சிறு தொழில்கள் – கிரிஸ்டல் நகை தயாரிப்பு பயிற்சி (crystal jewelry making):-
பெண்களுக்கு ஏற்ற சிறு தொழில் கிரிஸ்டல் நகை தயாரிப்பு..!
பெண்களின் அதிக நாட்டம் இப்போது கிறிஸ்டல் நகையில் (crystal jewelry making in tamil) செல்கிறது. ஏன் என்றால் அவற்றின் கலைநயம் மற்றும் குறைந்த விலை என்பதால் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் ஆகியவர்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர்.
எனவே சிறுதொழில் செய்யும் பெண்களுக்கு இது சிறந்த ஒன்றாக இருக்கும். பெண்கள் வீட்டில் இருந்தபடி செய்ய ஏற்ற தொழில் கிரிஸ்டல் நகை தயாரிப்பு (crystal jewelry making). இவற்றில் அதிக லாபமும் பெறலாம்.
சுயதொழில் பேப்பர் கவர் தயாரிப்பு..! சூப்பர் வருமானம்..! |
சரி வாங்க கிரிஸ்டல் நகை தயாரிப்பது பயிற்சி (crystal jewelry making) எப்படி என்று இவற்றில் நாம் காண்போம்.
கிரிஸ்டல் நகை தயாரிப்பு உற்பத்தி செலவு (crystal jewelry making cost):
ஒரு நபர் ஒரு நாளில் 8 மணி நேரத்தில் சிறிய அளவு கிரிஸ்டல் நகை (crystal jewelry making) 50 வரை தயாரிக்கலாம். நடுத்தர அளவு என்றால் 15, பெரிய அளவு என்றால் 20 வரை தயாரிக்க முடியும்.
சிறிய அளவு நகைக்கு ரூ.90/- முதல் ரூ.110/- வரை செலவாகும். நடுத்த அளவுக்கு ரூ.150/- முதல் ரூ.160/- வரையும், பெரிய அளவுக்கு ரூ.200/- செலவாகும்.
சிறிய அளவிலான 50 கிரிஸ்டல் நகைகள் தயாரிக்க உற்பத்தி செலவு ரூ.5,500/- நடுத்தர அளவு 15 நகை தயாரிக்க ரூ.2,600/- பெரிய அளவு 20 நகை தயாரிக்க ரூ.4,000/- தேவைப்படும்.
அனைத்து வகைகளையும் கலந்து தயாரிக்க சராசரியாக ரூ.5,000/- போதும்.
வருவாய் (ஒரு நாளைக்கு):
ஒரு நாள் உற்பத்திக்கு ரூ.5000/- செலவில் தயாரிக்கப்படும் கிரிஸ்டல் நகையை குறைந்தபட்சம் 30% கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யலாம்.
இதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.6,500/- வருவாய் பெறலாம், இதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.1500/- லாபம் பெறலாம்.
ஒரு நாள் தயாரித்ததை விற்ற பின், அதில் கிடைக்கும் வருவாயை கொண்டு அடுத்த நாள் உற்பத்தியை தொடங்கலாம். இது வீட்டில் இருந்தவாறு தொழில் செய்பவர்களுக்கு பொருந்தும்.
விற்பனை அளவுக்குகேற்ப உற்பத்தியை அதிகரித்தால், வருவாய் கூடும்.
வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஏற்ற சுயதொழில்..! |
எப்படி இருக்கு சந்தை வாய்ப்பு ?
அனைத்து ஆடைகளுக்கு ஏற்றபடி அணிய கிரிஸ்டல் நகைகளை (crystal jewelry making in tamil) தயாரிக்கலாம் (crystal jewelry making). இளம்பெண்கள் இதை விரும்பி வாங்குவார்கள் மற்றும் இதை அதிக கலைநயத்துடன் இருப்பதால் பெரியவர்களும் விரும்பி வாங்குவார்கள்.
இவை மிகவும் அழகாகவும், அனைவரும் விரும்பும் வகையிலும் உள்ளதால், பலர் பரிசளிக்க இந்த கிரிஸ்டல் நகையை வாங்குவார்கள்.
கிரிஸ்டல் செயின் மட்டுமல்லாமல், கிரிஸ்டல் தோடு, கிரிஸ்டல் கொலுசு ஆகியவற்றையும் எளிதில் தயாரிக்கலாம்.
தனிப்பட்ட முறையில் விற்பது மட்டுமல்லாமல் பேன்சி ஸ்டோர்கள், கவரிங் கடைகளுக்கும் சப்ளை செய்யலாம்.
கிரிஸ்டல் நகை தயாரிக்கும் முறை(அ) கிரிஸ்டல் நகை தயாரிப்பு பயிற்சி (crystal jewelry making):
கிரிஸ்டல் நகையை (crystal jewelry making) மிகவும் எளிய முறையில் தயாரிக்க முடியும். அதற்கு ரெடிமேடாக உள்ள பல வண்ண கிரிஸ்டல் மற்றும் இணைப்பு பொருட்களான சக்கரியா, பால் ஆகியவற்றை சேர்த்து கோர்ப்பதுதான்.
சிறுமிகள், இளம்பெண்கள், வயதானவர்கள் அணிவதற்கேற்ப குறைந்த நீளம் (ஒரு அடி), நடுத்தர நீளம் (ஒன்றரை அடி), அதிக நீளம் (2 அடி) ஆகிய அளவுகளில் கிரிஸ்டல் நகைகள் தயாரிக்கப்படுகின்றன.
முதலில் கிரிஸ்டல் வயர் கம்பியை கத்தரிக்கோல் கொண்டு தேவையான அளவுகளில் வெட்டி கொள்ள வேண்டும்.
2 பேர் கூட்டாக செய்தால், முதலில் டாலரை கோர்த்து நடுவில் தொங்கவிட்டு, இரு முனைகளில் ஒரு பால், ஒரு சக்கரியா, ஒரு கிரிஸ்டல் கல் ஆகியவற்றை வரிசைப்படி கோர்க்க வேண்டும்.
அதே முறையில் தொடர்ந்து கோர்த்து வர வேண்டும். இவ்வாறு இருபுறமும் கோர்த்து முடிக்கும் இடத்தில் கியர் லாக்கை கோர்த்து கட்டிங் பிளேயர் மூலம் முடிச்சு போட வேண்டும்.
இங்கு ஊக்கு, காந்தம் அல்லது ஸ்க்ரூ பொருத்தினால் கிரிஸ்டல் நகை (crystal jewelry making in tamil) ரெடி.
கிரிஸ்டல் நகை தயாரிப்புக்கு தேவையான பொருட்கள்:
இளம் மற்றும் அடர்த்தியான பல வண்ண கிரிஸ்டல் (crystal jewelry making in tamil). சிறியது முதல் பெரியது வரையில் 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 ஆகிய எண்களில் கிடைக்கும்.
எண் 2 கிரிஸ்டல் 90 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல் ரூ.65, எண் 4 ரூ.75, எண் 6 ரூ.95, எண் 8 முதல் 18 வரை ரூ.100.
சக்கரியா 100 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல் ரூ.52, கோல்டு பால் 100 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல் ரூ.19.
கியர் வயர், கோல்டு மற்றும் சில்வர் வண்ணங்களில் கிடைக்கும். 100 மீட்டர் கொண்ட ஒரு ரோல் ரூ.65.
கியர் லாக் 100 எண்ணிக்கையுள்ள ஒரு பாக்கெட் ரூ.52.
ஊக்கு ஒரு செட் ரூ.7, காந்த ஊக்கு ஒன்று ரூ.10, ஸ்க்ரூ செட் ரூ.7 முதல் ரூ.10.
கட்டர், பிளேயர் ஆகியவை தலா ரூ.100. நகரங்களில் உள்ள பேன்சி ஸ்டோர்களில் இந்த பொருட்கள் கிடைக்கின்றன.
புதிதாக என்ன தொழில் செய்யலாம் – 42 சிறந்த சிறு தொழில்கள்..! |
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் (Siru Tholil Ideas in Tamil) போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |