வைகறைப் பொழுது எந்த காலம் எனப்படும்?

Advertisement

வைகறைப் பொழுது எந்த காலம் – Vaikarai Poluthu Enbathu

வணக்கம் நபர்களே.. இன்றைய பதிவில் வைகறைப் பொழுது எந்த காலம் எனப்படும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம். பொதுவாக காலை, மதியம், மாலை, இரவு என்று மேலூம் சில காலங்கள் இருக்கிறது. அந்த வகையில் வைகறை பொழுதும் ஒரு காலமாக கருதப்படுகிறது. இந்த காலம் எந்த நீரால் வரும் என்பதை பற்றி இப்பொழுது நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

வைகறைப் பொழுது எந்த காலம் எனப்படும்?

விடை: விடியற் காலை அல்லது அதிகாலை

வைகறை (Dawn) அல்லது விடியற் காலை சூரியன் உதயத்திற்கு முன் ஏற்படும் மெல்லொளிக்கு முன்னான நேரமாகும். இக்காலம் முன் சூரியோதய சந்தியொளி அல்லது சூரியோதய காலம் எனவும் அழைக்கப்படும். இது சூரிய ஒளியின் மெல்லிய ஒளியாக, சந்தியொளியின் ஆரம்பமாக அடையாளப்படுத்தப்படுகிறது. இவ்வேளையில் சூரியன் அடிவானத்தின் கீழ் இருக்கும்.

டெலிவக் சொல்ல வேண்டும் என்றால் கதிரவன் கிழக்கே எழத்தொடங்கும் சிறுகாலைப் பொழுது. பொழுது விடியத் தொடங்கும் காலம் (பொழுது=கதிரவன்). அதிகாலைப் பொழுது ஆகும்.

இத்தகைய காலைப் பொழுது மிகவும் ரம்மியமாய் இருக்கும். அதிகாலையில் எழுந்துகொள்வது கஷ்டம். ஆனால் எழுந்துகொண்டால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிவரை பிரம்ம முகூர்த்த நேரம் என்பார்கள். அந்த நேரம் செய்யும் பிரார்த்தனைகள், ஜப, தவங்கள், உடலுக்கு சக்தி அளிக்கும் உடற்பயிற்சிகள் என்று எல்லாமே நன்மை பயக்கும்.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement