வானவில் தோன்ற காரணம் என்ன உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

What Is The Reason For Rainbow in Tamil

வணக்கம் அன்பான நண்பர்களே… இன்றைய பதிவில் நாம் வானவில் தோன்றுவதற்கான காரணத்தை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். வானவில் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இயற்கையின் காரணமாக வானவில் தோன்றுகிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். இந்த வானவில் மழைக் காலங்களில் தான் தோன்றும்.

வானவில் 7 வண்ணங்களை கொண்டு பிரதிபலிக்கிறது. வானவில் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம், ஊதா என ஏழு வண்ணங்களை கொண்டுள்ளது. அந்த வகையில் வானவில் தோன்றுவதற்கான காரணத்தை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது..? 

வானவில் தோன்ற காரணம் என்ன..?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வானவில் என்று சொன்னால் வியந்து பார்ப்பார்கள். வானவில் அடிக்கடி தோன்றுவது கிடையாது. பொதுவாக வானவில் காலை பொழுது அல்லது மாலை பொழுதில் தோன்றுகிறது.வானவில் வட்ட வடிவில் பிரதிபலிக்கிறது.

வான வில்லில் பல வண்ணச் சேர்க்கைகள் ஒன்றின் மீது ஒன்று படர்ந்து காணப்பட்டாலும் நம் கண்களுக்கு VIBGYOR என்று சொல்லக்கூடிய ஏழு வண்ணங்கள் தான் தெளிவாகத் தோன்றும்.

மழை வந்த பின்பு தான் வானவில் தோன்றுகிறது. ஆனால் வானவில் தோன்ற மழை மட்டும் காரணம் இல்லை. பனிமூட்டம், காற்றில் மிதக்கும் கண்ணுக்குப் புலப்படாத சின்னச் சின்ன தூசு, காற்றில் நிறைந்திருக்கும் நீர்த்துளிகள் போன்றவற்றாலும் வானவில் தோன்றுகிறது.

முழு வட்ட வடிவில் தான் வானவில் தோன்றுகிறது. ஆனால் வானவில் நம் கண்களுக்கு வளிமண்டலத்தின் மேற்பகுதியில் இருக்கும் அரை வட்டம் மட்டுமே  தெரிகிறது.

வானவில் என்பது கானல் நீர் போல ஒளிச்சிதறல் மற்றும் எதிரொலித்தல் மூலம் நம் கண்களுக்குத் தெரிகிற ஒரு பிம்பம் தான்.

மழை பொழியும் பொழுது அதில் உள்ள மழை நீர் துளிகள் மீது சூரிய ஒளி பட்டு சிதறடிக்கபடுகிறது. இதானால் தான் வானவில் தோன்றுகிறது.

அதாவது,  சூரிய ஒளியில் இருக்கும் சிகப்பு, மஞ்சள், நீலம் ஆகிய மூன்று நிறங்களும் கலந்து வெள்ளை நிற கதிர்களாக பூமியை வந்து அடைகின்றன. அந்த நேரத்தில் மழை பொழியும் போது கோள வடிவ நீர் துளியின் மீது சூரிய ஓளி படுகிறது. அந்த நேரத்தில் இந்த ஒளியின் காரணமாக வண்ணப்பிரிகை ஏற்பட்டு வானவில் தோன்றுகிறது .

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement