எளிய மற்றும் சிறந்த 5 யோகாசனங்கள்..! | Simple and Best 5 Yoga Asanas in Tamil..!

எளிய மற்றும் சிறந்த 5 யோகாசனங்கள்..! | Simple and Best 5 Yoga Asanas in Tamil..!

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் நமது உடலை எப்போதும் வலிமையுடன் வைத்திருக்க உதவும் சிறந்த 5 யோகாசனங்கள் பற்றிய தகவலை பற்றி தான். பொதுவாக யோகாசனம் செய்வது என்றாலே சிறந்த ஒரு செயலாகும் ஏனென்றால் அது நமது உடல் வலிமை பெற மற்றும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும் உதவி புரிகின்றது. அதனால் நாம் தினமும் யோகாசனம் செய்வது மிகவும் நல்லது.

நம்மில் பலருக்கும் யோகாசனம் செய்ய வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் இருக்கும் ஆனால் எந்த ஆசனம் செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை பற்றி விரிவாக தெரிந்திருக்காது. அப்படிப்பட்டவர்களுக்காகத்தான் இன்றைய பதிவு அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் படியுங்கள்=> யோகா யாரெல்லாம் செய்ய கூடாது தெரியுமா.?

சிறந்த 5 யோகாசனங்கள்:

1. சிசுபாலாசனம் :

5 easy yoga asanas and their benefits in tamil

நாம் முதலாவதாக பார்க்க இருப்பது சிசுபாலாசனம் பற்றித்தான். முதலில் உங்களுடைய வலதுக்காலை எடுத்து இரு கைகளின் நடுவில் வைத்து சிறிய குழந்தையை கையில் வைத்துக்கொண்டு ஆட்டுவதை போல ஆட்ட வேண்டும். முக்கியமாக இந்த ஆசனம் செய்யும்பொழுது முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். மீண்டும் அதேப்போல இடதுக்காலையும் செய்ய வேண்டும்.

இந்த ஆசனம் செய்வதன்  மூலம் நமது முதுகு எலும்புகளுக்கு இரத்த ஓட்டம் சீராக பாய உதவுகிறது.

2. பத்மாசனம் :

5 easy yoga asanas with names in tamil

அடுத்து நாம் பார்க்க இருப்பது நாம் அனைவருக்கும் தெரிந்த பத்மாசனம் பற்றித்தான். இது சமதரையில் அமரும் முறையாகும். கால்களை நீட்டி உட்கார்ந்து, வலது காலை கைகளின் உதவியுடன் தூக்கி இடது தொடையில் அடிவயிற்றை ஒட்டியது போல் வைக்கவும். பின்னர் இடது காலை தூக்கி வலது தொடையில் அடிவயிற்றை ஒட்டியது  போல் வைக்கவும்.

அடிப்பாதங்கள் மேல் நோக்கி இருக்க வேண்டும். முழங்கால்கள் தரையில் படக் கூடியதாக நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். 

இந்த பத்மாசனம் செய்வதன்  மூலம் இடுப்பு பலப்படும், சுறுசுறுப்போடு இருக்கலாம், இரத்தம் நன்கு சுத்திகரிக்கப்படும், மனம் ஓய்வடைகிறது, உடல் புத்துணர்ச்சி பெறுகிறது.

3. பர்வதாசனம்:

5 yoga asanas with names in tamil

அடுத்து பர்வதாசனம் பர்வதம் என்றால் மலை என்று அர்த்தம். இந்த ஆசனத்தை செய்யும் பொழுது உடல் மலையை போன்ற அமைப்பில் காணப்படுவதால் இதனை பர்வதாசனம் என்று கூறப்படுகிறது.

பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டு மூச்சை உள்ளிழுத்தவாறே நமது கைகளை மெதுவாக பக்க வாட்டில் தூக்கி தலைக்கு மேல் கை முட்டியை வளைக்காமல் இரண்டு கைகளையும் வணக்கம் சொல்லுவது போல் ஒன்றாக கூப்பி வைக்கவும்.

இந்த பர்வதாசனம் செய்வதன்  மூலம் முதுகுத்தண்டு வலிமை பெறும், ஸ்திரத்தன்மை மற்றும் தேக உறுதி அதிகரிக்கிறது.

இதையும் படியுங்கள்=> யோகாசனம் பெயர்கள் படங்கள்

4. யோகாமுத்ரா :

sitting yoga asanas names with pictures and benefits in tamil

யோகமுத்ரா என்பது பத்மாசனத்தை அடிப்படையாக கொண்டு செய்யும் ஒரு ஆசனம் ஆகும். முதலில் பத்மாசனத்தில் அமர்ந்த வண்ணம் கைகளை மட்டும் பின்னால் கொண்டு போக வேண்டும்.

இடக்கை மணிக்கட்டை வலக்கையால் பிடித்துக்கொண்டு உடலை முன்னோக்கிக் குனிந்து கொண்டு போக வேண்டும். தாடையானது தரையைத் தொட வேண்டும். இந்த ஆசனத்தை செய்ய ஆரம்பித்ததும் குமிய முடியாது. நீங்கள் செய்து கொண்டே இருந்தால் பழக்கம் வந்துவிடும்.

யோகமுத்ரா ஆசனத்தை தினமும் செய்வதன் மூலம் தோள்பட்டை வலிகள் குறையும், தோள்பட்டையில் உள்ள தசைப்பிடிப்புகள் குறையும்,  பெரிய தொப்பை உள்ளவர்களுக்கு தொப்பைக் குறையும், செரிமான சக்தியை அதிகரிக்கும், மேலும் சர்க்கரை நோய், மூலம், வயிற்றுப் புண், குடலிறக்கம் போன்ற நோய்களுக்கும் இது சிறந்த பலனை தரும்.

5. புஜங்காசனம் :

yoga poses for beginners in tamil

அடுத்து புஜங்காசனம் பற்றி தான். பொதுவாக புஜங்காசனத்தில் உடலின் ஒவ்வொரு பகுதியும் பங்கேற்கிறது. இந்த ஆசனம் செய்யும் போது பாம்பு படமெடுப்பது போல உடல் வளைந்து நிமிா்ந்து முகம் நேராக நோக்குகிறது. அதனால் இது சா்ப்பாசனம் என்றும் அழைக்கப்படுகிறது. 

முதலில் குப்புறப் படுத்துக் கொள்ள வேண்டும். கால்கள் நன்றாக நீட்டியிருக்க வேண்டும். கைகள் இரண்டையும் மாா்புக்கு நேராகத் தரையில் விரல்களை விாித்து ஊன்றிக் கொள்ள வேண்டும்.

கைகள் அக்குள் பகுதியைத் தீண்டாமல் முன்னால் எடுத்துச் சென்று அப்படியே தூக்க வேண்டும். மாா்பு முன்னால் வளைந்தும் முகம் நேராக பாா்த்த வண்ணம் இருக்க வேண்டும். கால்களும் உடலின் இடுப்புக்குக் கீழுள்ள பாகமும் தரையைத் தொட்டு  இருக்க வேண்டும். கைகளை ஊன்றித் தலையை மேலே தூக்கும் போது சுவாசத்தை உள்ளிழுத்து, மீண்டும் பழைய நிலைக்க வரும் போது சுவாசத்தை வெளியே விட வேண்டும்.

தினமும் புஜங்காசனம் செய்வதன் மூலம் கழுத்து, கைகள், மாா்பு, ஆகியவை வலிமையடைகின்றன, பாா்வை தெளிவாகுகிறது மற்றும் இடுப்பு உறுதிப்படுகிறது. 

இதையும் படியுங்கள்=> யோகா வகைகள் மற்றும் பயன்கள்..! 

இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉யோகா