ஜூனியர் லான்சோல் 15 மி.கி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..!

Junior Lanzol 15 mg Tablet Information in Tamil

Junior Lanzol 15 mg Tablet Information in Tamil

இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாட்டின் காரணமாக நோய்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. எனவே அதற்கான தீர்வாக இருக்கும் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. அதனால் உங்களுக்கு ஏதேனும் உடல் நல பிரச்சனையினால் மருந்து உட்கொள்கிறீர்கள் என்றால் அந்த மருந்து பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொண்ட பிறகு உட்கொள்ளுங்கள்.

எனவே உங்களுக்கு உதவும் வகையில் நமது பொதுநலம்.காம் பதிவின் மூலம் தினமும் ஒரு மருந்தின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி அறிந்துக் கொண்டு வருங்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஜூனியர் லான்சோல் 15 மி.கி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் போன்ற தகவல்களை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்துப் பயன்பெறுங்கள்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Junior Lanzol 15 mg Tablet Uses in Tamil:

Junior Lanzol 15 mg Tablet Uses in Tamilஜூனியர் லான்சோல் 15 மிகி மாத்திரை இரைப்பையில் அமில உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் வேலை செய்கிறது. மேலும் இந்த மருந்து புரோட்டன் இறைப்பு தடுப்பான்கள் என்று அழைக்கப்படும் ஒரு வகை மருந்துகளின் வகையை சார்ந்தது.

இந்த மருந்து வயிற்று புண், சோலிங்கர்-எலிசன் நோய், கடுமையான நெஞ்செரிச்சல் மற்றும் உணவுக் குழாயில் அழற்சி போன்ற நோய்களுக்கு தீர்வாக அமைகிறது.

Junior Lanzol 15 mg Side Effects in Tamil:

  1. குமட்டல்,
  2. வயிற்று வலி,
  3. வயிற்றுப்போக்கு,
  4. மலச்சிக்கல்,
  5. தலைவலி,
  6. தோலில் அழற்சி 

போன்றவை ஜூனியர் லான்சோல் 15 மி.கி மாத்திரை (Junior Lanzol 15 MG Tablet) மருந்தை எடுத்துக்கொள்வதினால் ஏற்படும் சில பக்க விளைவுகள் ஆகும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> Nodosis மாத்திரை பற்றிய தகவல்..!

முன்னெச்சிரிக்கை:

இந்த மாத்திரையில் நிறைய வகையான மி.கி இருப்பதால் நாம் கவனமாக மருத்துவர் கூறிய அளவில் சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக இந்த மருந்தின் நாளொன்றுக்கு ஒரு முறை மட்டுமே அதுவும் பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும். இந்த மருந்தின் அளவை அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொண்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக மாறிவிடும்.

கல்லீரல் நோய், உங்கள் இரத்தத்தில் மெக்னீசியம் அளவு குறைதல், குறைந்த எலும்பு தாது அடர்த்தி, வாந்தி, விளக்க முடியாத எடை இழப்பு மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறு போன்றவற்றால் நீங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் இந்த ஜூனியர் லான்சோல் 15 மிகி மாத்திரை எடுத்துக்கொள்ளும் முன்னர் உங்களின் மருத்துவரின் ஆலோசனையை கண்டிப்பாக பெற்று கொள்ளுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> ஜஸ்டின் 25மி.கி மாத்திரை பற்றிய தகவல்..!

மேலும் நீங்கள் கர்ப்பமாக இருந்தால் அல்லது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் நபராக இருந்தால் இந்த மருந்தினை எடுத்துக்கொள்ளும் முன்னர் மருத்துவரின் ஆலோசனையை கண்டிப்பாக பெற்று கொள்ளுங்கள்.

இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து