Google Pay VS Phone Pe இரண்டில் சிறந்தது எது..?

Advertisement

Google Pay vs PhonePe

இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். இன்றைய நிலையில் ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவருமே பண பரிவர்த்தனைக்காக Google Pay, Phone Pe, Paytm போன்ற ஆப்களை தான் பயன்படுத்தி வருகிறார்கள். சரி இந்த ஆப்களில் எது சிறந்தது என்று உங்களுக்கு தெரியுமா..? உங்களுக்கு உதவும் வகையில் Google Pay மற்றும் Phone Pe இந்த இரண்டில் எது சிறந்தது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Google Pay in Tamil: 

Google Pay in Tamil

Google Pay என்பது Google வழங்கும் ஒரு செயலி ஆகும். இது Digital Payment Platform மற்றும் Online Payment System என்று சொல்லப்படுகிறது. இந்த செயலிக்கு ஆரம்ப கட்டத்தில்,  ‘Tez’ என்ற பெயர் வழங்கப்பட்டது. இந்த Google Pay நிறுவனத்தின் தலைமையகம் நொய்டா என்ற நகரில் அமைந்துள்ளது.

 Google Pay -யில் வாலட் (Wallet) சேவைகள் வழங்கபடுவதில்லை. அதனால் Google Pay மிகவும் பாதுகாப்பானதாக செயல்பட்டு வருகிறது. Google Pay -யில் பாதுகாப்பான கட்டண முறைமையாகக் கருதப்படும் UPI கட்டணங்களை ஆதரிக்கிறது. Google Pay மூலம், தொகை Debit செய்யப்பட்டு நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதனால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.  
எந்தவித ஆப்பும் ஏற்றாமல் G pay -யில் Transaction History -யை ஈசியாக Delete செய்வது எப்படி..?

PhonePe in Tamil: 

PhonePe in Tamil

PhonePe என்பது ஒரு E-Commerce Payment System மற்றும் Digital Wallet company என்று சொல்லப்படுகிறது. இந்த PhonePe நிறுவனத்தின் தலைமையகம் பெங்களூரில் அமைந்துள்ளது. டிசம்பர் 2015 ஆம் ஆண்டு சமீர் நிகம் (Sameer Nigam) மற்றும் ராகுல் சாரி (Rahul Chari) ஆகியோரால் தொடங்கப்பட்டது.

பின் இதன் மொபைல் பயன்பாடு ஆகஸ்ட் 2016 ஆம் ஆண்டு தான் நேரலைக்கு கொண்டு வரப்பட்டது. இது இந்தியாவில் UPI (Unified Payments Interface) மூலம் தொடங்கிய முதல் Digital Payment செயலி என்று சொல்லப்படுகிறது.  உங்கள் PhonePe கணக்குகளுடன் பல வங்கிக் கணக்குகளைச் சேர்க்கலாம். அதுமட்டுமில்லாமல் PhonePe மூலம் அனைத்து வங்கி கணக்குகளையும் எளிதாக நிர்வகிக்க முடியும்.  

G Pay -ல இவ்வளவு விஷயம் இருக்கா..? இத்தனை நாளா இது தெரியாம தான் G Pay யூஸ் பண்ணிட்டு இருக்கோமா..?
ஒரு நாளில் இவ்ளோ தான் Gpay-வில் பணம் அனுப்ப முடியுமா!!!

Google Pay vs PhonePe in Tamil: 

Google Pay vs PhonePe Tamil

Google Pay மற்றும் Phone Pe இந்த இரண்டுமே UPI (Unified Payments Interface) பேமெண்ட்டுகளை பயனர்களுக்கு வழங்குகிறது. PhonePe வாலட் (Wallet) சேவைகளை வழங்குகிறது. ஆனால் Google Pay எந்த வாலட் சேவைகளையும் வழங்கவில்லை. அதனால் Google Pay -யில் உள்ள தொகை நேரடியாக வங்கிக் கணக்கிலிருந்து Debit செய்யப்படுகிறது.

 PhonePe 11 இந்திய மொழிகளை பயனர்களுக்கு வழங்குகிறது. ஆனால் Google Pay -யில் இந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 7 இந்திய மொழிகளை மட்டுமே வழங்குகிறது.  

இந்த இரண்டு செயலிகளும் Recharge, Utility payments, Electricity and Water bill போன்ற பயன்பாடு கட்டணங்களை போனின் மூலம் செய்வதற்கான அம்சங்களை வழங்குகிறது. மேலும், Train, Bus மற்றும் Flight போன்ற டிக்கெட்களை முன்பதிவு செய்வதற்கான அம்சங்களை வழங்குகிறது.

PhonePe மூலம் நாம் எந்த காப்பீடும் வாங்கலாம். அதேபோல மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யலாம். மேலும் PhonePe பயனர்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கட்டணம் செலுத்தும் சேவைகளை வழங்குகிறது. ஆனால் Google Pay காப்பீடு மற்றும் முதலீடு போன்ற சேவைகளை வழங்குவதில்லை.

இருந்தாலும் PhonePe மற்றும் Google Pay இந்த இரண்டுமே பண பரிவர்த்தனைக்கு பாதுகாப்பானது என்று சொல்லப்படுகிறது.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
G pay -யில் UPI Pin மறந்துவிட்டதா..? அப்போ இப்படி செய்யுங்க..!

பணவர்த்தனை செய்யும் ஆப்பில் தமிழ் மொழியில் மாற்றலாம் எப்படி தெரியுமா.?
Google Pay மூலம் BANK ACCOUNT பணம் அனுப்புவது எப்படி?

 

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement