7 நாட்களில் உயரமாக வளர வேண்டுமா? அப்போ இதை மட்டும் பண்ணுங்கள்..!

Advertisement

 Height Increase Exercise Tamil | உயரமாக வளர என்ன உடற்பயிற்சி செய்ய வேண்டும்

இந்த உலகத்தில் உயரம் குறைவாக உள்ள அனைவருக்குமே உயரமாக வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவர்களுக்கு உதவிடும் வகையில் இந்த பதிவு இருக்கும். வெறும் உணவின் மூலம் மட்டும் ஒருவர் உயரத்தை அதிகரிக்க முடியாது. ஆரோக்கியமான உணவுடன் சில உடற்பயிற்சிகளை தினமும் செய்து வந்தோம் என்றால் நிச்சயமாக நமது உயரத்தை மிக எளிதாக அதிகரிக்க முடியும். நீங்கள் உயரமாக வளர வேண்டும் என்றால், இங்கு கூறப்பட்டுள்ள உடற்பயிற்சிகளை 7 நாட்கள் முதல் ஒரு மாதம் செய்து வந்தாலே போதும் மிக எளிதாக உயரமாகலாம். சரி வாங்க அந்த உடற்பயிற்சிகளை இப்பொழுது ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

தொங்கும் பயிற்சி – Hanging Exercise for Height Growth in Tamil:

உயரத்தை அதிகரிக்க விரும்பும் நபர்கள் தினமும் தொங்கும் பயிற்சியை செய்து வரலாம். இவ்வாறு செய்வதினால் முதுகெலும்பு முதல் உடலில் உள்ள அனைத்து ஜாயிண்ட் எலும்புகளுக்கு நல்ல பயிற்ச்சியை வழங்கும். இவ்வாறு செய்வதினால் நமது உடல் அமைப்புகள் விரிவடையும் இதனால் நமது உயரத்தை எளிதாக அதிகரிக்க முடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உயரமாக வளர எளிய இயற்கை வழிமுறைகள்..!

ஜம்பிங் – Jumping Exercise for Height Increase in Tamil:

jumping exercise for height increase

கால்களை மேல்நோக்கி உயர்த்தி துள்ளிக்குதிக்கும் ‘ஜம்பிங்’ பயிற்சியை மேற்கொள்வது எலும்பு ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். தினமும் ஜம்பிங் செய்வதன் மூலம் உயரத்தை அதிகரிக்க முடியும். தினமும் உங்களால முடிந்தவரை உயரமாக ஜம்பிங் செய்யுங்கள். நீங்கள் தினமும் ஜம்பிங் செய்வதன் மூலம் உங்கள் உயரத்தை அதிகரிக்க முடியும்.

நீச்சல் – Swimming: 

Swimming exercise

உயரத்தை அதிகரிக்க விரும்புபவர்கள் தினமும் நீச்சல் பயிற்ச்சியை மேற்கொள்ளலாம். தினமும் நீச்சல் அடிப்பதன் மூலம் உடல் அமைப்புகள் விரிவடைகிறது. இதனால் நீங்கள் சீராக உயரத்தை அதிகரிக்க முடியும். மேலும் உடலுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.

புஜங்காசனம் செய்யும் முறை:

புஜங்காசனம் செய்யும் முறை

  • முதலில் தரையில் குப்புற படுக்க வேண்டும்.
  • அடுத்து உங்கள் உள்ளங்கைகளை உங்கள் தோள்களுக்கு கீழே தரையில் வைக்க வேண்டும்.
  • கைகளை ஊன்றித் தலையை மேலே தூக்க வேண்டும்.
  • அடுத்து சுவாசத்தை உள்ளுக்கு இழுத்து, மீண்டும் பழைய நிலைக்க வரும்போது சுவாசத்தை வெளியே விட வேண்டும்.
  • உங்கள் முதுகெலும்பை வளைக்கும் போது உங்கள் கன்னத்தை உயர்த்தவும்.
    உங்களால் முடிந்தவரை உங்கள் முதுகை வளைத்து குறைந்தது 30 வினாடிகள் வைத்திருக்கவும்.

Butt Bridge Exercise in Tamil:

butt bridge exercise

இந்த Butt Bridge Exercise-யில் நிறைய வகைகள் உள்ளது. அவற்றில் ஒன்றை இப்பொழுது பார்க்கலாம்.

தரையில் ஒரு பெட்ஸிட்டை விரித்துக்கொள்ளுங்கள் பிறகு அதில் கால்களை நீட்டி படுக்கவும். பிறகு உங்கள் இரு கைகளையும் பக்கவாட்டில் வைத்துக்கொள்ளவும். பின் இரு கால்களையும் மேல் படத்தில் காட்டியுள்ளது போல் மடக்க வேண்டும். இப்பொழுது உங்கள் இடுப்பு பகுதியை மேல் நோக்கி இரண்டு நிமிடம் உயர்த்த வேண்டும். இவ்வாறு இடுப்பை உயர்த்தும் போது உங்கள் கால் முட்டி, இடுப்பு பகுதி மற்றும் தோள்பட்டை இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும். இவ்வாறு 10 முதல் 20 நிமிடம் வரை செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் உயரத்தை அதிகரிக்க முடியும்.

தடாசனம் செய்யும் முறை: 

தடாசனம் செய்யும் முறை

இது நின்று கொண்டு செய்யவேண்டிய மிகவும் எளிமையான ஆசனம் ஆகும்.

  • முதலில் விரிப்பில் 2 கால்களையும் ஒன்றாக சேர்த்து வைத்து நேராக நிற்க வேண்டும்.
  • பின் 2 கைகளையும் மெதுவாக தலைக்கு மேலே உயர்த்த வேண்டும்.
  • அடுத்து இரு கைகளின் விரல்களையும் ஒன்றாக பிணைத்து, உள்ளங்கைகளை வானத்தை பார்த்து இருப்பது போல நீட்ட வேண்டும்.
  • பின் மெதுவாக குதிகால்களை உயர்த்தி நிமிர்ந்து நிற்க வேண்டும். இதே நிலையில் 10 வினாடிகள் நிற்க வேண்டும். மூச்சை மெதுவாக விட வேண்டும்.

பயன்கள்:

இ‌ந்த ஆசன‌த்தை செ‌ய்வத‌ன் மூல‌ம் உடலு‌ம், மனது‌ம் பு‌த்துண‌ர்வு பெறு‌ம். இ‌ந்த ஆசன‌த்தை 18 வயது வரை செய்து வந்தால் உயரமாக வளர உதவுகிறது. கர்ப்பிணி பெண்கள் 6 மாதம் வரை இந்த ஆசனத்தை செய்து வந்தால் சுகப்பிரசவம் உண்டாகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரே வாரத்தில் உயரமாக வளர்வது எப்படி? இதோ சில டிப்ஸ்..!

ரன்னிங் அல்லது ஜாகிங்:

ஜாகிங்

தினமும் காலை அல்லது மாலை நேரங்களில் ரன்னிங் அல்லது ஜாகிங் 1/2 மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை செய்து வாருங்கள். இப்படி செய்வதன் மூலம் உங்கள் உயரத்தை அதிகரிக்கலாம்.

மேல் கூறப்பட்டுள்ள பயிற்சிகளை தினமும் செய்து வாருங்கள் கண்டிப்பாக ஒரு மாதத்திலேயே உங்களுக்கு ஒரு நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

ஒற்றைக் கால் துள்ளல்: 

ஒற்றைக் கால் துள்ளல்

  • உங்கள் 2 கால்களில் ஒரு காலை மட்டும் தூக்கி கொண்டு பத்து முறை குதிக்க வேண்டும்.
  • பின் உங்கள் கைகளை வானத்தை நோக்கி நேராக வைக்க வேண்டும். அல்லது இடுப்பு பகுதியிலும் வைத்து கொள்ளலாம்.
  • இதுபோல குதித்து வருவதால் உடலில் எலும்புகளின் வளர்ச்சி அதிகரிக்கும்.

மேலும் சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல் போன்ற பயிற்சிகளை செய்தும் வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> udal edai athikarikka tips
Advertisement