வல்லினம் மெல்லினம் இடையினம் என்றால் என்ன?

Advertisement

வல்லினம் மெல்லினம் இடையினம் எழுத்துக்கள் யாவை? Vallinam Mellinam Idaiyinam in Tamil 

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் வல்லினம், மெல்லினம், இடையினம் என்ன என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளுவோம். இலக்கணத்தில் பகுபத உறுப்பிலக்கணம், தமிழ் இலக்கணம் இது போன்ற பல இலக்கண வகைகள் உள்ளன. தமிழில் சுலபமாக கற்றுக்கொள்ள கூடிய ஒரு பகுதி எதுவென்றால் அது இலக்கணம் பகுதி தான். இலக்கணமானது அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் பயன்படக்கூடிய ஒன்றாகும். சரி வாங்க நண்பர்களே வல்லினம் மெல்லினம் இடையினம் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்.

குற்றியலுகரம் என்றால் என்ன?

வல்லினம் மெல்லினம் இடையினம்:

வல்லினம் பிறப்மிடமாகிய மார்பிற்கும், மெல்லினம் பிறப்மிடமாகிய மூக்கிற்கும் இடையிடமாகிய கழுத்தினின்று பிறப்பதால் இடையினம் என்று பெயர் பெற்றது.

வல்லினம்  க ச ட த ப ற
மெல்லினம்  ங ஞ ண ந ம ன
இடையினம்  ய ர ல வ ழ ள

வல்லினம்: 

வல்லினம் என்பது க ச ட த ப ற. இந்த ஆறு எழுத்துக்களும் வல்லின எழுத்தென்றும், வன்மையாக ஒலிக்கின்ற வருக்கமென்றும், வலி, வன்மை, வன் கணம் என்றும் பெயர் பெறும்.

மெல்லினம்:

மெல்லினம் ங ஞ ண ந ம ன. இந்த ஆறு எழுத்துக்களும் மெல்லின எழுத்தென்றும், மென்மையாக ஒலிக்கின்ற வருக்கமென்றும், மெலி, மென்மை, மென் கணம் என்றும் பெயர் பெறும்.

இடையினம்:

இடையினம் ய ர ல வ ழ ள. இந்த ஆறு எழுத்துக்களும் இடையின எழுத்தென்றும், வல்லின மெல்லினங்கட்கு நடுத்தரமாக ஒலிக்கின்ற வருக்கமென்றும், இடை, இடைமை, இடைக்கணம் என்றும் பெயர் பெறும்.

பகுபத உறுப்பிலக்கணம்

மெய் எழுத்து பிரிவு:

 Vallinam Mellinam Idaiyinam

வல்லின மெய் க் ச் ட் த் ப் ற்
மெல்லின மெய் ங் ஞ் ண் ந் ம் ன்
இடையின மெய் ய் ர் ல் வ் ழ் ள்

வல்லின எழுத்துக்கள் என்றால் என்ன?

மெய் எழுத்துகளில் வன்மையாக ஒலிக்கும் எழுத்துக்கள்.

மெல்லின எழுத்துக்கள் என்றால் என்ன?

மெய் எழுத்துகளில் மென்மையாக ஒலிக்கும் எழுத்துக்கள்.

இடையின எழுத்துக்கள் என்றால் என்ன?

மெய் எழுத்துகளில் வன்மைக்கும் மென்மைக்கும் இடையில் ஒலிக்கும் எழுத்துக்கள்.

க,ச,ட,த,ப,ற ஆகிய வல்லின எழுத்துகளை மட்டுமே கொண்டுள்ள பாடல்:

கடுகடு காடு; கிடக்குது கோடு;
படபடப் போடுகூப் பாடு! – திடுக்திடுக்!
செப்பக் கடிது; சிடுக்கு தடுக்குது
தப்பச் சிறுபாதை தேடு!

ங, ஞ, ந, ண, ம, ன ஆகிய மெல்லின எழுத்துகளை மட்டுமே கொண்டுள்ள பாடல்:

மான்நீ! மணிநீ! மனமும்நீ! மண்ணும்நீ!
நான்நீ! நமனும்நீ! ஞானம்நீ – மீன்நீ
நனிமோனம் நன்னும்நீ நாணுமினம். மௌன
மினிமின்னும்! மானம்நீ மா!

ய,ர,ல,வ,ழ,ள ஆகிய இடையின எழுத்துகளை மட்டுமே கொண்டுள்ள பாடல்:

வல்லவ ரல்லார் வளையாரா? வாயவிழ
வில்லவரே! வாயாரை வேல்விழியால் – வெல்லுவீ
ருள்ளவரில் வாழ்வுளா ரில்லவரே! யாழுளா
ரள்ளுவ ருள்ளவரை! யார்?

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement