மூளைக்கு யோகா | Yoga for Brain Power in Tamil
அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய யோகா பதிவில் நமது மூளை நன்கு செயல்பட சில யோகா முத்திரைகளை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். நமது உடலின் மிக மிக முக்கியமான உடல் உறுப்பு என்றால் அது நமது மூளைதான். அதனால் தான் நமது மூளைக்கு எந்தவித பிரச்சனையும் வராதவாறு நாம் பார்த்துக் கொள்ளவேண்டும்.
அதற்காக தான் இந்த பதிவில் நமது மூளை நன்கு பலமுடனும், ஆரோக்கியத்துடனும் செயல்பட சில யோகா முத்திரைகளை பார்க்கலாம். சரி வாங்க பதிவினுள் செல்லலாம்.
1. பிருதிவி முத்திரை:
இந்த முத்திரை செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக்கொண்டு இயல்பாக மூச்சை இழுத்துவிட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும்.
அதன் பிறகு இரண்டு கைகளின் பெருவிரலை மடக்கி மோதிர விரலை அதன்மீது வைத்து நன்கு அழுத்தி கொள்ளுங்கள். இதுவே பிருதிவி முத்திரை, இதனை 5 – 10 நிமிடங்களுக்கு செய்யுங்கள்.
பலன்கள் :
இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் மூளைக்கு பாய்கின்ற இரத்த ஓட்டம் நன்கு பாய்ந்து மூளை நன்கு இயங்க உதவுகிறது. மேலும் அல்சர், உடல் எரிச்சல் போன்ற நோய்களுக்கும் இந்த முத்திரை நல்ல தீர்வாக உள்ளது.
2. அர்த்த சிரசாசனம் :
இந்த முத்திரை செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக்கொண்டு இயல்பாக மூச்சை இழுத்துவிட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும்.
அதன் பிறகு தரை விரிப்பில் முட்டிப் போட்டு உச்சந்தலை தரையில் படும்படி வைக்கவும். கைகளை தலைக்கு பின்னால் குவிக்கவும். பின் மெதுவாக உடலை குன்றுபோல் போல் வளைக்கவும். 10 – 15 வினாடிகள் இப்படியே இருங்கள். அதன் பிறகு இயல்பு நிலைக்கு வாருங்கள்.
பலன்கள் :
இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நமது மூளையின் நரம்பு மண்டலங்கள் மிக நன்றாக இயங்க உதவுகின்றது. மேலும் மூளை செல்களுக்கு இரத்த ஓட்டம் பாய உதவி புரிகிறது.
உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக செல்வதற்கு யோகாசனம்
இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 | யோகா |