டெரிபிலின் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!

Advertisement

Deriphyllin Tablet Uses in Tamil | Deriphyllin மாத்திரை பயன்கள் 

உடல் நிலை சரியில்லை என்றாலே முதலில் தேடுவது மாத்திரை தான். சில நேரங்களில் மருத்துவரிடம் ஆலோசித்து பிறகு அவர்கள் மாத்திரை எழுதி தருவார்கள். அந்த மாத்திரையை சாப்பிடுவோம். சில நேரங்களில் மெடிக்களில் நமக்கு என்ன செய்கிறதோ அதை சொல்லி மாத்திரை வாங்கி சாப்பிடுவோம்.

ஆனால் மாத்திரை போடுவதற்கு முன்னால் இந்த மாத்திரை எதற்காக சாப்பிடுகிறோம் அதனின் பயன்கள் என்ன.? பக்க விளைவுகள் என்ன என்று ஒரு முறையாவது யோசித்திருப்பீர்களா.! அப்படி யோசிப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். உங்களுக்கு உதவிடும் வகையில் டெரிபிலின் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

குறிப்பு:  மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் தானாகவே பயன்படுத்த கூடாது.

டெரிபிலின் மாத்திரை பயன்கள்:

deriphyllin tablet uses in tamil

டெரிபிலின் மாத்திரை சுவாச சம்மந்தப்பட்ட பல பிரச்சனைகளுக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது. அவை பின்வருவன,

மூச்சுக்குழாய் அலர்ஜி, மூச்சுத்திணறல், இருமல், மார்பு பகுதி இறுக்கமாக உணர்தல், ஆஸ்துமா  போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்தாக கொடுப்படுகிறது. 

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (சிஓபிடி-COPD) பிரச்சனையை தடுக்க மருந்தாக கொடுப்படுகிறது.

இதையும் படியுங்கள் ⇒  ரபிப்ரசோல் மாத்திரை பயன்கள்

டெரிபிலின் மாத்திரை பக்க விளைவுகள்:

  1. தோலில் அரிப்பு பிரச்சனை
  2. வலிப்பு
  3. வயிற்று வலி
  4. வயிற்றுப்போக்கு
  5. சிறுநீர் அதிகமாக கழிப்பது
  6. தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல்
  7. கணுக்கால் மற்றும் கால்களில் வீக்கம் ஏற்படுதல்
  8. இதய துடிப்பு அதிகமாக இருப்பது

முன்னெச்சரிக்கை:

இந்த மருந்தை சாப்பிடுவதற்கு முன் இதயம் மற்றும் இரத்த நாளங்கள், மூளை தைராய்டு சுரப்பிகள் ஏதும் பிரச்சனை இருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

இந்த மாத்திரையை சாப்பிடும் போது புகை பிடிக்க கூடாது. அப்படி நீங்கள் ஒருவேளை புகை பிடித்தால் மருந்தின் பண்பு குறைவாக இருக்கும்.

இந்த மாத்திரை சாப்பிடும் காலங்களில் காபி குடிப்பதை தவிர்க்கவும்.

இதையும் படியுங்கள் ⇒  பெப்லக்ஸ் ஃபோர்ட்டே மாத்திரை பயன்கள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement