Vomikind Syrup Uses in Tamil
இன்றைய சூழலில் நாளுக்கு நாள் நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றது. அதனால் அதனை சரி செய்வதற்கு உதவும் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றது. எந்த அளவிற்கு என்றால் இன்றைய சூழலில் ஒரு சிலரின் வாழ்க்கையில் மருந்துகள் தான் உணவு போல் ஆகிவிட்டது. அதனால் நாம் எடுத்து கொள்ளும் அனைத்து மருந்துகள் பற்றிய சரியான புரிதல் நம்மிடம் இருப்பது அவசியம். அதாவது நீங்கள் எடுத்து கொள்ளும் மருந்தினால் உங்களுக்கு என்ன பயன் கிடைக்கும் மற்றும் பக்க விளைவுகள் பற்றி நமக்கு தெளிவாக தெரிஞ்சிருக்கணும்.
அதனால் தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு மருந்து பற்றிய முழு விவரங்களையும் கூறிக்கொண்டு வருகின்றோம் அந்த வரிசையில் இன்றைய பதிவில் Vomikind சிரப்பினை எந்தெந்த பிரச்சனைக்காக பயன்படுத்தபடுகிறது. மேலும் இந்த சிரப்பினை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன மற்றும் எவ்வளவு சாப்பிட வேண்டும் போன்ற அனைத்து தகவல்களையும் விரிவாக பார்க்கலாம் வாங்க..
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Dolopar மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிகோங்க
Vomikind Syrup Uses in Tamil:
இந்த Vomikind சிரப்பினை அறுவை சிகிச்சை, கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு போன்ற பிற மருத்துவ சிகிச்சைகளால் ஏற்படும் குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவற்றை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
இந்த மருந்து, ஆன்டிஎமெட்டிக்ஸ் என்று பெயரிடப்பட்ட மருந்துத் தொகுதியைச் சேர்ந்தது. இந்த மருந்து உங்கள் குடலில் மற்றும் உங்கள் மைய நரம்பு மண்டலத்தில் செரட்டோனின் இரசாயனம் வெளியாவதில் இருந்து தடுக்கும்.
மேலும் இந்த மருந்து சிரப் வடிவத்தில் கிடைக்கிறது மற்றும் வாய் வழியாக எடுத்து கொள்ளலாம். இதனை மருத்துவர் அளித்த அளவை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ எடுத்து கொள்ள கூடாது.
அப்படி எடுத்து கொண்டால் இது உங்களுக்கு பல பக்க விளைவுகளை அளிக்கும் வாய்ப்புள்ளது.
Dolokind Plus மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிகோங்க
Vomikind Syrup Side Effects in Tamil:
- களைப்பு
- தலைசுற்றல்
- தலைவலி
- காய்ச்சல்
- வயிற்றுப்போக்கு
- மலச்சிக்கல்
Vomikind சிரப்பினை பயன்படுத்துவதால் மேலே குறிப்பிட்டுள்ள பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
முன்னெச்சரிக்கை:
இந்த மருந்தினை பயன்படுத்துவதற்கு முன்பாக மருத்துவரிடம் உங்கள் தற்போதைய மருந்துகள் பட்டியல் பற்றி கூறி அவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
மேலும் உங்களுக்கு கல்லீரல் நோய், சீரற்ற இதயத்துடிப்பு மற்றும் வயிறு அல்லது குடல் பிரச்சனைகள் போன்ற பிரச்சனைகள் இருந்திருந்தால் அதையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்கு முன் குமட்டல் ஏற்படுவதை தடுப்பதற்கு 1 முதல் 2 மணி நேரத்திற்கு முன்பு எடுத்து கொள்ளுங்கள்.
இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.
Redotil மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிகோங்க
ஓமி டி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிகோங்க
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |