டிரிப்டோமர் 10 மிகி மாத்திரை பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் | Tryptomer 10 Mg Uses in Tamil
இந்த பூமியில் வாழக்கூடிய அனைவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனை காரணமாக மன அழுத்தம் உருவாகிறது. அதில் ஒரு சிலர் மன அழுத்தத்தை குறைப்பதற்காக சிந்தனையை மாற்ற முயற்சிப்பார்கள், ஒரு சிலர் மருந்து அல்லது மாத்திரை எடுத்து கொள்வார்கள். அப்படி மன அழுத்தத்தை குறைப்பதற்காக எடுத்து கொள்ளும் மாத்திரையில் ஒன்று தான் இந்த டிரிப்டோமர் 10 மிகி மாத்திரை. இந்த மாத்திரையை பயன்படுத்துவதால் என்ன நன்மைகள் கிடைக்கின்றன மற்றும் அதன் பக்க விளைவுகள் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..
டிரிப்டோமர் 10 மிகி மாத்திரை பயன்கள் – Tryptomer 10 Mg Uses in Tamil:
- இந்த மாத்திரை பொதுவாக மன சோர்வு, மன அழுத்தம் அல்லது மன நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
- குழந்தைகள் உறங்கும் போது இரவு நேர படுக்கை ஈரமாகும். அதை குணப்படுத்த உதவுகிறது.
- நரம்பு சம்மந்தமான பிரச்சனைகளுக்கு, ஃபைப்ரோமியால்ஜியா, நீரிழிவு நியூரோபதி, ஒற்றைத் தலைவலி, கவலை போன்றவைகளை குணப்படுத்த பயன்பட்டு வருகிறது.
டிரிப்டோமர் 10 மிகி மாத்திரை பக்க விளைவுகள்:
- உடல் சோர்வு, தூக்க கலக்கம் போன்ற உணர்வு, உடல் எடை அதிகரிப்பது போன்ற பக்க விளைவுகள் ஏற்படும்.
- மங்கலான பார்வை, வாந்தி, குமட்டல், மயக்கம் போன்ற தீமைகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
- வாய் உலர்ந்து போதல், பசியிழப்பு, மலச்சிக்கல், தோல் வீக்கம், ரத்த அழுத்தம் உயர்வது போன்ற பக்க விளைவுகள் ஏற்படும்.
- இன்சோம்னியா, ஆண்மை இழப்பு, குழப்பம், உடம்பில் எந்த உணர்ச்சியும் வெளிப்படுத்தாது போன்ற உணர்வு, ஓய்வின்மை, மார்பகங்கள் வீக்கமடைதல், தோல் வெடிப்பு, முகம் மற்றும் நாக்கு வெடித்து போவது போன்ற பக்க விளைவுகள் ஏற்படும்.
- மேற் குறிப்பிட்ட பக்க விளைவுகள் அல்லது வேறு ஏதேனும் பக்க விளைவுகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
டிரிப்டோமர் 10 மிகி மாத்திரை யார் சாப்பிட கூடாது?
- கர்ப்பமாக இருக்கும் பெண்கள், குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை சாப்பிட கூடாது. அப்படி இந்த மாத்திரையை சாப்பிடுவதாக இருந்தாலும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிட கூடாது.
- மாரடைப்பு உள்ளவர்கள் இந்த மாத்திரையை சாப்பிட கூடாது.
- கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் இந்த மாத்திரையை எடுத்து கொள்ள கூடாது.
- மது அருந்துபவர்கள் மற்றும் வாகன ஓட்டும் போது இந்த மாத்திரையை பயன்படுத்த வேண்டாம்.
- மருத்துவர் எந்த நேரத்தில், எந்த அளவு Dosage எடுத்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறாரோ அப்பொழுது சாப்பிடுவது நல்லது. மருத்துவர் பரிந்துரை இல்லாமல் நீங்களாகவே எந்த மாத்திரையையும் உபயோகப்படுத்த வேண்டாம்.
மருந்து அளவு:
- Amitriptyline என்ற வடிவிலும் கிடைக்கிறது.
- 25MG, 75MG, 10MG
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
மருந்து |