IT (Information Technology) படித்தால் எந்த நாட்டில் வேலை கிடைக்கும் தெரியுமா..?

Advertisement

Information Technology in Tamil

ஹலோ நண்பர்களே..! இன்றைய பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவலை கூற போகிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி. நீங்களும் இந்த பதிவை படித்து முடிக்கும் போது பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டோம் என்ற மனத்திருப்தி இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். பொதுவாக நம்மில் பலருக்கும் இங்கு படித்துவிட்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். இன்னும் சொல்லப்போனால் பலருக்கும் வெளிநாட்டில் வேலைக்கு செல்வது என்பது கனவாகவே இருக்கிறது. அதனால் உங்களுக்கு உதவும் வகையில் இன்று நம் நாட்டில் IT (Information Technology) படித்தால் எந்தெந்த நாட்டில் வேலை கிடைக்கும் என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்..!

என்ன படிப்பு படித்தால் வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா

IT படித்தால் எந்த நாட்டில் வேலை கிடைக்கும்..?

IT படித்தால் எந்த நாட்டில் வேலை கிடைக்கும்

உக்ரைன்:

உக்ரைன் கடல்சார் மென்பொருள் மேம்பாட்டிற்கான சிறந்த நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. உக்ரைனில் 172,000 IT வல்லுநர்கள் மற்றும் 750 -க்கும் மேல் IT சேவை நிறுவனங்கள் உள்ளன. அதனால் IT படித்திருந்தால் வெளிநாடுகளுக்கு செல்ல உக்ரைன் சிறந்ததாக இருக்கும்.

போலந்து: 

தற்போது, ​​போலந்து நாட்டில் 255,000 IT நிபுணர்கள் உள்ளனர். ஆண்டுதோறும் 15,000 மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். அதனால் நம் நாட்டில் IT படித்துவிட்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல விரும்பினால் போலந்து நாட்டிற்கு செல்லலாம். அங்கு உங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

அர்ஜென்டினா:

அர்ஜென்டினா என்ற நாட்டில் 134,000 IT டெவலப்பர்கள் உள்ளனர். 2022 ஆம் ஆண்டில் ஐடி துறையில் பணியாளர்களின் எண்ணிக்கை 111,000 -க்கும் அதிகமாக இருந்தது. அதனால் IT படித்துவிட்டு வேலைக்கு செல்ல நினைத்தால் அர்ஜென்டினா நாடு உங்களுக்கு சிறந்ததாக இருக்கும்.

சிங்கப்பூர் செல்வதற்கு முன்னாடி இதை தெரிந்து கொள்ளுங்கள்

கனடா: 

தற்பொழுது கனடா நாட்டின் தொழில்நுட்பத் துறையில் IT நிபுணர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. Cloud Engineering மற்றும் பிற வகையான Web Developer -களுக்கு நல்ல ஊதியத்துடன் கூடிய வேலைகள் கனடாவில் அதிகமாகவே இருக்கிறது. அதனால் IT வேலைகளுக்கு கனடா சிறந்த நாடாக இருக்கும்.

ஆஸ்திரேலியா: 

ஆஸ்திரேலியா நாட்டில் சாப்ட்வேர் டெவலப்பர் (Software Developer) வேலைகள் ஏராளமாக உள்ளன. Software Developer வேலைவாய்ப்பு 2028 ஆம் ஆண்டுக்குள் 21% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே IT படித்துவிட்டு வேலைக்கு செல்ல நினைத்தால் ஆஸ்திரேலியா உங்களுக்கு சிறந்த நாடாக இருக்கும்.

சிங்கப்பூரில் நம் தமிழ் நாட்டு உணவுகளின் விலை பட்டியல் பற்றி உங்களுக்கு தெரியுமா

சுவிட்சர்லாந்து: 

சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் அதிக நிபுணர்களை கொண்ட சிறந்த நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்று. சுவிட்சர்லாந்து நாட்டில் IT வேலைக்கு எளிதாக லட்சகணக்கில் சம்பாதிக்கலாம். அதனால் சுவிட்சர்லாந்து நாட்டில் உங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

அமெரிக்கா: 

அமெரிக்காவில் உள்ள சிறந்த தொழில்நுட்ப வேலைகளில் மென்பொருள் உருவாக்குநர்கள் 2 வது இடத்தைப் பிடித்துள்ளனர். அமெரிக்க நாட்டில் IT படிப்புக்கு பல்லாயிரக்கணக்கான வேலைகள் இருக்கின்றன. அதனால் இந்த நாடு உங்கள் எதிர்காலத்திற்கு சிறந்ததாக இருக்கும்.

யுகே: 

Software Development தொழில் துறையில் ஒரு பிரபலமான நாடாக UK சிறந்து விளங்குகிறது. 2022 ஆம் ஆண்டுக்குள் மென்பொருள் உருவாக்குநர்களுக்கு UK 16% வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது. அதனால் IT படித்தவர்கள் வேலைக்கு செல்ல UK சிறந்த நாடாக இருக்கும்.

சிங்கப்பூரில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement