யாப்பிலக்கணம் என்றால் என்ன? | Yappu Ilakkanam Enral Enna

Yappu Ilakkanam Enral Enna

யாப்பு இலக்கணம் | Yappu Ilakkanam in Tamil

நம் முன்னோர்கள் முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணம் அமைத்தனர். இலக்கணம் என்பது ஒரு மொழியை பிழையின்றி பேசுவதற்கும், எழுதுவதற்கும் தேவையான இலக்கண விதிகளில் உள்ள ஒரு தொகுப்பு. தமிழிலக்கணம் மொத்தம் ஐந்து வகைப்படும். அவை எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகும். தமிழ் இலக்கணத்தின் ஐந்து வகைகளில் ஒன்றான யாப்பு இலக்கணத்தை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக படித்து தெரிந்து கொள்வோம்.

யாப்பிலக்கணம் என்றால் என்ன?

 • யாப்பிலக்கணம் என்பது செய்யுள் எழுதுவதற்குரிய இலக்கணத்தைக் குறிக்கும். யாத்தல் என்பதற்கு கட்டுதல் என்று பொருள். யாப்பிலக்கணம் என்பது செய்யுளின் இலக்கணம் என்றும் பொருள் தரும்.
 • எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை போன்ற உறுப்புக்களை கட்டி அமைப்பதால் இதனை செய்யுள் யாத்தல் என்கிறார்கள்.
 • பாட்டு, தூக்கு, தொடர், கவிதை, செய்யுள் போன்றவை யாப்பிற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் ஆகும்.

யாப்பு இலக்கணம் வகைகள்:

இந்த இலக்கணம் இரண்டு வகைப்படும் அவை:

 1. உறுப்பியல்
 2. செய்யுளியல்

உறுப்பியலில் செய்யுள் உறுப்புகளும், செய்யுளியலில் பா மற்றும் பாவினம் விளக்கப்பட்டுள்ளது.

யாப்பு இலக்கணம் வகைகள்

யாப்பு இலக்கணம் உறுப்புகள் – Yappu Ilakkanam Uruppugal:

யாப்பின் உறுப்புகள் மொத்தம் ஆறு அவை:

 • எழுத்து
 • அசை
 • சீர்
 • தளை
 • அடி
 • தொடை

எழுத்து:

எழுத்துக்களின் முதலில் குறில், நெடில், மெய், ஆய்தம் வருவது எழுத்து எனப்படும்.

 • குறிலில், உயிர்க்குறிலும் உயிர்மெய்க்குறிலும் அடங்கும்.
 • நெடிலில் உயிர்நெடிலும், உயிர்மெய் நெடிலும் அடங்கும்.
 • மெய் ‘ஒற்று’ எனவும் சொல்லப்படும்.
 • செய்யுளில் ஆய்தம் மெய்யாகக் கருதப்படும்.

அசை:

 • எழுத்துகள் சேர்ந்து அசையாக வருகின்றன. அசை நேர் அசை, நிரை அசை என இரண்டு வகை உள்ளது.
 • குறில் அல்லது நெடில் மெய் எழுத்துடன் தனியாகவோ அல்லது சேர்ந்து வருவது நேர் அசை.
 • குறில் நெடில் சேர்ந்து வந்தாலோ அல்லது இரண்டு குறில் ஒன்றாக வந்தாலோ அது நிரையசை ஆகும். மெய் எழுத்து வந்தாலும் நிரை அசை ஆகும்.

சீர்:

அசைகள் இணைந்து வருவது சீர் எனப்படும். சீர் ஓரசைச்சீர், ஈரசைச்சீர்,  மூவசைச்சீர், நாலசைச்சீர் என நான்கு வகை உண்டு.

ஓரசைச்சீர்:

ஓர் அசை மட்டுமே வருவது ஓரசைச்சீர் எனப்படும்.

 • நேர் அசை, நிறை அசை.
ஈரசைச்சீர்:

இரண்டு அசைகள் சேர்ந்து வருவது ஈரசைச் சீர்ஆகும்.

 • நேர் நேர்
 • நிரை நேர்
 • நேர் நிரை
 • நிரை நிரை
மூவசைச்சீர்:

மூன்று அசைகள் சேர்ந்து வருவது மூவசைச் சீர் ஆகும்.

 • நேர் நேர் நேர்
 • நிரை நேர் நேர்
 • நிரை நிரை நேர்
 • நேர் நிரை நேர்
 • நேர் நேர் நிரை
 • நிரை நேர் நிரை
 • நிரை நிரை நிரை
 • நேர் நிரை நிரை
நாலசைச்சீர்:

நான்கு அசைகள் சேர்ந்து வருவது நாலசைச் சீர்எனப்படும்.

 • நேர்-நேர்-நேர்-நேர்
 • நேர்-நேர்-நேர்-நிரை
 • நேர்-நேர்-நிரை-நேர்
 • நேர்-நேர்-நிரை-நிரை
 • நிரை-நேர்-நேர்-நேர்
 • நிரை-நேர்-நேர்-நிரை
 • நிரை-நேர்-நிரை-நேர்
 • நிரை-நேர்-நிரை-நிரை
 • நேர்-நிரை-நேர்-நேர்
 • நேர்-நிரை-நேர்-நிரை
 • நேர்-நிரை-நிரை-நேர்
 • நேர்-நிரை-நிரை-நிரை
 • நிரை-நிரை-நேர்-நேர்
 • நிரை-நிரை-நேர்-நிரை
 • நிரை-நிரை-நிரை-நேர்
 • நிரை-நிரை-நிரை-நிரை
பகுபத உறுப்பிலக்கணம்

தளை:

 • இரண்டு சீர்கள் இணையும் விதம் தளை என்று கூறப்படுகிறது. தளை என்பதற்குக் கட்டு என்பது பொருள்.
 • நேர் அசையுடன் நேரும், நிரை அசையுடன் நிரையும் ஒன்றி வந்தால் அது ஒன்றி வரும் அசை.
 • நேர் அசையுடன் நிரை அசையும், நிரை அசையுடன் நேர் அசையும் வந்தால் அது ஒன்றாமல் வரும் அசை.
கண்/ணா – மன்/னா நேர் அசைகள் ஒன்றி வந்தன
நேர் நேர் நேர் நேர்
உயர் /வற – உயர்/நலம் நிரை அசைகள் ஒன்றி வந்தன
நிரை நிரை நிரை நிரை
அக/ர – முத/ல ஒன்றாமல் வந்தன
நிரை நேர் நிரை நேர்

அடி:

அடி என்பது செய்யுளில் இடம்பெறும் ஒரு வரியைக் குறிக்கும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சீர்கள் சேர்ந்து வருவது அடி ஆகும். அடி மொத்தம் ஐந்து வகைப்படும் அவை:

 • குறளடி
 • சிந்தடி
 • அளவடி (அ) நேரடி
 • நெடியடி
 • கழிநெடிலடி
 1. குறளடியில் இரண்டு சீர் இருக்கும்.
 2. சிந்தடியில் மூன்று சீர் இருக்கும்.
 3. அளவடி (அ) நேரடியில் நான்கு சீர்கள் இருக்கும்.
 4. நெடியடியில் ஐந்து சீர் இடம் பெற்றிருக்கும்.
 5. கழிநெடிலடியில் ஆறு சீர்கள் இருக்கும்.

தொடை:

இரண்டு அடிகள் தொடர்ந்து வரும் போது அவற்றில் முதல் எழுத்து இரண்டாம் எழுத்து முதலியவை ஒத்து வரும்படி இருப்பது தொடை என்று கூறப்படும். தொடை என்பதற்கு தொடுக்கப்படுவது என்பது பொருள். தொடை எட்டு வகைப்படும் அவை:

 1. மோனைத்தொடை
 2. எதுகைத்தொடை
 3. முரண்தொடை
 4. இயைபுத்தொடை
 5. அளபெடைத்தொடை
 6. இரட்டைத்தொடை
 7. அந்தாதித் தொடை
 8. செந்தொடை.
அணி இலக்கணம்

செய்யுளியல்:

இதில் பா மற்றும் பாவினம் எடுத்து கூறப்பட்டுள்ளது. பா என்பது செய்யுளின் வகை ஆகும். பாக்கள் நான்கு வகைப்படும் அவை:

 1. ஆசிரியப்பா
 2. வெண்பா
 3. கலிப்பா
 4. வஞ்சிப்பா

ஆசிரியப்பா:

தமிழின் யாப்பியலில் சொல்லப்படும் பாவகைகளுள் ஒன்று ஆசிரியப்பா. இது அகவல் ஓசையை கொண்டுள்ளது. இது நான்கு வகைப்படும்

 1. நேரிசை ஆசிரியப்பா
 2. இணைக்குறள் ஆசிரியப்பா
 3. நிலைமண்டில ஆசிரியப்பா
 4. அடிமறி மண்டில ஆசிரியப்பா

வெண்பா:

வெண்பா மரபுச் செய்யுள் வகைகளுள் ஒன்றாகும். தமிழில் மரபுப் பாக்கள், ஒலிப்பியல் அடிப்படையில் அடி, சீர், அசை முதலியவற்றைக் கொண்டு வகை பிரிக்கப்பட்டுள்ளன.

 • குறள் வெண்பா
 • சிந்தியல் வெண்பா
 • நேரிசை வெண்பா
 • இன்னிசை வெண்பா
 • பஃறொடை வெண்பா

இது செப்பலோசையை கொண்டுள்ளது.

கலிப்பா:

 • ஒரு பாடலில் சொற்களுக்கு இடையில் ஓசைகள் உயர்ந்து வருவது துள்ளல் ஓசை எனப்படும். இது கலிப்பாவிற்கு உரியது. இதில் ஓசைகள் தாழ்ந்து மற்றும் உயர்ந்து வரும்.

வஞ்சிப்பா:

 • பாடலில் உள்ள சீர்களில் உள்ள சொற்கள் உயர்ந்து வராமல் தாழ்ந்து மட்டும் வந்தால் அது வஞ்சிப்பா ஆகும். வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கல் ஓசையாகும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil