வீட்டில் வெற்றிலை வளர்ப்பதால் நன்மைகள்
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்கப்போவது ஒரு பயனுள்ள தகவல்தான் அது என்னவென்றால் வீட்டில் வெற்றிலை வளர்ப்பதால் நன்மைகள். நம்மில் பலரும் வெற்றிலையை வீட்டில் வளர்ப்பதை பார்த்திருப்போம் அப்படி இந்த வெற்றிலையை வீட்டில் வளர்ப்பதால் மிகுந்த நன்மைகள் உள்ளன. அப்படி என்ன நன்மைகள் என்றுதானே யோசிக்கிறீர்கள்..! இந்த பதிவை முழுதாக படித்தால் உங்களுக்கே புரியும்.
வெற்றிலை வளர்ப்பதின் நன்மைகள்:
வெற்றிலையை வீட்டில் வளர்ப்பதால் நிறைய நன்மைகள் உள்ளன அவற்றில் சிலவற்றை பார்க்கலாம். வெற்றிலை நமது உடலில் உள்ள நோய்களுக்கு மிகவும் சிறந்த மருந்தாக அமைகிறது என்று நமது முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இந்த வெற்றிலையை நமது வீட்டில் வளர்ப்பதால் கஷ்டங்களே இருக்காது.
மேலும் இந்த வெற்றிலை இருக்கும் வீட்டில் மிகுந்த நன்மைகள் நடப்பது மட்டுமின்றி தொட்ட காரியமெல்லாம் துலங்கும், வெற்றிலை நமது வீட்டில் இருப்பதால் ஹனுமானின் ஆசீர்வாதம் முழுமையாக நிறைந்து காணப்படும். அதனால் எந்த வித தீயசக்திகளோ, எதிர்மறை எண்ணங்களோ நமது வீட்டில் எப்பொழுதும் இருக்காது.
பொதுவாக நாம் வீட்டில் உள்ள சுவாமிகளுக்கு பூஜை செய்தாலும் சரி கோவிலுக்கு சென்று அங்கு உள்ள சுவாமிகளுக்கு பூஜை செய்து அர்ச்சனை செய்து வழிபடும்போதும் சரி இந்த வெற்றிலையுடன் பாக்கு வைத்து பூஜிப்போம். அதேபோல் ஹனுமான் சுவாமிக்கு வெற்றிலையால் மாலைக்கட்டி வழிபடுவதால் அவருடைய ஆசீர்வாதம் முழுமையாக நமக்கு கிடைக்கும்.
வெற்றிலை ஒரு வீட்டில் இருந்தால் லட்சுமிதேவியே அந்த வீட்டில் வாசம் செய்வதாக அர்த்தம். பொதுவாக கடன் பிரச்சனை குறைய வேண்டுமென்றாலும் சரி நமது வீட்டில் பணப்புழக்கம் அதிகமாக வேண்டுமென்றாலும் சரி இந்த வெற்றிலை செடியை வீட்டில் வளர்த்தாலே போதும்.
வெற்றிலையில் உள்ள மருத்துவக்குணங்கள் :
வெற்றிலையை நன்கு மென்று சாப்பிடுவதால் நமது உடலுக்கு மிகுந்த நோய் எதிர்ப்புசக்தி கிடைக்கிறது. வெற்றிலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்(Antioxidant) மிகுந்து காணப்படுவதால் நமக்கு எப்பொழுதும் முதுமையான தோற்றம் ஏற்படாது. மேலும் தொண்டை சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் வெற்றிலை சாறு ஒரு நல்ல மருந்தாக உள்ளது.
இந்த வெற்றிலையில் நார்ச்சத்து(Fiber), வைட்டமின் A, வைட்டமின் C மற்றும் கால்சியம் போன்றச் சத்துக்கள் அதிகமாக உள்ளது. இதனால் சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனையால் கஷ்டப்படுகின்ற யாராக இருந்தாலும் ஒரு வெற்றிலையை எடுத்துக்கொண்டு அதன்மேலே சிறிதளவு நல்லெண்ணெய் தடவி அதனை சிறிது நேரம் சூடுப்படுத்தி நமது நெஞ்சின் மேல் வைத்து வருவதால் நல்ல பலனை பெறலாம்.
பொதுவாக பாலூட்டும் தாய்மார்களுக்கு உள்ள பெரிய பிரச்சனை என்றால் அவர்களுக்கு பால்கட்டிக்கொள்ளும் அதற்கு ஒரு வெற்றிலையை எடுத்துக்கொண்டு அதன்மேலே சிறிதளவு விளக்கெண்ணெயை தடவி அதனை சிறிது நேரம் சூடுப்படுத்தி அதனை அவர்களின் மார்பின் மீது வைத்து வருவதால் அவர்களின் வலிக்குறையும்.
வெற்றிலையை கஷாயமாக செய்து தினமும் பருகி வருவதால் இதயம் நன்கு பலமாகும். நுரையீரலில் உள்ள கபம் வெளியேறுகின்றது. வெற்றிலையின் சாற்றை பாலுடன் கலந்து பருகினால் மனதில் ஏற்படும் பதற்றம் குறைகின்றது.
வெற்றிலையை நன்கு மென்று சாப்பிடுவதால் கண்பார்வை அதிகமாகின்றது, எலும்புகள் பலமாகின்றன. அதேபோல நீங்கள் எப்பொழுது வெற்றிலை சாப்பிட்டாலும் அதனுடைய காம்புகளை பிரித்து எடுத்துவிட்டுத்தான் சாப்பிட வேண்டும்.
அதிகமாக உடல் எடை உள்ளவர்கள் ஒரு வெற்றிலையில் 5-6 மிளகு வைத்து நன்கு மென்று சாப்பிட்டுவருவதால் நல்ல பலனை காணலாம். குழந்தைகளுக்கு உள்ள அதிகப்படியான சளித்தொல்லைகளை போக்க வெற்றிலைச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டுவந்தால் மிகுந்த நன்மையை அளிக்கும்.
முழங்கால் வலி, மூட்டு வலி உள்ளவர்கள் ஒரு வெற்றிலையை எடுத்து அதனை சூடுபடுத்தி கொள்ளவும். அதனை வலி உள்ள இடத்தில் வைத்து கட்டினால் வலி நீங்கும். மேலும் தலையில் பொடுகுத்தொல்லை அதிகமாக உள்ளவர்கள் இந்த வெற்றிலையை அரைக்கவும். அரைத்த பேஸ்ட்டை தடவி 1 மணிநேரம் ஊறவைத்த பிறகு தலைகுளிப்பதால் பொடுகு பிரச்சனை முற்றிலும் நீங்கும். முடியும் நன்கு கருமையாக வளரும். மேலும் வெற்றிலையை சாப்பிடுவதால் வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க மிகவும் உதவுகிறது.
வெற்றிலை செடியை வீட்டில் வளர்ப்பதால் இவ்வளவு நன்மைகள் உள்ளன அதனால் நீங்களும் உங்கள் வீட்டில் வெற்றிலை செடியை வளர்த்து பயன்பெறுங்கள்.
இதையும் பாருங்கள் => வெற்றிலை சாகுபடி மிகவும் சுலபமாக செய்யலாம்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |