உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக செல்வதற்கு யோகாசனம்..!| Yoga Mudra for Blood Circulation in Tamil

Mudra for Blood Circulation in Tamil

உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக செல்வதற்கு யோகாசனம்..! | Mudra for Blood Circulation in Tamil

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய யோகா பதிவில் நாம் பார்க்க இருப்பது உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக செல்வதற்கு சில யோகாசனங்களை பற்றி தான். பொதுவாக நமது உடல் எந்த வித பிரச்சனைகளும் இல்லாமல் செயல் பட வேண்டும் என்றால் நமது உடலின் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். அப்படி நமது உடலின் இரத்த ஓட்டம் சீராக இல்லையென்றால் இதய நோய்கள், பக்கவாதம் மற்றும் இரத்தம் உறைதல் போன்ற பல நோய்கள் நமது உடலை தேடி வரும். அதனால் இந்த பதிவில் நமது உடலின் இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க சில யோகா முத்திரைகளை பற்றி பார்க்கலாம்.

1. சர்வாங்காசனம்:  

yoga for full body blood circulation in tamil

முதலில் ஒரு விரிப்பின் மீது இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்துப் படுக்கவும். அதன் பிறகு இரண்டு கைகளையும் பொறுமையாக உங்கள் பக்க வாட்டில் சாதரணமாக வைக்கவும்.

பின்னர் உங்கள் கால்களை 90 டிகிரி அளவிற்கு உயர்த்தவும், அதன் பிறகு  உள்ளங்கைகளை வைத்து அழுத்தி இடுப்பை பூமியிலிருந்து உயர்த்தி கொள்ளுங்கள். பிறகு உடம்பும் கால்களும் ஒரே நேர்க்கோட்டில் வரும் படி உடல் பளு முழுவதையும் தோள்பட்டைகளினால் தாங்கிக்கொள்ள வேண்டும். கைகளின் முட்டி பகுதிகள் இரண்டும் தரையை பார்த்த படி இருக்க வேண்டும்.

அப்படியே அசையாமல் 50 அல்லது 100 எண்ணிக்கைகள் இருக்க வேண்டும். பின்னர் இயல்பான நிலைக்கு வரவும்.

பலன்கள்:

இந்த யோகாசனத்தை தினமும் செய்வதன் மூலம் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக பாய்வதற்கு உதவுகிறது. இந்த ஆசனத்தால் தொண்டைப் பகுதிக்கு அதிக இரத்தம் செலுத்தப்படுவதால் தைராய்டு சுரப்பி ஒழுங்காக வேலை செய்ய உதவுகிறது.

2. உஸ்ட்ராசனம்:

best yoga for blood circulation in tamil

முதலில் தரைவிரிப்பில் நேராக நின்று கொண்டு மெதுவாக இரு முட்டிகளையும் தரை விரிப்பில் ஊன்றி இரு கால்களையும் பின்புறமாக நீட்டவும். பின் வயிறு, மார்பு, தலை ஆகியவைகளை பின்புறம் வளைத்து இரு கைகளாலும் இரு கணுக்கால்களையும் பிடித்துக்கொண்டு 5-10 நிமிடங்கள் நின்று பின் இயல்பு நிலைக்குத் திரும்பவும்.

பலன்கள்:

இந்த யோகாசனத்தை தினமும் செய்வதன் மூலம் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக பாய்வதற்கு உதவுகிறது. மேலும் முதுகெலும்பை பலப்படுத்தும், முதுகுவலி, இடுப்பு வலி அனைத்தும் நீங்கும்.

இரத்த சோகை குணமாக உடனடி தீர்வு

இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 யோகா