நீங்க எந்த ஊருக்கு போனாலும் பஸ் டைமிங் இனிமேல் யாரிடமும் கேட்க தேவையில்லை..நீங்களே பார்த்து கொள்ளலாம் எப்படி தெரியுமா.?

Advertisement

Government Bus Timings

வீட்டுக்கு வீடு வண்டி மற்றும் கார் இருந்தாலும் அதிகமாக பயணிப்பது பேருந்தில் தான். நாம் செல்கின்ற ஊருக்கு எத்தனை மணிக்கு பேருந்து தெரியாமலே பேருந்து நிலையத்தில் மணி கணக்காக வெயிட் பண்ணுவோம். பேருந்து நிலையத்தில் இருப்பவர்கள் அல்லது அங்கு செல்பவர்களிடம் பேருந்து எத்தனை மணிக்கு வரும் கேட்டு கொண்டே இருப்போம். அதுமட்டுமில்லாமல் தினமும் பேருந்து பயணிப்பவருக்கு இதனை மணிக்கு தான் பேருந்து வரும் என்று தெரியும். புதிதாக ஒருவர் வந்தால் அவர்களுக்கு எத்தனை மணிக்கு பேருந்து வரும் என்றெல்லாம் தெரியாது. இனிமேல் நீங்கள் எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊருக்கு எத்தனை மணிக்கு அரசு பேருந்து வரும் என்பதை தெரிந்து கொள்ளலாம். அது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொளவோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Government Bus Timings:

பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட் போன் அதிகமாக பயன்படுத்துகின்றனர். அதனால் உங்களுடைய Google-ல் arasubus.tn.gov.in என்று டைப் செய்து Search செய்யவும்.

பிறகு அதில் மேலே மூன்று கோடுகள் இருக்கும் அதை கிளிக் செய்து Passenger என்பதை கிளிக் செய்து Scroll செய்து mtc bus timing என்பதை கிளிக் செய்யவும்.

mtc bus timing என்பதை கிளிக் செய்ததும் சென்னையில் உள்ள பஸ் பேருந்தின் நம்பரை மட்டும் போட்டால் சென்னையில் உள்ள பஸ் டைமிங் பார்ப்பதற்கு இந்த ஆப்ஷனை பயன்படுத்தவும். அதிலியே All bus timing என்று இருக்கும் அதை கிளிக் செய்து Source destination கேட்கும். அதில் Source என்பதில் எந்த ஊரில் இருக்கிறீர்களோ அந்த ஊரும், Destination என்பதில் எந்த ஊருக்கு செல்ல வேண்டுமோ அதை கொடுக்க வேண்டும், மற்றும் Route no போன்றவற்றை பதிவு செய்து  Search செய்தால் பஸ் டைமிங் தெரிந்து கொள்ளலாம்.

தொடர்புடைய பதிவுகள் 
அரசு பேருந்தில் செல்பவரா நீங்கள்..! அப்படினா இந்த நியூஸை நீங்கள் தான் முதலில் தெரிஞ்சுக்கனும்..!
மீண்டும் அரசு பேருந்து ஊழியர்களுக்கு ஓய்வு பெரும் வயது குறைப்பு..! இது தெரியாத உங்களுக்கு..!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement