பற்கள் வகைகள் | Types of Teeth in Tamil

Types Of Teeth in Tamil

பற்களின் பெயர்கள் | Teeth Names in Tamil

நம் உடம்பில் நாம் அதிகம் பயன்படுத்தும் பகுதிகளில் மிகவும் முக்கியமானது பல். பற்கள் நமக்கு உணவுகளை மெல்லுவதற்கு, சாப்பிடுவதற்கு என பல வகைகளிலும் பயன்பட்டு வருகிறது. அனைத்திற்கும் பயன்பட்டு வரும் பற்களின் பெயர்களை தெரிந்து வைத்து கொள்வது அவசியம் அல்லவா? அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் பற்களின் பெயர்களை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.

பற்களின் பெயர்கள் – Human Teeth Names in Tamil:

 1. நம் வாயில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பற்களும் வெவ்வேறு வடிவத்திலும், வெவ்வேறு செயல்பாட்டுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மனிதர்களுக்கு (Adult) மொத்தம் 32 பல் இருக்கும்.
 2. வெட்டுப்பற்கள் – நான்கு
 3. கோரை பற்கள் – இரண்டு
 4. முன்கடைவாய் பற்கள் – நான்கு
 5. கடைவாய் பற்கள் – ஆறு
 6. மேல்தாடையில் உள்ள பல், கீழ்தாடையில் உள்ள பல் சேர்த்து மொத்தம் 32 பல் இருக்கும்.

பற்கள் வகைகள் – Types of Teeth in Tamil:

பற்கள் இரண்டு வகைப்படும், அவை:

 • மேல்தாடை பற்கள்
 • கீழ்த்தாடை பற்கள்

மேல்தாடை பற்கள் – Types of Teeth in Tamil:

 • மேல்தாடையில் முன் பகுதியில் இருக்கக்கூடிய நான்கு பற்களும் வெட்டுப்பற்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த பல் 6 வயது முதல் 7 வயதுக்குள் (பால் பற்கள்) விழுந்து புதிதாக முளைக்கும்.
 • வெட்டுப்பற்களுக்கு அடுத்து இருக்கக்கூடிய பல் சிங்கப்பல் அல்லது கோரை பற்கள் என்று அழைக்கப்படுகிறது. கோரைப்பல் 12 முதல் 13 வயதுக்குள் முளைக்க ஆரம்பிக்கும்.
 • கோரை பற்களுக்கு பிறகு இருக்கும் இரண்டு பற்கள் முன்கடைவாய் பற்கள் ஆகும். முன்கடைவாய் பற்கள் மொத்தம் நான்கு (Right Side 2, Left Side 2). வெட்டுப்பற்கள் போலவே முன்கடைவாய் பற்களும் 6 முதல் 7 வயதுக்குள் முளைத்துவிடும்.
 • அதன் பிறகு இருக்கும் பற்கள் கடைவாய் பற்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை மொத்தம் ஆறு (Right Side 3, Left Side 3). இந்த பல் 11 முதல் 12 வயதுக்குள் வளர ஆரம்பிக்கும்.
 • இந்த கடைவாய் பற்களில் கடைசியாக வளரக்கூடிய பல் அறிவுப்பல் அல்லது ஞானப்பல் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஞானப்பல் 18 முதல் 25 வயதுக்குள் முளைக்கும். அறிவுப்பல் ஒரு மனிதன் அறிவை பெறுவதற்காக முளைக்கும் என்பது முன்னோர்களின் கூற்று.
 • ஞானப்பல் இப்பொழுது அனைவருக்கும் வளருவதில்லை. அப்படியே வளர்ந்தாலும் அது ஈறுகளை விட்டு வெளியே வராமல் இருக்கும். இதனால் பல் துலக்கும் போது சரியாக பல்லை தூய்மை செய்ய முடியாமல் தொற்று ஏற்பட்டு பல்லை பிடுங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.

கீழ்த்தாடை பற்கள் – Types of Teeth in Tamil:

 • மேல்தாடையில் உள்ள பற்கள் போலவே கீழ் தாடையில் உள்ள பற்களும் காணப்படும். முன் பகுதியில் உள்ள நான்கு பற்கள் வெட்டுப்பற்கள். முதலில் விழுந்து முளைக்கக்கூடிய முதல் பல் இந்த வெட்டுப்பற்கள் ஆகும் (6-7 வயது)
 • அதன் பிறகு இருக்கும் பல் கோரைப்பல் (12-13 வயது), அடுத்து இருக்கும் இரண்டு பற்கள் முன்கடைவாய் பற்கள் (6-7 வயது)
 • அதற்கு அடுத்து இருக்கும் ஆறு பற்களும் கடைவாய் பற்கள் (11-12 வயது), இறுதியாக வளரக்கூடிய பல் அறிவுப்பல் (18-25 வயது)

குழந்தைக்கு பல் எப்போது வளரும் – Types of Teeth in Tamil

 • குழந்தைக்கு ஐந்து மாதம் இருக்கும் போது பல் வளர ஆரம்பிக்கும், மூன்று வயதுக்குள் பல் முழுமையாக வளர்ந்து இருக்கும்.
 • வெட்டுப்பற்கள் – நான்கு
 • கோரைப்பல் – இரண்டு
 • கடைவாய்ப்பற்கள் – நான்கு
 • குழந்தைக்கு மேல்தாடையில் உள்ள பல், கீழ்தாடையில் உள்ள பல் சேர்த்து மொத்தம் இருபது பல் இருக்கும்.

கடைசியாக முளைக்கும் பல் – பற்கள் வகைகள்:

அறிவுப்பல் அல்லது ஞானப்பல் கடைசியாக வளரும்.

பல் ஈறு பலம் பெற
பல் கூச்சம் நீங்க

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com