இந்த 10 விஷயங்களை தப்பி தவறியும் யாரிடமும் கூறாதீர்கள்..!

Advertisement

யாரிடமும் சொல்லக்கூடாத 10 விஷயங்கள் என்ன..?

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்க போவது என்னவென்றால் நமது வாழ்க்கையில் யாரிடமும் சொல்லக்கூடாத 10 விஷயங்கள் என்ன..? என்பதை பற்றித்தான். அப்படி என்ன 10 விஷயங்களை மற்றவர்களிடம் கூறக்கூடாது என்றுதானே யோசிக்கிறீர்கள்..! இந்த பதிவை முழுதாக படித்தால் உங்களுக்கே புரியும். இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள் சரி வாங்க பதிவினுள் செல்லலாம்.

யாரிடமும் கூறக்கூடாத 10 விஷயங்கள்:

மனிதர்களாக பிறந்த நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் நிறைய விஷயங்களை நமது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பகிர்ந்து கொள்கின்றோம் அப்படி பகிர்ந்துகொள்ளும் அனைவரும் நமது நன்மைகளை பற்றி மட்டும் யோசிப்பார்கள் என்று கூறிவிட முடியாது.

அதனால் தான் யாரிடம் எந்த விஷயங்களை கூறலாம், யாரிடம் எந்த விஷயங்களை கூறக்கூடாது என்று ஆராய்ந்து பேசவேண்டும். அப்படி அறிந்து பேசுவதால் நமது வாழ்க்கையில் எந்தவித புதிய குழப்பங்களும் வராது.

அப்படி எந்த எந்த விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்ளக்கூடாது என்று பார்ப்போம்.

முதலாவதாக மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்ளக்கூடாத விஷயம் என்னவென்றால் நமது வெற்றியின் இரகசியத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது.ஏனென்றால் நமது வெற்றியின் இரகசியத்தை தெரிந்துக் கொண்டவர்கள் அவர்களின் வாழ்க்கையில் அதனை பயன்படுத்தி பார்க்கலாம் என்று யோசித்து  பார்ப்பார்கள். அப்படி அவர்களுக்கு அந்த இரகசியம் வெற்றிபெறவில்லை என்றால் நமது மீதே பழிசுமத்துவார்கள். அதனால்தான் நமது வெற்றியின் இரகசியத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது.

அடுத்து நமது வாழ்க்கையில் உள்ள எந்தவித பிரச்சனைகளை பற்றியும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது. ஏனென்றால் நமது பிரச்சனைகள் கேட்கின்ற அனைவரும் நமக்கு நல்லது நடக்கவேண்டும் என்று யோசிக்க மாட்டார்கள். அதனால் நமது வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை பற்றி நமக்கு மிகவும் நெருங்கிய நண்பர்களிடம் மட்டும் பகிர்ந்து கொள்ளவேண்டும்.

அடுத்து நமது வாழ்க்கையில் உள்ள கனவுகள் மற்றும் இலட்சியத்தை பற்றியும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது.

பின்னர் நாம் வாங்கும் சரியான சம்பளத்தை பற்றி யாரிடமும் கூறக்கூடாது. ஏனென்றால் நாம் வாங்கும் சம்பளத்தை பற்றி தெரிந்துக்கொள்ளும் அனைத்து நபர்களும் நம்மை பார்த்து சந்தோஷப்பட்டார்கள்.  மாறாக பொறாமைப்பட்டு நம்மளை பற்றி தவறாக கூற ஆரம்பித்துவிடுவார்கள்.

உங்களுடை குடும்ப பிரச்சனைகளை பற்றியும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். ஏனென்றால் எல்லா குடும்பத்திலும் பிரச்சனை உள்ளது ஆனால் அதை பற்றி மற்றவர்களிடம் கூறுவதால் அந்த பிரச்சனை தீர்ந்தால் பரவாயில்லை மாறாக நமது பிரச்சனை அதிகமாகிவிட்டால் என்ன செய்வது. அதனால் நமது குடும்ப பிரச்சனைகளை பற்றி நாமே பேசி தீர்த்துக்கொள்ளுவது நல்லது .

நமது பலவீனத்தை பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். நமது பலவீனத்தை பற்றி தெரிந்துக்கொள்ளும் நபர்களுக்கு அது பலமாக மாறிவிடும்.

அடுத்து நமது வாழ்க்கையின் வருங்காலம் பற்றிய கனவுகள் மற்றும் திட்டங்களை பற்றியும் யாரிடமும் கூறக்கூடாது.

நமது உறவுகளுக்குள் உள்ள பிரச்சனைகளை பற்றியும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது.

அடுத்து நாம் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை நம்மிடம் உள்ளது என்பதைப் பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது. ஏனென்றால் நாம் உதவிசெய்கிறோம் மற்றவர்களுக்கு தெரியவேண்டும் என்று அவசியம் இல்லை.

கடைசியாக நம்மை நம்பி ஒருவர் ஒரு இரகசியத்தை கூறியிருக்கிறார்கள் என்றால் அதைப்பற்றி கடைசி வரைக்கும் யாரிடமும் தப்பித்தவறி கூட பகிர்ந்து கொள்ளக்கூடாது.

இவைகளேயே நாம் யாரிடமும் பகிர்ந்துக் கொள்ளகூடாத 10 விஷயங்கள் ஆகும்.

ஒவ்வொரு ராசிக்காரர்களிடம் சில வார்த்தைகளை சொல்லி அவர்களை கட்டுப்படுத்தலாம் அது என்னென்ன வார்த்தைகள் என்று தெரிந்துகொள்ளுங்கள்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

Advertisement