இபூபுரூஃபன் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!

Ibuprofen Tablet Uses in Tamil

Ibuprofen Tablet Uses in Tamil

பொதுநலம்.காம் வாசகர்களுக்கு வணக்கம்.. தினமும் ஏதாவது மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி பதிவு செய்து வருகிறோம் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது இபூபுரூஃபன் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க பக்கவிளைவுகளை பற்றி தான் படித்தறிய போகிறோம். எந்த ஒரு மாத்திரையையும் நாம் மருத்துவர்களின் ஆலோசனை இன்றி எடுத்துக்கொள்ள கூடாது, ஒரு வேளை எடுத்துக்கொண்டோம் என்றால் நாம் தான் பிறகு பக்க விளைவுகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். ஆக நாம் எடுத்து கொள்ளும் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி அறிவது எந்த ஒரு தவறும் இல்லை. அந்த வகையில் இன்று நாம் இபூபுரூஃபன் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க பக்கவிளைவுகளை பற்றி அறியலாம் வாங்க.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

இபூபுரூஃபன் மாத்திரை:Ibuprofen Tablet

இபுப்ரோஃபென் (Ibuprofen) மாத்திரை என்பது அழற்சிகள் மற்றும் வலிக்கு சிகிச்சையளிக்கிறது. இது வலி மற்றும் வீக்கம் ஏற்படுத்தும் ஹார்மோன்கள் கட்டுப்படுத்தும் ஒரு ஸ்டீராய்ட் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்தாக (NSAID) செயல்படுகிறது. இதனால் பல் வலி, தலைவலி, மூட்டுவலி, முதுகில் வலி, பிற வகை சிறு காயங்கள், மாதவிடாய் பிடிப்பு போன்ற பல பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இந்த மருந்து வயது முதிர்ந்தவர்களுக்கும், 6 மாதங்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கும் ஏற்றது.

பயன்கள்:

மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான வலி மற்றும் பிடிப்புகளைப் போக்க இப்யூபுரூஃபன் பயன்படுத்தப்படுகிறது.

இபுப்ரோஃபென் முடக்கு வாதத்துடன் தொடர்புடைய மென்மையான மற்றும் கடுமையான மூட்டு வலி போன்ற அறிகுறிகளுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

இபுப்ரோஃபென் தலைவலி, முதுகுவலி மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Fexocet 180 mg மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் | Fexocet Tablet Uses in Tamil

பக்க விளைவுகள்:

நீங்கள் இந்த மருந்தை எடுத்துக்கொள்ளும் போது சில பக்க விளைவுகளை அனுபவிப்பீர்கள்.

அதாவது இபுப்ரோஃபென் (Ibuprofen) மருந்து இரத்த சோகை, வாந்தி, பதற்றம், இரத்தப்போக்கு, குறைந்த ஹீமோகுளோபின் அளவுகள் மற்றும் குருதிச்செவ்வணு நலிவு போன்ற சில சிறிய பக்கவிளைவுகள் ஏற்படுத்தும்.

இந்த பக்க விளைவுகள் மிகவும் பொதுவானது ஆகும். சில காலத்தில் விலகிச் சென்று விடும்.

வயிறு வலி, அஜீரணம், சுவாசிப்பதில் பிரச்சனைகள், எடை அதிகரிப்பு, அரிப்பு, உடல் சோர்வு மற்றும் பலவீனமாக இருப்பது, சிறுநீர் கழிப்பதில் சிரமம் மற்றும் குடல் அசைவுகள், இரைப்பையில் அமிலத்தை அதிகரிக்க செய்தல், போன்ற தீவிரமான பக்கவிளைவுகள் சிலவற்றை நீங்கள் உணர்ந்தால் விரைவில் உங்கள் உடல்நல கவனிப்பு வழங்குநரைத் தொடர்பு கொள்ளுங்கள்

இபுப்ரோஃபெனை யார் எடுக்கலாம் மற்றும் யார் எடுத்துக்கொள்ள கூடாது?

இபுப்ரோஃபெனை யார் எடுக்கலாம்:-

பெரும்பாலான பெரியவர்கள் மற்றும் 17 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் இபுப்ரோஃபெனை எடுத்துக் கொள்ளலாம்.

யார் இபுப்ரோஃபெனை எடுத்துக்கொள்ள கூடாது?

உங்களுக்கு ஆஸ்துமா, திரவம் தேக்கம், சிறுநீரக பிரச்சனைகள், அடிக்கடி புண் (அல்சர்) ஏற்படுதல் மற்றும் ரத்தக்கசிவு போன்ற உடல்நல பிரச்சனைகள் இருந்தால், நீங்கள் இபுப்ரோஃபென் (Ibuprofen) எடுத்துக்கொள்ளும் முன் உங்கள் மருத்துவரிடம் இவற்றைப் பற்றி தெரிவிக்கவும். மேலும் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்கவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மெஃப்டால் ஸ்பாஸ் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து