மருத்துவர்கள் வெள்ளை நிற ஆடையும், Operation Theatre -யில் பச்சை நிற ஆடையும் அணிய காரணம் என்ன..?

why doctors wear white coat in tamil

மருத்துவர்கள் வெள்ளை கோட்

பொதுவாக ஒவ்வொரு துறையில் பணிபுரிபவர்கள் ஒவ்வொரு நிறத்தில் ஆடை அணிந்திருப்பார்கள். போலீஸ் காக்கி சட்டை அணிந்திருப்பார்கள், வக்கீல் கருப்பு நிற ஆடை அணிந்திருப்பார்கள் அதே போல் மருத்துவர்களும் வெள்ளை நிற கோட் அணிந்திருப்பார்கள். ஆப்ரேஷன் தியேட்டரில் பச்சை நிற ஆடையும் அணித்திருப்பார்கள். இதற்கான காரணத்தை இந்த பதிவின் வாயிலாக படித்து தெரிந்து கொள்வோம்.

வெள்ளை நிற கோட் அணிவதற்கான காரணம்:

why doctors wear green dress in operation theatre in tamil

பொதுவாக வெள்ளை நிறம் தூய்மையை குறிக்கிறது. மருத்துவர்கள் எந்த தீமையும் செய்ய மாட்டோம் என்ற உறுதியை கூறுகிறது. எடுத்துக்காட்டாக இயேசு மற்றும் புனிதர்கள் வெள்ளை நிற கோட்டை தான் அணிவார்கள்.  வெள்ளை நிறம் தூய்மையை வெளிப்படுத்துகிறது. நோய்களை தூய்மைப்படுத்துவதை குறிக்கிறது. மற்றொரு காரணம் அமைதி மற்றும் இரக்க குணத்தின் வெளிப்பாடாகவும் கருதப்படுகிறது. நோயாளிகளின் நேர்மறை எண்ணங்களை அதிகப்படுத்துவதற்காகவும் மருத்துவர்கள் வெள்ளை நிறத்தை அணிகின்றனர். 

இதையும் படியுங்கள் ⇒  வக்கீல்கள் ஏன் Black Coat அணிகிறார்கள் காரணம் தெரியுமா..?

ஆப்ரேஷன் தியேட்டரில் பச்சை நிற ஆடை அணிய காரணம்:

why doctors wear green dress in operation theatre in tamil

அறுவை சிகிச்சை செய்யும் இடத்தில் இரத்தத்தை பார்த்து கொண்டே இருப்பதால் மருத்துவருக்கு மன அழுத்தம் ஏற்படும். இதனை குறைப்பதற்கு பச்சை நிறம் பெரிதும் உதவுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். பச்சை மற்றும் நீல நிற ஆடைகள் இரத்த கறையை  நீக்குவதற்கும் ஈசியாக உள்ளது.

அறுவை சிகிச்சை பல மணி நேரம் இரத்தத்தையே பார்த்து கொண்டிருப்பார்கள் அப்போது அவர்களை புத்துணர்ச்சி செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இரத்தத்தை பார்த்து கொண்டே வெள்ளை நிறத்தை பார்த்தால் அவர்களால் தெளிவாக பார்க்க முடியாது என்பதால் பச்சை நிறம் கொண்டு வரப்பட்டது.

புரியும் படி சொல்ல வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு பல ஆப்ரேஷன் செய்ய வேண்டியிருக்கும். அப்போது இரத்தத்தை பார்த்து விட்டு வெள்ளை நிறத்தை பார்த்தால் தெளிவாக அவர்களால் பார்க்க முடியாது கவனச்சிதறல் ஏற்படும். இந்த நிலையை தவிர்ப்பதற்காக தான் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யும் இடத்தில் பச்சை நிற உடைகளை அணிகின்றனர். 

இதையும் படியுங்கள் ⇒ போலீஸ் ‘காக்கி’ சட்டை அணிய காரணம் என்ன உங்களுக்கு தெரியுமா..?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil