Thirumanathil Atchathai Thoovuthal Yen?
வணக்கம்! திருமணத்தினை போது அட்சதை தூவி மணமக்களை வாழ்த்துவது என்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்ற சம்பிரதாயம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விசயம்தான். இருப்பினும் ஏன் இம்முறை கடைபிடிக்கப்படுகிறது என்று யோசித்தீர்களா? அதில் மறைந்துள்ள அர்த்தம் பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த கேள்விகளுக்கான விடையினைதான் இப்பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்!
திருமணம் என்றால் என்ன?
திருமணம் என்பது ஆண், பெண் மட்டும் இணைவதில்லை இரு குடும்பங்களும் இணைவதும்தான் திருமணம்.
ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு தங்கள் இல்லற வாழ்க்கையை தொடங்குவதற்காக பெற்றோர்கள், உறவினர்கள், பெரியவர்கள், நண்பர்கள் முன்னிலையில் செய்துக்கொள்ளும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தமாகும்.
திருமண தம்பதிகள் மன ஒற்றுமையுடன் சந்தோசமாக வாழ வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் திருமணமானது நடத்தப்படுகிறது. திருமணத்தினை ஆயிரம் காலத்து பயிர் என்றும் குறிப்பிடுகின்றனர்.
மேலும் ஒரு பயனுள்ள தகவல் => திருமண மோதிரத்தை இடது கையில் அணிவதன் ரகசியம் தெரியுமா..?
திருமணத்தின் போது ஏலக்காய், சாதிக்காய், கிராம்பு, கற்பூரம், வெற்றிலை, சந்தனம், மஞ்சள், உளுந்து, நெல், உப்பு போன்ற மங்கல பொருட்கள் மற்றும் நறுமண பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றனர். அவற்றுள் அரிசி, நெய், மஞ்சள் கலந்ததுதான் அட்சதை எனப்படும்.
அட்சதை தூவி மணமக்களை வாழ்த்துவது ஏன்?
திருமணத்தின் போது மணமக்களை பெரியவர்கள் அட்சதை தூவி வாழ்த்துகின்றனர். திருமணம் மட்டுமல்ல நிச்சயதார்த்தம், வளைகாப்பு போன்ற நம் வீட்டில் நடக்கின்ற அனைத்து சுபநிகழ்ச்சிகளிலும் பெரியவர்கள் அட்சதை தூவிதான் வாழ்த்துகின்றனர்.
மேலும் ஒரு பயனுள்ள தகவல் => எத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்?
அட்சதை என்றால் என்ன?
அட்சதையில் அரிசி, நெய், மஞ்சள் மூன்றும் சேர்ந்து கலந்திருக்கும். இவை மூன்றும் சேர்வதற்கான காரணம் இருக்கிறது. இதில் ஒளிந்துள்ள உண்மை உங்களுக்கு தெரியுமா?
அது என்னவென்றால் ,
அரிசி என்பது பூமிக்கு மேல் விளைவது,
மஞ்சள் என்பது பூமிக்கு கீழ் விளைவது, இவை இரண்டையும் இணைக்கும் பாலமாக பசு நெய் உள்ளது.
அரிசியும் மஞ்சளும் எப்படி வெவ்வேறு சூழ்நிலைகளில் விளைந்தாலும் பசு நெய்யால் இணைக்கப்படுகிறது. அது போலத்தான் மணமகன், மணமகள் இருவரும் வெவ்வேறு சூழ்நிலையில் வாழ்ந்திருந்தாலும் திருமணபந்தத்தின் மூலம் ஒன்றிணைப்படுகின்றன என்ற அருமையான தத்துவத்தை நமக்கு உணர்த்துகின்றது.
அரிசிக்கு – சந்திர சக்தி அதிகம்
மஞ்சளுக்கு – குருபகவானின் சக்தி அதிகம்
பசு நெய்யிற்கு – மஹாலட்சுமியின் சக்தி அதிகம்
இவற்றை கலந்து ஆசிர்வதிப்பதன் மூலம் ஆசிர்வாதம் பெறுகின்ற மணமக்களின் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை ஆகும்.
மேலும் ஒரு பயனுள்ள தகவல் => கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்வது ஏன்..?
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |