மாதவிடாய் நேரத்தில் செடியை தொட்டால் கெட்டு போய்டுமா..? என்னான்னு தெரிஞ்சுக்கோங்க..!

Advertisement

மாதவிடாய் நேரத்தில் கோவிலுக்கு செல்லலாமா

மாதவிடாய் நேரத்தில் பெண்கள் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். உடலாலும், மனதாலும் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதிலும் வீட்டில் உள்ள பெரியவர்கள் பல கட்டுப்பாடுகள் விதிக்கின்றனர். கோவிலுக்கு போக கூடாது, செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற கூடாது, சமையலறைக்கு செல்ல கூடாது, தனியாக தான் உறங்க வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடுகள் உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் எதற்காக என்று இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

செடிக்கு தண்ணீர் ஊற்ற கூடாது ஏன்..? 

மாதவிடாய் நேரத்தில் கோவிலுக்கு செல்லலாமா

மாதவிடாய் நேரத்தில் செடிக்கு தண்ணீர் ஊற்ற கூடாது அப்படி ஊற்றினால் செடி வாடி போகிவிடும் என்று சொல்வார்கள். இதற்கான காரணத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

 மாதவிடாய் நேரத்தில் பெண்களின் உடலில் இருக்கும் வெப்பம் 0.5 டிகிரி அதிகமாக இருக்கும். இதனால் செடிக்கு தண்ணீர் ஊற்றினால் செடி கெட்டு போகாது. ஆனால், பெண்கள் உடல் அளவிலும் மன அளவிலும் ரொம்ப கஷ்டப்படுவார்கள். அவர்களை ஓய்வு எடுப்பதற்காகவே இது போன்ற கட்டுப்பாடுகள் கூறினார்கள்.  இன்னொரு கட்டுப்பாட்டையும் தெரிந்து கொள்ளுங்கள்.

அந்த காலத்தில் மாதவிடாய் நேரத்தில் 5 நாட்களும் குளிக்க மாட்டார்கள். ஏனென்றால், அந்த காலத்தில் ஆற்றில் சென்று தான் குளிக்க வேண்டும். காரணம் மாதவிடாய் நேரத்தில் ஆற்றில் குளித்தால் அது நீரை அசுத்தம் செய்யும் என்று நினைத்தார்கள். அதனால் தான் ஆற்றில் சென்று குளிக்கவில்லை. இப்போது அப்படியில்லை மாதவிடாய் நேரத்தில் ஒரு நாளைக்கு 2 முறை குளிக்கிறோம். காரணம், ஒவ்வொரு வீட்டிலும் தனியாக பாத்ரூம் வசதி உள்ளது.

இதையும் படியுங்கள் ⇒ மாதவிடாய் காலங்களில் பெண்கள் ஏன் கோவிலுக்கு செல்வதில்லை… காரணம் தெரியுமா..?

மாதவிடாய் நேரத்தில் சமையலறைக்கு செல்ல கூடாது என்பதற்கான காரணம்:

மாதவிடாய் நேரத்தில் சமையலறைக்கு செல்ல கூடாது என்பதற்கான காரணம்

பெண்களின் மாதவிடாய் நேரத்தில் உடலில் வெப்பம் அதிகமாக இருக்கும். மேலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அப்பொழுது அவர்களின் உடலில் ஒரு விதமான வெப்பம் ஏற்படும். அந்த வெப்பத்தினால் அவர்கள் தொடும் பொருட்கள் கெட்டு போகிவிடும் என்பதால் தான் சமையலறைக்குள் செல்ல கூடாது என்று சொன்னார்கள்.

தனியாக இருக்க சொல்வதற்கு காரணம்:

மாதவிடாய் நேரத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.  அவர்களுக்கு அந்த நேரத்தில் உடலில் பிரச்சனை வர கூடாது என்பதற்காக தான் யாரையும் தொடாமல் தனியாக இருக்க சொன்னார்கள்.

மாதவிடாய் நேரத்தில் விதித்த கட்டுப்பாடுகள் அனைத்தும் உங்களின் உடல் ஆரோக்கியத்திற்காக மட்டுமே விதிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் ⇒ மாதவிடாய் தாமதமாக வர காரணம்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement