ஓமி டி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிகோங்க..!

Advertisement

Omee D Tablet Uses in Tamil

வணக்கம் நண்பர்களே..! இன்றைய கால கட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் முறையற்ற வாழ்க்கை முறையின் காரணமாக நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அதனால் அதனை குணப்படுத்த பயன்படும் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பொதுவாகவே நாம் எந்த ஒரு மருந்து எடுத்து கொண்டாலும் அந்த மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்வது மிகவும் அவசியம். அதனால் தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு மருந்தினை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் இந்த ஓமி டி மாத்திரை எந்த பிரச்சனைக்காக பயன்படுத்தபடுகிறது. மேலும் இந்த மாத்திரையை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன மற்றும் எவ்வளவு சாப்பிட வேண்டும் போன்ற அனைத்து தகவல்களையும் விரிவாக பார்க்கலாம் வாங்க.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Doxiflo 650 மி.கி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Omee D Tablet Uses in Tamil:

Omee D Tablet Side Effects in Tamil

டோபமைன் அண்டகோனிஸ்ட்ஸ் (Dopamine antagonists) குழுவின் ஒரு பகுதியான ஓமி டி மாத்திரை இரைப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மற்றும் பார்கின்சன் நோய்க்காக மருந்துகளை எடுத்துகொள்பவர்களுக்கும் வாந்தி மற்றும் குமட்டல் போக்கை தடுக்க பயன்படுகிறது.

மேலும் இந்த மாத்திரை வயிற்று வலி,நெஞ்செரிச்சல் மற்றும் குடல் புண்களை சரி செய்யவும் பயன்படுகிறது.

இந்த மருந்தில் பல மி.கி உள்ளதால் இந்த மருந்தினை மருத்துவர் அளித்த அளவை தவிர அதிகமாகவோ அல்லது குறைவாகவோ எடுத்து கொண்டால் இது பல பக்க விளைவுகளை அளிக்கும் வாய்ப்புள்ளது.

இதனை உணவு எடுத்து கொள்வதற்கு 15 முதல் 30 நிமிடங்களுக்கு முன்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.

Omee D Tablet Side Effects in Tamil:

  1. எக்ஸிமா
  2. நெஞ்சு வலி 
  3. மலச்சிக்கல்
  4. இடுப்பு, மணிக்கட்டு அல்லது முதுகுத் தண்டில் வலி
  5. வயிற்று வலி
  6. தலைவலி
  7. வாந்தி
  8. உடலில் அரிப்பு
  9. வயிற்றுப்போக்கு
  10. கைகள் அல்லது கால்களில் வீக்கம்

Aciloc 150 மி.கி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

முன்னெச்சரிக்கை:

இந்த மருந்தினை பயன்படுத்துவதற்கு முன்பாக மருத்துவரிடம் உங்கள் தற்போதைய மருந்துகள் பட்டியல் பற்றி கூறி அவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

மேலும் இந்த மருந்து குழந்தைகளுக்கு பயன்படுத்தக்கூடாது. அதே போல் இதய நோயாளிகளும் இதனை பயன்படுத்தக்கூடாது. சிறுநீரக பாதிப்படைந்த நோயாளிகளுக்கும் இது ஏற்றதல்ல.

இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

 Doxolin 200 மி.கி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement