டோம்பெரிடோன் மாத்திரை பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி தெரியுமா

domperidone tablet benefits in tamil

டோம்பெரிடோன் மாத்திரை பற்றிய தகவல்

வணக்கம் பொதுநலம்.காமின் அன்பு நண்பர்களே. இன்று இந்த பதிவில் ஆரோக்கியமான தகவலை அனைவரும் தெரிந்துகொள்ள போகிறோம். அப்படி எதை பற்றி பார்க்கப்போகிறோம் என்று தானே யோசிக்கிறீர்கள். நாம் இன்று டோம்பெரிடோன் என்ற மாத்திரையின் பயன்கள் மற்றும் அதன் பக்கவிளைவுகளை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளப்போகிறோம்.

நமக்கு  உடம்பு சரியில்லை என்றால் மருந்தகங்களில் கிடைக்கும் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவோம். ஆனால் நாம் என்றாவது மாத்திரை சாப்பிட்டவுடன் நமக்கு உடல் சரியாகிவிடும். அந்த மாத்திரையில் நலன்களை மட்டும் யோசித்திருப்போம் ஆனால் அதனை பற்றிய பக்கவிளைவுகளை என்றாவது யோத்தித்தது உண்டா..? வாங்க இன்று  டோம்பெரிடோன் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம்.

Ivermectin மாத்திரை பயன்கள்

டோம்பெரிடோன் மாத்திரையின் பயன்கள்:

  • இந்த மாத்திரை ஒரு நோய்எதிர்ப்பு மருந்தாக பயன்படுகிறது. இது வாந்தி மற்றும் குமட்டல் அல்லது வயிறு நிரம்புவது போன்ற உணர்வு அறிகுறிகளை டோம்பெரிடோன் 10 MG மாத்திரை குணப்படுத்துகிறது.
  • அஜீரண கோளாறுகளை தடுப்பதற்கு இந்த டோம்பெரிடோன் மாத்திரை பயன்படுத்தப்படுகிறது.
  • அதுமட்டுமின்றி இது வயிறு மற்றும் குடல் வழியாக உணவின் இயக்க ஆற்றலை அதிகரிக்கிறது. இதை சாப்பிடுவதன் மூலம் உடம்பில் ஏற்படும் வீக்கம் மற்றும் இரைப்பையில் ஏற்படும் அசௌகரியத்தை நீக்குகிறது.
  • இந்த மருந்து வயிற்றின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள தசைகளை இறுக்குகிறது. இதுபோன்ற செயல் நீங்கள் உட்கொள்ளும் உணவின் போக்கை உங்கள் வயிற்றுப் பகுதியிலிருந்து குடல் பகுதி வரையும் வேகமாக செயல்பட உதவுகிறது.
ஆஸ்பிரின் மாத்திரை பயன்கள்
காம்பிஃப்லாம் மாத்திரை பயன்பாடுகள்
  • டோம்பெரிடோன் 10 MG மாத்திரை டோபமைன் அண்டகோனிஸ்ட்ஸ்  என்று அழைக்கப்படும் ஒரு மருந்து குழுவின் ஒரு பகுதியாகும். இது இரைப்பை ஏற்படும் அழற்சி அல்லது நீரிழிவு நோய் உள்ள உணவுக்குழாய் வழியாக உணவை மெதுவாக பெற உதவுகிறது.
  • வாந்தி மையம் என்றழைக்கப்படும் மூளையின் ஒரு பகுதியில் தூண்டுதல் நிகழ்வினை தடுக்கிறது.
  • இந்த டோம்பெரிடோன் மாத்திரையை மருத்துவர் அறிவுறுத்தியபடி நீங்கள் அந்த விகித முறையில் எடுத்துகொள்ளவேண்டும்.

டோம்பெரிடோன் மாத்திரையின் பக்கவிளைவுகள்: 

டோம்பெரிடோன் 10 MG மாத்திரை உட்கொள்வதால் வயிற்றுப்போக்கு, வாய் வறட்சி, தலைவலி, ஒற்றைத் தலைவலி அல்லது மார்பக வலி போன்ற பிரச்சனை இதன் சாதாரண பக்கவிளைவுகள் என்று சொல்லபடுகிறது. இதுபோன்ற பக்கவிளைவுகள் சில நாட்களில் சரியாகிவிடுகின்றன. பின்வரும் பக்கவிளைவுகள் ஏதும் இதனால் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும்.

  • மயக்கம் வருவது போன்ற உணர்வு.
  • இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனை.
  • மூச்சு விடுவதில் அல்லது சுவாசிப்பதில் சிரமமாக இருக்கும்.
  • முகம், உதடுகள், நாக்கு மற்றும் கை , கால்களில் வீக்கம் காணப்படும்.
  • சீரற்ற மாதவிடாய் சுழற்சி.
  • ஆண்மை இழப்பு மற்றும் ஆண்களில் பெண் மார்பகம் போன்ற வளர்ச்சி.
  • தோலில் வெடிப்பு ஏற்படுதல்.
செதிரிசின் மாத்திரை பயன்கள்

 

உதாரணமாக:

  • இதய நோய்கள் இதய செயலிழப்பு போன்ற கோளாறுகளை கொண்ட மக்கள் இந்த மாத்திரையை சாப்பிட பரிந்துரைக்கபடவில்லை.
  • பிட்யூட்டரி சுரப்பியில் கட்டி இருக்கும் மக்கள் இதை சாப்பிடுவதற்கு பரிந்துரைக்கபடவில்லை.
  • அலர்ஜி அல்லது ஒவ்வாமை இருப்பதை அறிந்த மக்களுக்கு இதை பயன்படுத்த அனுமதி இல்லை.
  • இந்த டோம்பெரிடோன் 10 MG மருந்து குழந்தைகளுக்கு கொடுக்க அனுமதிக்கப்படவில்லை.
  • சிறுநீரக பாதிப்புள்ள நோயாளிகளும் இதை தவிர்க்கவேண்டும்.

குறிப்பு: இதுபோன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு டோம்பெரிடோன் மாத்திரையை பயன்படுத்துவது நல்லது. 

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து