Digene Syrup குடிப்பதன் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்..!

Advertisement

Digene Gel Mint Uses in Tamil

நண்பர்களே ஹாய்..! நம் வீட்டில் இந்த ஒரு டானிக் இல்லாமல் இருப்பதில்லை. ஏனென்றால் வீட்டில் செரிமானத்திற்காக மருத்துவர்கள் பரிந்துரை செய்வது அதிகளவு இந்த டானிக்கை தான். மேலும், நாம் இன்று இந்த புதினா வகை  டானிக்கின் நன்மைகள் மற்றும் தீமைகளை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம்..!

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Digene Gel Mint Uses in Tamil:

Digene Gel Mint Uses in Tamil

நாம் உண்ணும் உணவுகள் விரைவில் செரிமானம் ஆகுவதற்கும் வயிற்றில் உள்ள வாயு பிரச்சனைக்கும் இந்த Digene Gel Mint பயன்படுகிறது. மேலும் இது வயிற்றில் அதிகளவு இருக்கக்கூடிய அமிலத்தை சமமான அளவு நடுநிலைபடுத்தி வயிற்றில் ஏற்படும் எரிச்சல்களை குறைக்க இது பெரிதும் உதவுகிறது.

இது வயிற்றில் வீக்கம் மற்றும் அசௌகரியம் போன்ற கூடுதல் வாயுவின் அறிகுறிகளைப் போக்க உதவுகிறது மற்றும் அஜீரண உணர்வைக் குறைக்க உதவுகிறது.

பயன்படுத்தும் முறை:

இது வாயின் வழி திரவம் என்பதால் அதனை சரியான அளவு மட்டுமே எடுத்து கொள்ளவேண்டும். மேலும் அந்த டானிக் பாட்டிலின் மேல் உள்ள கோப்பைகளில்  மருத்துவர் சொல்லும் அளவு கொண்டு தான் பயன்படுத்தவேண்டும்.

மேலும் இதில் மாத்திரையும் இருப்பதால் அதனையும் மென்று தான் சாப்பிடவேண்டும். டானிக் குடித்த பின் அதே கோப்பையில் தண்ணீர் ஊற்றி அதையும் விழுங்க வேண்டும். முக்கியமாக டானிக் குடிக்கும் முன் பாட்டிலை நன்றாக கலந்து கொள்ளவேண்டும்.

Cefixime Tablet-யின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அறியலாம் வாங்க..!

பக்கவிளைவுகள்:

இதனை சரியான மருத்துவர் பரிந்துரை இல்லை என்றால் எடுத்துக் கொள்ளவேண்டாம். மேலும் உங்களுக்கு கடுமையான வயிற்று வலி, சிறுநீரக பிரச்சனை, ஒவ்வாமை, குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருந்தால் நீங்கள் இனித்த டானிக் குடிப்பதை தவிர்த்துக் கொள்ளவும். மேலும் மலச்சிக்கல் பசியிழப்பு, பலவீனம், வயிற்றுப்போக்கு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

முக்கியமாக கர்ப்பமாக இருந்தாலோ அல்லது பால் கொடுக்கும் தாய்மார்கள் இருந்தால் அவர்கள் இதனை குடிப்பதை தவிர்த்துக் கொள்ளவும்.

ஜூனியர் லான்சோல் 15 மி.கி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!

 

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement