லைசென்ஸ் வாங்கும் போது ஏன் 8 போட சொல்கிறார்கள்..? காரணம் தெரியுமா..?

Why We Put 8 For Getting License in Tamil

Why We Put 8 For Getting License in Tamil

நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். நம் அனைவருக்குமே சிறுவயதிலிருந்தே சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதுபோல பெரியவனானதும் பைக், கார் போன்ற வாகனங்கள் சொந்தமாக வாங்கி ஓட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

ஆனால் நாம் வாகனம் ஓட்ட வேண்டும் என்றால், அதற்கு கட்டாயம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அப்படி ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு ஏன் 8 போட வேண்டும் என்று சொல்கிறார்கள். ஏன் அப்படி சொல்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் மூலம் அதை நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

ஓட்டுநர் உரிமம் ஆன்லைனில் பெறுவது எப்படி?

லைசென்ஸ் வாங்கும் போது ஏன் எட்டு போட வேண்டும்..?  

8 poduvathu eppadi in tamil

 

கணிதத்தில் எத்தனையோ எண்கள் இருக்கின்றன. இருந்தாலும் லைசென்ஸ் வாங்கும் போது எதற்காக 8 போட சொல்கிறார்கள், என்ற கேள்விகள் பலருக்கும் இருக்கும். அப்படி உங்களுக்கு இருக்கும் கேள்விக்கான விடையை தான் நாம் இங்கு தெரிந்து கொள்ள போகிறோம்.

8 -யை தவிர 1 லிருந்து 9 வரை இருக்கும் அனைத்து எண்களுக்குமே ஒரு ஆரம்பமும் ஒரு முடிவும் கட்டாயம் இருக்கும். அதாவது உதாரணமாக, 7 என்ற எண்ணை எடுத்து கொள்வோம். அது மேலிருந்து தொடங்கி கீழே முடிந்து விடுகிறது. இதுபோல தான் மற்ற எண்களும் இருக்கின்றன.

ஆனால் 8 அப்படி கிடையாது. 8 ஆரம்பம் தெரிந்தாலும் அதற்கு முடிவு என்பதே கிடையாது. 8 என்ற எண் மட்டும் இடைவிடாது தொடர்ந்து கொண்டே இருக்கும் ஒரு எண் வடிவம் ஆகும்.

ஓட்டுநர் உரிமம் பெறும் போது 8 வடிவத்தில் இருக்கும் இடத்தில் வாகனத்தை ஒட்டி காட்ட வேண்டும் என்று சொல்வார்கள். அப்படி நாம் 8 என்ற வடிவத்தில் வண்டி ஓட்டிக் காட்டும் போது கால்களை தரையில் வைக்காமல் வண்டியை இயக்க வேண்டும்.

அதுபோல,  8 என்ற வடிவத்தில் வாகனத்தை ஓட்டி காட்டும் போது வலப்பக்கம் திரும்புவது, இடப்பக்கம் திரும்புவது மற்றும் குறுக்கே திரும்புவது அதேபோல அகலமான வளைவுகளில் யூ-டர்ன் செய்து கடப்பது போன்ற செயல்கள், 8 என்ற வடிவத்தில் வண்டியை ஓட்டிக் காட்டும் போது சவாலானதாக இருக்கும்.  

அதுபோல வாகனத்தில் செல்லும் போது சாலைகளில் பல இடங்களில் வளைவுகள் இருக்கும். அதை நாம் பாதுகாப்பாகவும், தைரியத்துடனும் கடந்து செல்ல வேண்டும்.

 அப்படி நாம் சாலைகளில் இருக்கும் எட்டு போன்ற வளைவுகளை கடந்து செல்ல வேண்டும் என்பதற்காக தான் ஓட்டுநர் உரிமம் பெறும் போது 8 போட சொல்கிறார்கள்.  

இப்படி 8 வடிவத்தில் இருக்கும் சவால்களை கடந்து, அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. அதுபோல ஓட்டுநர் உரிமம் பெற்று வாகனங்களை ஓட்டுவது மிகவும் நல்லது.

வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பது எப்படி?
ஓட்டுநர் உரிமத்தை ஆதாருடன் இணைப்பது எப்படி?

 

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil