மொண்டேக் LC மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் | Montek LC Tablet Uses in Tamil

montek Ic tablet Uses in Tamil

மொண்டேக் LC மாத்திரை | Montek LC Tablet Uses in Tamil

நாம் எடுத்துக்கொள்ளும் நாட்டு மருந்தாக இருந்தாலும் சரி ஆங்கில மருந்தாக இருந்தாலும் சரி எந்த மருந்தாக இருந்தாலும் அதை பயன்படுத்துவதற்கு முன்னர் அந்த மாத்திரை அல்லது மருந்தை பயன்படுத்துவதால் ஏற்படும் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அந்த வகையில் நாம் இந்த பதிவில் மொண்டேக் LC மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது, அதை உபயோகிப்பதால் என்ன பக்க விளைவுகள் வரும் என்பதை பார்க்கலாம் வாங்க.

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..

மொண்டேக் LC மாத்திரை  – Montek LC Tablet Uses in Tamil:

montek lc tablet - uses in tamil

 • இந்த மாத்திரை Levocetirizine – 5 MG, Montelukast – 10 MG வேதிப்பொருள்கள் கலந்த கலவையாகும். மருத்துவர் பரிந்துரை இல்லாமல் இந்த மாத்திரையை சாப்பிட கூடாது.
 • நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதுகாத்து நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க பயன்படுகிறது. நம் உடம்பில் ஏற்படும் அழற்சி மற்றும் சுவாச பிரச்சைனைகளை ஊக்குவிக்கும் ஹிஸ்டமைன், leukotriene செயல்பாட்டை தடுத்து உடலை பாதுகாக்க உதவுகிறது.

மொண்டேக் LC மாத்திரை பயன்கள் – Montek LC Tablet Uses in Tamil:

 • தும்மல், மூக்கு மற்றும் தொண்டையில் ஏற்படும் அரிப்பை சரி செய்ய உதவுகிறது.
 • ஆஸ்துமா, தோல் வீக்கம், வீட்டில் வளர்க்கப்படும் பிராணிகள் மூலம் வரும் அழற்சியை தடுக்க உதவுகிறது.
 • பருவ கால நாசியழற்சி, கண்களில் நீர் வடிதல், சளி, தோல் சிவந்து போதல் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.
 •  உடற்பயிற்சி செய்யும் போது நாம் குளிர்ந்த காற்று அல்லது உலர் காற்றையோ அதிகமாக சுவாசிக்கும் போது வீக்கம் அல்லது அழற்சியை ஏற்படுத்தும். அப்பொழுது ஏற்படும் மூச்சுக்குழாய் அழற்சியை (Bronchospasm) குணப்படுத்த உதவுகிறது.

பக்க விளைவுகள் | Montek LC Tablet Side Effects in Tamil

 • இந்த மாத்திரையை எடுத்து கொள்வதன் மூலம் தலை வலி, அதிக தூக்கம், பார்வை மங்குதல், வயிற்று போக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
 • குமட்டல், வாந்தி, உலர் வாய், தோல் வெடிப்பு, சோர்ந்து போதல், தசை பிடிப்பு, மூக்கடைப்பு, மூட்டு வலி வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
 • மேற் கூறிய பக்க விளைவுகள் அல்லது வேறு ஏதேனும் பக்க விளைவுகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது.
செதிரிசின் மாத்திரை பயன்கள் | Cetirizine Tablet Uses in Tamil 

Montek LC Tablet in Tamil | மொண்டேக் LC மாத்திரை யார் சாப்பிடலாம் மற்றும் யார் சாப்பிடக் கூடாது?

 • கிட்னி நோய், வலிப்பு, லிவர் நோய் உள்ளவர்கள் இந்த மாத்திரையை எடுத்து கொள்ளக்கூடாது.
 • மது அருந்திவிட்டு இந்த மாத்திரையை சாப்பிட கூடாது. தூக்கம் வருவதற்கான வாய்ப்பு உள்ளதால் வாகனம் ஓட்டுநர்கள் இந்த மாத்திரை சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது.
 • Levocetirizine மற்றும் Montelukast அழற்சியாக இருந்தால் மொண்டேக் LC மாத்திரையை சாப்பிட வேண்டாம்.
 • கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற முயற்சி செய்பவர்கள், குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இந்த மாத்திரையை எடுத்து கொள்ள வேண்டாம்.
 • சாப்பிட்ட பிறகு அல்லது சாப்பிடுவதற்கு முன்னர் எடுத்துக்கொள்ளலாம். இந்த மருந்தை எடுத்துக்கொள்ளும் போது தூக்கம் வரும் காரணத்தினால் இரவில் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்வது சிறந்தது.
அட்டோவாஸ்தீன் மாத்திரை பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil