Walnut in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றி தான் பார்க்கப்போகிறேன். அது என்ன தகவல் என்று யோசித்து கொண்டிருக்கிறீர்களா..? ரொம்ப யோசிக்க வேண்டாம். இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். நீங்கள் யோசித்ததற்கான விடை கிடைத்துவிடும். பொதுவாக பாதாம், பிஸ்தா போன்ற ஊட்டச்சத்து நிறைந்த பருப்பு வகைகளில் இதுவும் ஓன்று. அதாவது வால்நட்டை பற்றி தான் கூறுகிறேன். வால்நட் நம்மில் பலரும் சாப்பிட்டு இருப்போம். அந்த வகையில் இன்று வால்நட் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
வால்நட் பற்றிய தகவல்கள்..!
வால்நட் (Walnut) என்பது தமிழில் வாதுமை கொட்டை என்று அழைக்கப்படுகிறது. இது யக்லான்சு பேரினத்தில் அடங்கியுள்ள யக்லாண்டசியே குடும்பத்தைச் சேர்ந்த யக்லான்சு ரெஜியா மரத்தின் கொட்டையாகும். இது மேலோட்டுடன் கூடிய பருப்பு வகைகளில் ஓன்று.
பச்சையான கொட்டைகள் ஊறுகாய் தயாரிக்கவும் நன்கு விளைந்த கொட்டைகள் உணவாகவும் பயன்படுகின்றன. யக்லான்சு நைக்கிரா மரத்திலிருந்து பெறப்படுகின்ற கிழக்கத்திய கருப்பு வாதுமைக் கொட்டையானது வர்த்தகரீதியாக மிகவும் குறைவாகவே கிடைக்கிறது.
👉அதிமதுரத்தை பயன்படுத்தும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்
பைசண்டைன் காலத்தில் வால்நட் “ராயல் நட்” என்ற பெயரில் அழைக்கப்பட்டது. ஸ்பெயினில் வால்நட் மரம் வளர்ப்பு பற்றிய கட்டுரை இபின் அல்-அவ்வாமின் 12 ஆம் நூற்றாண்டு விவசாயம் பற்றிய புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. வால்நட் முதலில் வெல்ஷ் நட் என்றும் அழைக்கப்பட்டது.
வால்நட்டின் பண்புகள்:
வால்நட் பருப்பானது, நன்கு பழுத்த பின்பு உண்ணத் தகுந்த, ஒற்றை விதையினைக் கொண்ட வட்ட வடிவக் கொட்டையாகும். இது முற்றிலும் பழுத்த பின்பு பழத்தின் சுருக்கம் நிறைந்த மேல்புறத்தோல் கழன்று, இரு பிரிவுடைய மேலோட்டுடன் வாதுமைக் கொட்டையானது வெளிப்படும். இதை தான் நாம் வால்நட் என்று சொல்கிறோம்.
Red ஆப்பிள் பார்த்திருக்கிறேன் அதென்ன Green ஆப்பிள்.. வாங்க தெரிந்து கொள்வோம் |
வால்நட் மரங்களின் இலைகள் வளர தாமதமாகின்றன. பொதுவாக வசந்த காலத்தில் பாதிக்கு மேல் இலைகளை விடாது. போட்டியிடும் தாவரங்கள் வளர்வதைத் தடுக்க அவை ரசாயனங்களை மண்ணில் வெளியிடுகின்றன. அதாவது இவை ஒரு வகையான வேதிப் பொருளை மண்ணுக்குள் சுரக்கின்றன. எனவே எளிதில் பாதிக்கப்படக்கூடிய தாவரங்களை வால்நட் மரங்களுக்கு அருகில் நடக்கூடாது.
மேலும் இது பல்வேறு ஊட்டச்சத்து நன்மைகளை கொண்டுள்ளது. அதை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 தினமும் 5 வால்நட் சாப்பிடுவதனால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா
சங்கு பூவை பார்த்திருக்கிறீர்களா.. அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள் |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |