பசித்த வயிறு
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் ஒரு முக்கிய விஷயத்தை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம்..! இந்த கேள்வி அனைவருக்கும் தோன்றிருக்கும் ஆனால் அதற்கான பதில் என்ன என்பது சரியாக தெரியாது. அதனை தேடியும் பார்ப்பதில்லை..! உங்களுக்கும் எப்போதாவது நடந்துள்ளதா? உங்களுக்கு பசி எடுக்கும்போது வயிற்று கற்றுவது..?
அப்படி கத்தும் போது ஏன் அப்படி கத்துகிறது என்று தெரியுமா? அல்லது அதனை பற்றி யோசித்து உள்ளீர்களா? அப்படி யோசித்திருந்தால் இப்போது யோசிக்கலாம் பதிவை தொடர்ந்து படியுங்கள் அதற்கான பதிலை பார்த்து விடுவோம்.!
பசி எடுத்தால் வயிறு கத்துவது எதனால் தெரியுமா?
உங்களுக்கு பசிக்கிறது என்று எப்படி தெரியும்? சிலருக்கு கொஞ்சம் பசி எடுக்கும் போதே பசிக்க ஆரம்பிக்கும். நாம் சாப்பிடுவோம் இல்லையென்றால் அவ்வளவு தான் உங்கள் வயிற்று பக்கத்தில் இருப்பவர்களை விடாது. அந்த சத்தம் அதிகமாக கேட்கும். இதுபோல் உங்களுக்கு நடந்து உள்ளதா?
இப்படி ஏன் சத்தம் வருகிறது என்றால் முதலில் நாம் சாப்பிடும் போது பக் என்ற சத்தம் வரும் அது உடனே வாயிற்குள் செல்லாது உணவு உணவு குழாய்க்குள் செல்லுவது மிகவும் மெதுவாக தான். இப்படி ஏன் செல்கிறது என்றால் உணவு குழாய் சுருங்கி சுருங்கி விரிகிறது அதனால் தான் மெதுவாக செல்லும்.
இப்படி சுருங்கி சுருங்கி விரிவதற்கு பெயர் தான் பெரிஸ்டால்சிஸ் (peristalsis) என்று பெயர். இந்த பெரிஸ்டால்சிஸ் நம்முடைய உணவு குழாய் மட்டுமில்லாமல் குடல் பகுதி வரைக்கும் சுருங்கி சுருங்கி விரியும்.நாம் சாப்பிட்டு முடிந்த பிறகு நம் வயிற்றில் இருக்கக்கூடிய கேஸ்ட்ரிக் ஆசிட் (gastric acid) சிறிது சிறிதாக உணவுகளுடன் கலந்துகொள்ளவும். அதன் பின் அந்த உணவு மிருதுவாக பதத்திற்கு வந்து விடும்.
பிறகு இந்த உணவை செரிமானம் செய்வதற்காக குழலின் மேல் பகுதியில் சுருங்கி விரியும் நிலையை உண்டாக்கும். இப்படி செய்வதால் வயிற்றில் இருக்கக்கூடிய உணவு அனைத்தும் கலந்து சிறுகுடலுக்குள் செல்லும்.
சிறுகுடலுக்குள் சென்ற பின் அங்கும் பெரிஸ்டால்சிஸ் என்று சொல்லக்கூடிய சுருங்கி விரியும் தன்மை செயல்படும். அதன் பின் உடலுக்குள் தேவையான கேட்டதை வெளியே தள்ள உதவி செய்வதும் பெரிஸ்டால்சிஸ் தான்.
தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 சாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது என்று சொல்ல காரணம் என்ன உங்களுக்கு தெரியுமா.? |
இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Interesting information |