வீட்டு வாடகை ஒப்பந்த பத்திரம் | Veetu Vadagai Oppantha Pathiram Format Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய பதிவில் வாடகை வீட்டிற்கான ஒப்பந்த பத்திரம் எப்படி எழுதுவது என்று பார்க்கலாம். வீட்டின் ஓனர் வாடகைதாரருக்கு வீட்டினை ஒப்படைக்கும் போது சில விதிமுறைகளை கூறுவார்கள். ஒரு சிலருக்கு இன்றும் எந்த விதமான பத்திரங்களையும் எழுத தெரியவில்லை. நமது பொதுநலம் பதிவில் பல ஒப்பந்த பத்திரம் மாதிரிகளை பதிவிட்டுள்ளோம். அவற்றை படித்து அது மாதிரியான பத்திரத்தை நீங்களே சுயமாக எழுதலாம். சரி வாங்க இந்த பதிவில் வாடகை வீட்டிற்கான ஒப்பந்த பத்திர மாதிரியினை எப்படி எழுதலாம் என்று தெரிந்துக்கொள்ளலாம்..
காவல்துறை புகார் கடிதம் மாதிரி |
வீட்டு உரிமையாளர் கூறும் நிபந்தனை:
வாடகை வீடு என்று எடுத்துக்கொண்டாலே வாடகைக்கு குடி போகும் நம்மிடம் அந்த வீட்டின் உரிமையாளர் முதலில் கூறுவது வீட்டிற்கான அட்வான்ஸை முதலில் செலுத்த வேண்டும் என்று ரூல்ஸ் போடுவார்கள்.
அடுத்ததாக மாதம் மாதம் சரியான வீட்டு வாடகை, மின்சார வரி தொகை, தண்ணீர் வரி போன்றவற்றிற்கு சரியான தொகையை கட்ட வேண்டும் என்று முதலிலே நிபந்தனை போட்டு விடுவார்கள். சரி வாங்க வீட்டின் உரிமையாளர் வைத்திருக்கும் ஒப்பந்த பத்திர மாதிரியில் இருக்கும் விவரங்களை படித்து தெரிந்துக்கொள்ளலாம்..
வீடு வாடகை ஒப்பந்த பத்திரம்:
வாடகை வீட்டிற்கு செல்லும் போது அந்த வீட்டின் உரிமையாளர் கண்டிப்பாக ஒப்பந்த படிவம் வைத்திருப்பார்.
அந்த படிவத்தில் சில விவரங்களை உள்ளீட்டிருப்பார் வீட்டின் உரிமையாளர்.
- வாடகை வீட்டின் ஒப்பந்த படிவத்தில் வாடகைக்கு குடியிருப்பவரின் பெயர், அவர்களுடைய வயது, அந்த வீட்டில் அவர்களுடன் எத்தனை பேர் வசிக்க போகிறார்கள், அவர்களுடைய முகவரி சான்று, ஏதேனும் ஒரு Proof கேட்டிருப்பார்கள்.
- வீட்டில் எத்தனை மாதம் வசிக்க போகிறீர்கள்
- முன்பணம் (அட்வான்ஸ்)
- மாத வாடகை தொகை
- வாடகைதாரரின் கையொப்பம்
இந்த 5 விவரங்களையும் அந்த ஒப்பந்த படிவத்தில் வீட்டு உரிமையாளர் போட்டு இருப்பார். இதற்கெல்லாம் சரியென்று பதில் அளித்துவிட்டு வாடகைதாரர் கையெழுத்து போட வேண்டும்.
மின்சாரம் புகார் கடிதம் மாதிரி | EB Complaint Letter Format in Tamil |
குறிப்பாக இந்த ஒப்பந்த படிவமானது 11 மாத காலத்திற்கு மட்டுமே இருக்கும். ஒருவேளை நீங்கள் 11 மாதத்தை கடந்தும் அந்த வீட்டில் வசிக்க நேர்ந்தால் அந்த இடத்தில் மீண்டும் இருக்கலாம்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |