பெண்கள் ​வீட்டிலேயே தினமும் 2500 ரூபாய் சம்பாதிக்கக்கூடிய புதிய தொழில்..!

Advertisement

பெண்களுக்கு தினசரி வருமானம் தரும் தொழில்..! Women Business Ideas in Tamil..!

Women Business Ideas in Tamil – ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. பலவகையான தொழில் வாய்ப்புகள் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த உலகில் கொட்டிக்கிடக்கிறது. ஆக ஒரு தொழிலை தொடங்கும் போது அதில் பொறுமையாகவும், உறுதியுடனும், முழுமையான நம்பிக்கையுடன் செய்தாலே அதில் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். சரி இன்றைய பதிவில் ஒரு அருமையான தொழில் வாய்ப்பை பற்றி படித்து தெரிந்து கொள்வோம். பெண்கள் இந்த தொழிலை வீட்டில் இருந்தபடியே செய்து நல்ல வருமானை பெற முடியும். சரி வாங்க அது என்ன தொழில் எப்படி வீட்டில் இருந்தே அதனை ஆரம்பிக்கலாம் என்று இப்பொழுது பார்க்கலாம்.

கற்றாழை விற்பனை தொழில்:

இந்த தொழிலை கிராமப்புறங்களில் இருப்பவர்களும் செய்யலாம், நகர்ப்புறங்களில் இருப்பவர்களும் இந்த தொழிலை செய்யலாம். இதன் மூலம் தினமும் நல்ல வருமானம் கிடைக்கும். கற்றாழை பலவகையான விஷயங்களுக்கு பயன்படுகிறது. அதாவது அழகு சாதனப்பொருட்களுக்கு, மருத்துவத்திற்கு மற்றும் ஜூஸ் கடைகளுக்கு என்று பயன்பாடுகள் அதிகமாகவே உள்ளது. ஆக நீங்கள் இந்த தொழிலை வீட்டில் இருந்தபடியே செய்தால் நாள் வருமானத்தை பெற முடியும்.

எப்படி தொடங்கலாம்?

உங்கள் வீட்டிலேயே கொஞ்சம் இடம் இருந்தால் போதும் அந்த இடத்தில் கற்றாழை நாற்றுகளை நட்டுவைத்து மூன்று மாதங்கள் மட்டும் வளர்த்தால் போதும். நன்றாக வளர்ந்து வந்துவிடும். பிறகு அதனை பறித்து விற்பனை செய்யலாம்.

வருமானம்:

ஒரு கிலோ கற்றாழையை கடைகளில் 100 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றன. ஆக நீங்கள் வளர்த்த கற்றாழையை 250 கிராமை நீங்கள் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம்.

ஒரு நாளைக்கு 100 கற்றலை, 250 கிராம் எடையுள்ள கற்றாழை பீஸினை விற்பனை செய்துவிட்டிர்கள் என்றாலே உங்களுக்கு 2500 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

சந்தை வாய்ப்பு:

உங்கள் ஊரில் உள்ள காய்கறி கடைகளில் கூட இதனை விற்பனை செய்யலாம். இது தவிர ஆன்லைனிலும் வினை செய்யலாம். உங்களுக்கு அதிக வாடிக்கையாளர்கள் கிடைக்க வேண்டும் என்றால் சமூக வலைத்தளங்களில் தெரியப்படுத்தலாம். இதன் மூலம் நீங்கள் வீட்டில் இருந்தபடியே நல்ல வருமானை பெற முடியும்.

இது தவிர நீங்களே வீட்டில் கற்றாழை ஜெல், கற்றாழை எண்ணெய், கற்றாழை ஷாம்பு போன்றவற்றை செய்தும் விற்பனை செய்யலாம் இதில் இருந்தும் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 கிலோ 80 ஆயிரத்திற்கு விற்பனையாகும் மருத்துவ காளான் வளர்ப்பு தொழில்.. வீட்டில் இருந்து 60 நாட்களிலேயே 4 லட்சம் சம்பாரித்துவிடலாம்..!

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 
Advertisement