சேவல் ஏன் அதிகாலையில் கூவுகிறது?

Advertisement

சேவல் ஏன் அதிகாலையில் கூவுகிறது? | Why Does the Rooster Crows in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. நமது பொதுநலம்.காம் பதிவில் பலவகையான ஆச்சர்யமான விஷயங்களை பற்றி பதிவு செய்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது சேவல் ஏன் அதிகாலையில் கூவுகிறது மற்றும் சேவல் பற்றிய சில ஆச்சர்யமான விஷயங்களை பற்றி தான் இன்று நாம் படித்து தெரிந்துகொள்ள போகிறோம். எந்த பறவை இனத்திற்கும் இல்லாதா மிக பெரிய சிறப்பம்சம் இந்த கோழி இனைத்தை சேர்த்த சேவல் கூவுவது தான். சேவலை நமது தமிழ் இலக்கணத்தில் சிவப்பு நிற கொண்டை கொண்ட ஒரு பறவை என்று குறிப்பிடுகின்றன. ஒரு சேவலின் சத்தத்தை அது கூவுகின்ற கம்பீரமான சத்தத்தை வைத்தே கண்டுபிடித்துவிடலாமாம். இது போன்று சேவலை பற்றி நிறைய விஷயங்கள் இருக்கிறது. சரி வாங்க சேவலை பற்றி இன்றைய பதிவில் நாம் படித்தறியலாம்.

சேவல் ஏன் கூவுகிறது?சேவல் ஏன் கூவுகிறது

பொதுவாக சேவல் ஏன் கூவுகிறது என்றால் தன்னுடைய கோழி இனத்திடம் ஆண்மையை வெளிப்படுத்த கூவுகிறதாம். இது மட்டும் இல்லாமல் தனது பெட்டை கோழிகளை வசியம் செய்வதற்கும் இந்த சேவல் கூவுகிறதாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நெயில் பாலிஷை இப்படி தான் வாங்க வேண்டும்.. இல்லையென்றால் பிரச்சனை தான்.!

சேவல் பற்றிய தகவல்கள்:

ஒரு சேவல் கூவும் சத்தமானது கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் வரை கேட்கும் என்று சொல்லப்படுகிறது.

அதுவே அதிகாலையில் ஒரு தரமான சேவல் கூவும் சத்தமானது கிட்டத்தட்ட 5 கிலோ மீட்டர் தொலைவு வரை கேட்கும் என்று சொல்லப்படுகிறது.

சூரியன் உதிக்கும் நேரத்தில் முழிக்கும் ஒரே இனம் இந்த சேவல் இனம் தான்.

இந்த சேவல்கள் கால நிலைக்கு ஏற்றதுபோல் கூவ தொடங்குமாம். பனிக்காலத்தை பொறுத்தவரை ஒரு சேவல் 4-வது மாதத்தில் இருந்து தான் கூவ தொடங்குமாம். அதுவே கோடை காலம் பொறுத்தவரைக்கும் 2 1/2 மாதத்திலேயே கூவ தொடங்குமாம்.

ஒரு சேவல் எப்படி கூவும் என்றால் கால்களை நிமிர்த்தி, தேகத்தை விரைத்து, மார்பை புடைத்து, முடிகள் சிலிர்த்து கொண்டை சிவக்க கொக்கரக்கோ என்று கூவுமாம். இவ்வாறு கூவுவதினால் அதனுடைய இனத்தின் அடையாளம், ஆண்மை, பலம், சினம், குணம் என்று அனைத்தையும் உணர்த்திவிடுகிறதாம்.

சேவல் எப்போது எல்லாம் கூவும்?

கோழிகள் மேச்சலுக்கு செல்லும் போது சேவல் அதனுடைய இனமான 10 பெட்டை கோழிகளுடன் தான் மேயும் அப்படி மேயும் இடத்தில் ஏதாவது ஆபத்து இருந்தால் அதனை தெரிவிப்பதற்கு ஒரு முறை கூவும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெறுவது எப்படி..?

ஒரு பெட்டை கோழி இருக்கும் இடத்தில் ஏதாவது ஆபத்து இருந்தால் அது கத்திகொண்டே இருக்குமாம். அந்த கோழியின் இணை சேவல் அந்த இடத்திற்கு வந்து எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்றால், அங்கு ஆபத்து எதுவும் இல்லை என்பதை உணர்த்த பலமுறை சத்தம் இடுமாம். அந்த சத்தத்திற்கு பெட்டை கோழி சத்தம் இடுவதை நிறுத்தவில்லை என்றால். அந்த சேவல் பலத்த குரலில் ஒரு முறை கூவுமாம். அதன் பிறகு அந்த பெட்டை கோழி அமைதியாகிவிடுமாம்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement