கடவுள் ஏன் கஷ்டங்களை கொடுக்கிறார் தெரியுமா.?

Advertisement

கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே

வணக்கம் நண்பர்களே.! கஷ்டம் வரும்போதெல்லாம் கடவுளை திட்டுவோம். ஏன் இப்படி கஷ்டம் மேல் கஷ்டம் கொடுக்கிறாய் என்ற கேள்வி இருக்கும். ஒருவருக்கு மட்டும் தெடர்ந்து கஷ்டம் மட்டும் வந்து கொண்டே இருந்தால் அவர்கள் மனதை தைரியமாக வைத்து கொள்ள வேண்டும். அது போல அனைவருக்கும் மனதில் ஏன் கடவுள் இப்படி கஷ்டங்களை தந்து கொண்டே இருக்கிறார் என்ற கேள்வி இருக்கும். அதற்கான பதிலாக இந்த பதிவு இருக்கும். இந்த பதிவினை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ உங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் தெரியுமா..!

கடவுள் ஏன் கஷ்டத்தை கொடுக்கிறார்.?

நண்பர்களே நீங்கள் நினைப்பீர்கள் நாம் யாருக்கும் எந்த தீங்குகளையும் நினைக்கவில்லை. எல்லோருக்கும் நன்மைகளை தான் செய்கின்றோம். அப்படி இருந்தும் கடவுள் ஏன் இப்படி கஷ்டங்களை தருகிறார் என்று நினைத்து கவலை படுவீர்கள். இனிமேல் கவலைப்படாதீர்கள்..! ஏன் இப்படி சொல்கிறேன் என்று நினைப்பீர்கள்.! இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கடவுளுக்கு யாரை பிடிக்கின்றதோ அவர்களுக்கு தான் கஷ்டங்களை கொடுப்பார். இது எல்லாம் நம்புகிற மாதிரி இருக்கிறதா என்று கேட்பீர்கள். வாழ்க்கையில் எவன் ஒருவன் கஷ்டங்களையும், சோதனைகளையும் அதிகமாக சந்திக்கின்றானோ அவன் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.

அதுமட்டுமில்லாமல் அவன் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்கும் போது தான் சிந்திக்க தொடங்குகிறான். அந்த பிரச்சனைக்கான தீர்வை சுயமாக சிந்திக்க தொடங்குகிறான்.

அதோடு கஷ்டம் வரும்போதெல்லாம் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை ஞாபக படுத்துகிறது.

நீங்கள் எவ்வளவு பிரச்சனைகளும், சோதனைகளையும் சந்திக்கிறீர்களோ அப்பொழுது தான் வாழ்க்கையை பற்றி புரிந்து கொள்வீர்கள்.

மேலும் கஷ்டம் வரும் போது உங்களின் கூட இருப்பவர்களை பற்றி புரிந்து கொள்ள முடியும்.

ஒருவன் மகிழ்ச்சியாகவே இருந்தால் அவர்கள் வாழ்க்கையின் வெற்றிகளை அடைய முடியாது. எடுத்துக்காட்டாக நீங்கள் வாழ்க்கையில் உங்களின் இலக்குகளை கஷ்டப்படாமல் பெற்றால் அதை முழுவதுமாக அனுபவிக்க முடியாது. அதுவே உங்களின் இலக்குகளை அடைவதற்கு பல கஷ்டங்களை தாண்டி பெற்றால் ஆயுள் முழுவதும் அதை நினைத்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

நீங்கள் வாழ்க்கையில் வெற்றிகளை அடைவதற்கு மட்டுமே கஷ்டங்களை கொடுக்கிறார். இனிமேல் கஷ்டம் வரும் போதெல்லாம் உங்களை பலப்படுத்தி கொள்ளுங்கள். உங்களை பற்றி நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும் கஷ்டங்களை கொடுக்கிறார்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil

 

Advertisement