வேர்க்கடலையை மட்டும் ஏன் மண்ணுல வருக்குறாங்க தெரியுமா..?

Advertisement

வேர்க்கடலை வறுப்பது எப்படி?

ஹாய் நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவில் சாதாரணமாக யோசித்த விஷயத்தை பற்றி தான் பார்க்க போகிறோம்.பொதுவாக அனைவரும் வேர்க்கடலை சாப்பிடுவோம். வேர்க்கடலை சாப்பிடுவது ஒரு சிலருக்கு பிடிக்கும் ஒரு சிலருக்கு பிடிக்காது, இன்னும் சிலருக்கு வறுத்தால் பிடிக்காது, அவித்தால் பிடிக்காது பச்சையாக சாப்பிட பிடிக்கும்.

உங்களில் யாரவது வேர்க்கடலையை வறுக்கும் முறையை பார்த்து இருக்கிறீர்களா? அப்படி வறுக்கும் போது யோசித்து இருக்கிறீர்களா? ஏன் வேர்க்கடலையை மணலில் போட்டு வருகிறார்கள் என்றால் ? அப்படி யோசித்த அனைவருக்கும் இந்த பதிவை படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..!

வேர்க்கடலையை மட்டும் ஏன் மண்ணுல வருக்குறாங்க தெரியுமா?

வேர்க்கடலையை மணலில் வறுப்பதை பார்த்து இருக்கிறர்களா? அப்படி யோசித்த அனைவருக்கும் இந்த பதிவு உதவியாகத்தான் இருக்கும். வாங்க ஏன் என்று பார்ப்போம்?

வீட்டில் கடாயில் அடுப்பில் வைத்து கடலையை வறுக்கும் போது கடலையானது சரியாக வறுபடாது ஒரு பக்கம் மட்டுமே வறுபடும் மேலும் அதிக நேரம் வறுத்தால் அது கருகி போக வாய்ப்பு உள்ளது.

தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 மழை, வெயில் இரண்டிலும் செல்கிறோம் ஆனால் வெயிலில் சென்றால் மட்டும் மயக்கம் வருவதற்கு காரணம் என்ன 

அதேபோல் அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுத்தால் அதனை கரண்ட்டியில் வதக்கி கொண்டு இருக்க வேண்டும். அதிக நேரம் எடுக்கும் அதேபோல் வேர்க்கடலை உள் பகுதி வரை வேகாமல் இருக்கும். இதை சரி செய்யும் வகையில் தான் மணலில்  போட்டு வேர்க்கடலையை வறுப்பார்கள்.

 மணலில் வறுக்க காரணம் என்னவென்றால் மணலை சட்டியில் போட்டு சூடு செய்யும் போது அது மிகவும் வேகமானாகவே சூடாக மாறி விடும், அதன் மேல் வேர்க்கடலை சேர்த்து வறுக்கும் போது மிகவும் விரைவாகவும் வறுக்க முடியும் எரிபொருளும் குறைவாகத்தான் இருக்கும்.  

இதற்கு காரணம் மணல் தண்ணீரை விட விரைவாகவே சூடாகும், அதாவது மணலுக்கு சிறிதளவு வெப்பம் இருந்தாலே சூடாக மாறிவிடும்.

எடுத்துக்காட்டாக: 

மதிய நேரத்தில் கடற்கரையில் நடந்து போகும் போது மணல் சூடாகவும், தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும் ஆனால் அதே இரவு நேரத்தில் நடந்து போகும் போது மணல் குளிர்ச்சியாக இருக்கும், கடல் நீர் சூடாக இருக்கும். இதே மாதிரி தான் நாம் மணலில் கடலையை வறுக்கும் போதும் நடக்கும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 இருட்டில் சாப்பிட கூடாது ஏன் தெரியுமா..? இதற்கு உண்மை என்ன தெரியுமா..?

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  Interesting information 
Advertisement