நுரையீரலை பலப்படுத்த உதவும் யோகாசனம்..!
வணக்கம் பொதுநலம்.காம் நேயர்களே..! இன்றைய யோகா பதிவில் நுரையீரலை பலப்படுத்த உதவும் யோகா முத்திரைகளை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். நமது உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் நுரையீரலும் ஒன்று. இதன் முக்கிய வேலையென்றால் நாம் சுவாசிக்கின்ற காற்றை சுத்திகரித்து அதில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி நமது உடலுக்கு ஆற்றல் தரக்கூடிய ஆக்சிஜனை உள் எடுத்துக்கொள்வதுதான். இந்த நுரையீரல் தனது வேலையை சரியாக செய்யவில்லை என்றால் நாம் நோய்வாய்ப்பட்டு இறந்து போய்விடுவோம்.
இன்றைய காலகட்டத்தில் நாம் சுவாசிக்கின்ற மூச்சி காற்றில் உள்ள அதிகப்படியான நச்சுகளினால் நமது நுரையீரல் மிகவும் பாதிப்படைகிறது. அதனால் அதனை பலப்படுத்த உதவும் சில யோகா முத்திரைகளை பற்றி தான் இன்றைய பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
நுரையீரலை பலப்படுத்த உதவும் யோகா முத்திரைகள்:
1. கணேச முத்திரை :
இந்த முத்திரை செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக்கொண்டு இயல்பாக மூச்சை இழுத்துவிட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும்.
அதன் பிறகு இடது கைவிரல்களை மடக்கி கீழே வைத்து அதனை வலது கைவிரல்களினால் கொக்கிபோல் கோர்த்துக் கொண்டு நன்கு இழுத்துக்கொள்ளுங்கள். மூச்சையும் நன்கு இழுத்து விடுங்கள்.
இதேபோல் வலது கை விரல்களை மடக்கி கீழே வைத்து அதனை இடது கைவிரல்களினால் கொக்கிபோல் கோர்த்துக் கொண்டு நன்கு இழுத்துக்கொள்ளுங்கள். மூச்சையும் நன்கு இழுத்து வீடுங்கள்.
2. சூன்ய முத்திரை :
இந்த முத்திரை செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக்கொண்டு இயல்பாக மூச்சை இழுத்துவிட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும்.
அதன் பிறகு நடுவிரலை மடித்து அதன் மையத்தில் கைகளின் கட்டை விரலை வைத்து இலேசாக அழுத்தம் கொடுங்கள். மற்ற விரல்களை எல்லாம் மேலே உள்ள படத்தில் உள்ளது போல் வைத்துக் கொள்ளுங்கள். மூச்சை நன்கு இழுத்து விடுங்கள்.
இந்த இரண்டு முத்திரைகளையும் தினமும் அதிகாலையில் 2-5 நிமிடங்கள் செய்வதன் மூலம் நுரையீரலில் உள்ள கட்டிகள், நுரையீரலில் ஏற்பட்டிருக்கும் தொற்றுகள் அனைத்தும் நீங்கி நுரையீரல் நன்கு பலப்பட உதவுகிறது.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக ஆடாதோடை
இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 | யோகா |