்டும்.
  6. அதேபோல அந்த பொருளில் தயாரிப்பாளரின் முகவரி மற்றும் தொடர்பு எண் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். உதாரணமாக, நீங்கள் வாங்கும் பொருள் “மணப்பாறை முறுக்கு” என்று பெயர் இருந்தால் அது மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து தயாராகி வருகிறது என்பதை அறிந்துகொள்ள முடியும்.
  7. அதனால் அந்த பொருளில் முகவரி மற்றும் தொடர்பு எண் இல்லை என்றால் அந்த பொருள் வாங்குவது தவிர்க்க வேண்டும்.
  8. அதுபோல பால், பிரெட் மற்றும் தயிர் போன்ற பொருட்கள் வாங்கும் போது அதில் Best before என்று குறிப்பிடப்பட்டுள்ள தேதியை சரிபார்த்து வாங்க வேண்டும்.
  9. மேலும், நீங்கள் வாங்கும் பொருள் எந்த குளிர் அல்லது வெப்ப நிலையில் வைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு வாங்க வேண்டும்.

இனி நீங்கள் வாங்கும் பாக்கெட் உணவு பொருட்களில் மேற்கூறிய விஷயங்கள் இருக்கிறதா என்பது தெரிந்துகொண்டு வாங்குங்கள்..!

இதையும் படியுங்கள் => தப்பி தவறிகூட இந்த உணவை இரவில் சாப்பிட்டுவிடாதீர்கள்..?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –>Today Useful Information in tamil