Doxiflo 650 மி.கி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

Doxiflo 650 mg Tablet Uses in Tamil

இன்றைய கால கட்டத்தில் உள்ள மாசுபாடு மற்றும் நமது முறையற்ற வாழ்க்கை முறையாலும் நமது உடல் நலத்திற்கு பல வகையான கேடுகள் ஏற்படுகின்றன. அவற்றையெல்லாம் சரி செய்வதற்காக நாம் மருத்துவரை நாடி செல்வோம் அவர் நமது நோயை போக்க உதவும் மருந்துகளை அளிப்பார். அப்படி அவர் அளிக்கும் மருந்தினை உண்பதற்கு முன்னால் அந்த மருந்தினை பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.

அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் நமது பதிவின் மூலம் பல வகையான மருந்துகளின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் Doxiflo 650 mg மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த மாத்திரையை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ Aciloc 150 மி.கி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Doxiflo 650 mg Tablet Uses in Tamil:

Doxiflo 650 mg Tablet Side Effects in Tamil

இந்த Doxiflo 650 மி.கி மாத்திரையானது நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா மற்றும் எம்பிஸிமா போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களினால் ஏற்படும் சுவாசக் குறைபாடு, மூச்சுத்திணறல் மற்றும் மார்பு இறுக்கம் போன்றவற்றை குணப்படுத்த பயன்படுகிறது.

அதாவது இந்த மாத்திரையானது பாஸ்போடிஸ்டேரேஸ் செயல்பாடுகளைத் தடுப்பதன் மூலம் செயல்படுகிறது.

இந்த மருந்தில் பல மி.கி உள்ளதால் இந்த மருந்தினை மருத்துவர் அளித்த அளவை தவிர அதிகமாகவோ அல்லது குறைவாகவோ எடுத்து கொண்டால் இது பல பக்க விளைவுகளை அளிக்கும் வாய்ப்புள்ளது.

இந்த மருந்தினை உணவுடனோ அல்லது உணவு உட்கொண்ட பிறகோ எடுத்து கொள்ளலாம்.

Doxiflo 650 mg Tablet Side Effects in Tamil:

  1. குமட்டல்
  2. இதய துடிப்பு கோளாறு
  3. வாந்தி
  4. மேல் இரைப்பை வலி
  5. படபடப்பு
  6. தலைவலி
  7. தூக்கமின்மை
  8. தலைச்சுற்றல்
  9. தசை பலவீனம்

Doxiflo 650 மி.கி மருந்தினை நீங்கள் உட்கொள்ளும் போது மேல்கூறிய அறிகுறிகள் ஏதும் உங்களுக்கு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ Doxolin 200 மி.கி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

முன்னெச்சரிக்கை:

இந்த மருந்தினை பயன்படுத்துவதற்கு முன்பாக மருத்துவரிடம் உங்கள் தற்போதைய மருந்துகள் பட்டியல் பற்றி கூறி அவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

நீங்கள் கர்ப்பிணி அல்லது தாய்ப்பால் அளிக்கும் தாய்மாராக இருந்தால் இந்த மருந்தினை கண்டிப்பாக எடுத்து கொள்ளக்கூடாது.

மேலும் மாரடைப்பு, பெப்டிக் அல்சர், ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் வலிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த மருந்தை உட்கொள்ளக்கூடாது.

இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ Asthakind LS மருந்தினை பயன்படுத்துவத்தற்கு முன்னால் அதனை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement