உயில் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்..!

Uyil Meaning in Tamil

உயில் பற்றிய தகவல்கள் | Uyil Meaning in Tamil..!

வணக்கம் பொதுநலம்.காம் பதிவின் அன்பான நேயர்களே… இன்றைய பதிவில் உயில் என்றால் என்ன..? உயில் பற்றிய முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள போகிறோம். உயில் என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா..?

ஒருவர்  இறக்கும் முன் அவர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தையும் தனக்கு உரிமையானவர்களுக்கு கொடுப்பதற்காக எழுதப்பட்டது தான் உயில். தன்னுடைய விருப்பத்தை எழுத்து வடிவத்தில் எழுதுவது தான் உயில் சாசனம். மேலும், உயில் பற்றிய தகவல்களை இந்த பதிவின் தெரிந்து கொள்ளலாம் வாங்க…

இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ உயில் எழுதி வைப்பது எப்படி?

உயில் என்றால் என்ன..? 

உயில் என்பது தன்னிடம் இருக்கும் சொத்தை தன்னுடைய இறப்பிற்கு பின் தன்னுடைய விருப்பத்தோடு யாருக்கு உரிமை இருக்கிறதோ அவர்களின் பெயரில் மொத்த சொத்துக்களையும் எழுதுவது தான் உயில்.

இருப்பது கையளவு சொத்தாக இருந்தாலும் அதை யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை இறக்கும் முன் எழுதுவது தான் உயில் சாசனம். உயிலை மரண சாசனம் என்றும் கூறலாம்.

அதாவது, தனது வாழ்நாளுக்கு பிறகு தன்னுடைய சொத்துக்கள் யாருக்கு சேர வேண்டும் என்பதை குறிப்பிடும் நோக்கம் தான் உயில். ஒருவர் இறந்ததற்கு பின் அவருடைய சொத்துக்கள் பிரிவினை காரணமாக பல சண்டைகள் மற்றும் பல வழக்குகள்  ஏற்படுகிறது.

அதுபோன்ற எந்த ஒரு பிரச்சனைகளும் வராமல் இருப்பதற்காக இறக்கும் முன்னரே சொத்துக்கள் அனைத்தையும் உயிலாக எழுதி வைப்பார்கள். இப்படி உயில் எழுதுவதால் குடும்பத்தில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுக்கலாம்.

இந்த உயில் எழுதும் சட்டமானது 1956 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

மரண சாசனம் பற்றிய தகவல்கள்:

  1. உயில் எழுதுபவர்கள் தனது சொத்துக்களை பெற்ற பிள்ளைகளுக்கு மட்டுமின்றி அவர் விருப்பப்படி எதாவது  நிறுவனத்திற்கும் அல்லது அறக்கட்டளைகளுக்கும் எதற்கு வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம்.
  2. உயிலை பதிவு செய்வது என்பது கட்டாயமில்லை.
  3. உயிலை பதிவு செய்யும் போது 2 சாட்சிகளுடன் சார்பதிவாளர் முன்னிலையில் பதிவு செய்தால் அதற்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடைத்து விடும்.
  4. உயிலின் நம்பிக்கை  தன்மைக்காக 2 சாட்சிகள் தேவை. உயிலின் ஒவ்வொரு பக்கத்திலும் உயில் எழுதியவரின் கையெழுத்து இருக்க வேண்டும்.
  5. உயில் எழுதியவரின் வாரிசுகள் மற்றும் சொந்தங்கள் சாட்சிகளாக இருக்க கூடாது.
  6. ஒருவர் எத்தனை உயில் வேண்டுமானாலும் எழுதலாம். ஒருவர் மனநிலை சரியில்லாத நிலையில் எழுதிய உயில் சட்டப்படி செல்லு படி ஆகாது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil