Instagram Account Permanently Delete
ஹலோ நண்பர்களே..! பொதுநலம் வாசகர்கள் அனைவருக்கும் இன்றைய பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். தினமும் இந்த பதிவின் வாயிலாக ஸ்மார்ட் போனில் இருக்கும் Settings மற்றும் Tricks பற்றி தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்று இன்ஸ்டாகிராம் Account -யை நிரந்தரமாக Delete செய்வது எப்படி என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம்.
பொதுவாக இன்ஸ்டாகிராம் உள்ளே Account -யை Delete செய்வதற்கான எந்த ஒரு ஆப்சனும் இருக்காது. நாம் அனைவருமே இன்ஸ்டாகிராம் Account வேண்டாமென்றால் அதை Logout செய்துவிட்டு ஒரு புதிய Account ஓபன் செய்வோம். ஆனால் இனி அப்படி செய்ய தேவையில்லை. நீங்கள் இந்த பதிவை முழுதாக படித்து இன்ஸ்டாகிராம் Account -யை நிரந்தரமாக Delete செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
How To Delete Instagram Account Permanently in Tamil:
ஸ்டேப் -1
முதலில் உங்களுடைய இன்ஸ்டாகிராம் உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் கீழே இருக்கும் உங்களுடைய Profile Picture -யை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் -2
அடுத்து மேலே தெரியும் 3 கோடுகளை கிளிக் செய்யவும். பின் ஒரு திரை தோன்றும். அதில் Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளவும்.
ஸ்டேப் -3
பின் ஒரு திரை ஓபன் ஆகும். அதில் கீழே நகர்த்தி சென்றால் Help என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளவும்.
YouTube மற்றும் Face Book அதிகமாக யூஸ் செய்தால் DATA தீர்ந்துவிடுகிறதா அப்படினா இந்த Setting மாத்திடுங்க |
ஸ்டேப் -4
அடுத்து அதில் Help Center என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளவும்.
ஸ்டேப் -5
பின் ஒரு புதிய திரை தோன்றும். அதில் மேலே 3 கோடுகள் போன்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்தால் அங்கு Manage Your Account என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் இருக்கும் Delete Your Account என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
ஸ்டேப் -6
பின் அதில் சில ஆப்சன் இருக்கும். அதில் Temporarily Deactivate Your Instagram Account என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளவும்.
ஸ்டேப் -7
பின் அதில் கீழே நகர்த்தி சென்றால் அங்கு Delete Your Instagram Account என்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்தால் கீழே ஒரு பாக்ஸ் போன்ற ஆப்சன் தோன்றும். அதில் நீல நிறத்தில் Temporarily Deactivate Your Account என்று இருக்கும். அதை கிளிக் செய்யவும்.
இதையும் தெரித்துக்கொள்ளவும் 👉👉👉 நெட் ஆன் செய்தவுடன் நோட்டிபிகேஷன் வந்து கொண்டே இருக்கிறதா இந்த Settigns-யை ஆப் பண்ணுங்க
ஸ்டேப் -8
அடுத்து ஒரு திரை தோன்றும். அதில் Android App Help என்ற ஆப்சன் காட்டும். அதை கிளிக் செய்தால் அதில் சில ஆப்சன் இருக்கும்.
ஸ்டேப் -9
அதில் Mobile Browser Help என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளவும். பின் அதில் கீழே நகர்த்தி சென்றால் அங்கு Delete Your Instagram Account என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளவும்.
ஸ்டேப் -10
பின் உங்களிடம் எதற்காக Instagram Account -யை Delete செய்கிறீர்கள் என்று Reason கேட்கும். அதில் ஏதாவது ஒன்றை கொடுத்துவிட்டு Password கேட்கும் அதையும் கொடுக்க வேண்டும். பின் Ok என்ற ஆப்ஷனை கொடுத்தால் உங்களுடைய Instagram Account நிரந்தரமாக Delete ஆகிவிடும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |