விக்கல் வந்தால் என்ன அர்த்தம்
பொதுவாக மனிதனுக்கு விக்கல், தும்மல், கொட்டாவி வருவதெல்லாம் இயற்கை. விக்கல் சாதாரணமாக சாப்பிடுவதற்கு முன் அல்லது சாப்பிட்டு கொண்டிருக்கும் போது வரும். விக்கல் எதனால் வருகிறது என்று ஒரு நாளாவது யோசித்திருக்கீர்களா.! ஏன் அதெல்லாம் யோசிக்கிறோம். விக்கல் வந்தால் தண்ணீர் குடித்து அந்த பிரச்சனையை செய்வதில் தான் ஆர்வம் இருக்கும். நீங்கள் விக்கல் எதனால் வருகிறது என்று தெரிந்தால் அதனை மறுபடியும் வராமல் பார்த்து கொள்ளலாம் அல்லவா.!
விக்கல் எதனால் வருகிறது.?
நாம் சுவாசிக்கும் போது காற்றை உள்இழுக்கும் போது மார்பு தசைகள் விரிகின்றன. மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் நுரையீரலை ஒட்டியுள்ள உதரவிதானம் விரிகிறது. அப்போது குரல்நாண்கள் திறக்கப்படும். இந்த நிலையில் நுரையீரலில் காற்றின் வேகம் குறைகிறது. அதுமட்டுமில்லாமல் நுரையீரலுக்குள் காற்று செல்ல அதிக இடமும் கிடைக்கிறது. இதனால் சுவாசிக்கும் காற்று, திறந்த குரல்நாண்கள் வழியாகத் தங்கு தடையின்றி நுரையீரல்களுக்குள் செல்கிறது. இது இயல்பாக நடக்க கூடியது. அதுவே சில நேரங்களில் உதரவிதானம் சுருங்க ஆரம்பிக்கும். அப்போது குரல்நாண்கள் சரியாகத் திறப்பதில்லை. மேலும் நாம் சுவாசிக்கும் காற்று குரல்நாண்களின் குறுகிய இடைவெளி வழியாகத்தான் நுரையீரல்களுக்குள் சென்று திரும்ப வேண்டும். இந்த காற்று செல்லும் போது தடை ஏற்படுவதனால் தான் விக்கல் ஏற்படுகிறது.இதையும் படியுங்கள் ⇒ குழந்தையின் விக்கல் நிற்க இப்படி செய்யுங்கள்..!
விக்கல் வர காரணம்:
உணவை வேகமாக சாப்பிடும் போது உணவோடு காற்றும் சேர்த்து செல்கிறது. அப்போது வயிறு விரிவடைவதால் உதரவிதானம் பாதிக்கப்பட்டு விக்கல் ஏற்படும்.
அதிகம் காரமுள்ள உணவுகள், சூடான உணவுகள், புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற காரணங்கலாளும் விக்கல் ஏற்படும். சில நபர்களுக்கு சந்தோசம் படும் போதும், பயப்படும் போது விக்கல் ஏற்படும்.
தொடர் விக்கல் வர காரணம்:
விக்கல் தொடர்ந்து வருகிறது என்றால் அது நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம். கல்லீரல் கோளாறு, சிறுநீரகக் கோளாறு, இரைப்பைப் புண், மூளைக் காய்ச்சல், நுரையீரல் நோய்த்தொற்று, குடல் அடைப்பு, கணைய அழற்சி போன்ற நோய்கள் இருப்பவர்களுக்கும் அடிக்கடி விக்கல் வரும். விக்கல் சில நிமிடங்களில் நின்று போனால் கவலை இல்லை. தொடர்ந்து வந்தால், உடனடியாக மருத்துவரை ஆலோசித்து சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம்.
விக்கல் நிற்க என்ன செய்ய வேண்டும்:
விக்கல் வரும் போது மூச்சை உள்ளிழுத்து 20 நிமிடம் வரை அடக்கி கொண்டு பிறகு மூச்சை விடுங்கள். இது போல் செய்தால் விக்கல் நின்று விடும்.
விக்கல் வரும் போது குளிர்ந்த நீரை குடிக்க வேண்டும்.
ஒரு பேப்பர் பை எடுத்து அதை வாயில் வைத்து மூச்சை விட்டு மறுபடியும் அதிலே சுவாசிக்க வேண்டும். இப்படி செய்வதினால் கார்பன்டை ஆக்ஸைடு அதிகரித்து விக்கல் நின்றுவிடும்.
இதையும் படியுங்கள் ⇒ கொட்டாவி ஏன் வருகிறது காரணம் தெரியுமா..?
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |