முதலீடு இல்லாமல் வெற்றி தரும் சிறந்த சிறுதொழில்கள்..!

Advertisement

முதலீடு இல்லாத தொழில்..! No Investment Business in Tamil..!

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொண்டோம் என்றால் நமது வாழ்க்கையை பற்றி எந்த ஒரு கவலையும் இருக்காது. இருப்பினும் பலருக்கு ஏதவாது சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். அதாவது என்ன தொழில் செய்வது, அந்த தொழிலை பற்றி எப்படி கற்றுக்கொள்வது என்று பல குழப்பங்கள் இருக்கும். இருப்பினும் என்ன தொழில் செய்தலும் அந்த தொழில் மீது முழுமையான ஈடுபாடு செலுத்தினால் அந்த தொழிலில் நீங்கள் நல்ல வருமத்தை பெறமுடியும். சரி வாங்க இந்த பதிவில் அதிக முதலீடு இல்லாத 50 சிறுதொழில்களை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

முதலீடு இல்லாமல் தொழில் தொடங்குவது எப்படி?

டைலரிங்:

டைலரிங்

வீட்டில் இருந்து நல்ல வருமானம் பெற வேண்டும் என்றால் டைலரிங் செய்யலாம். துணிகளை தைத்து கொடுப்பதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும். அதனுடன் உங்களுக்கு நன்றாக டைலரிங் தெரியும் என்றால் மற்றவர்களுக்கு வகுப்பு எடுக்கலாம் அதன் மூலம் உங்களுக்கு வருமானம் கிடைக்கும்.

ஆரி எம்பிராய்டரி ஒர்க்:

பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி வீட்டில் இருந்தபடி ஆரி எம்பிராய்டரி ஒர்க் கற்று கொள்வதன் மூலம் வீட்டில் இருந்தபடியே நல்ல வருமானத்தை பெற முடியும். ஒரு பிளவுசிற்கு குறைந்தபட்சம் 5000 ரூபாய் நீங்கள் தாராளமாக வாங்கலாம். அல்லது உங்களுக்கு வெறும் உங்களுக்கு எம்பிராய்டரி ஒர்க் மட்டும் தான் தெரியும் என்றால். அதன் மூலமும் நீங்கள் வீட்டில் இருந்தபடியே நல்ல வருமானம் பெற முடியும்.

கட்பீஸ் துணிகளை விற்பனை செய்யலாம்:

பொதுவாக கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகளவு சுடிதார் டாப்ஸை விரும்புவார்கள் ஆகவே நீங்கள் நல்ல டிசைனில் சுடிதார் டாப்ஸ் விற்பனை செய்திர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும். அதனுடன் நீங்கள் புடைவைகளுக்கான ஃபால்ஸ் தயாரித்து விற்பனை செய்தீர்கள் என்றால் இன்னும் கூடுதலாக நல்ல வருமானம் கிடைக்கும். நீங்கள் யார் செய்த புடைவைகளுக்கான ஃபால்ஷினை தையல் கடைகளில் கூட விற்பனை செய்யலாம்.

இந்த லிங்கையும் கிளிக் செய்யுங்கள் 👉 வீட்டில் இருந்து கொண்டே பணம் சம்பாதிக்க

டியூஷன் சென்டர்:

டியூஷன் சென்டர்

நாங்கள் நன்கு படித்தவர்கள் என்றால் வீட்டில் இருந்தபடியே மாணவர்களுக்கு டியூஷன் எடுக்கலாம். இப்பொழுது இருக்கின்ற கால கட்டத்தில் வீட்டில் உள்ள ஆண் பெண் இருவருமே வேலைக்கு சென்றால் தான் வீட்டை நிர்வாகம் செய்யமுடியும் என்ற நிலை வந்துவிட்டது. ஆக பெட்ரோட்களுக்கள் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பதற்கு நேரம் இருப்பதில்லை. ஆக நீங்கள் வீட்டில் இருந்தபடி டியூஷன் சென்டர் வைத்து நடத்தினால் நல்ல வருமானம் பெற முடியும்.

மாற்று மொழிகளை கற்றுத்தருவது:

உங்களுக்கு வேறு ஏதவது மொழிகள் தெரியும் என்றால் அந்த மொழிகளை மாட்டிறவர்களுக்கு கற்று கொடுக்கலாம். இதன் மூலம் நீங்கள் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க முடியும்.

யோகா பயிற்சி நிலையம்:

யோகா பயிற்சி

உங்களுக்கு யோகா பயிற்சி நன்றாக தெரிந்து அதற்கான சான்றிதழ்களை பெற்றிருந்திர்கள் என்றால் கண்டிப்பாக நீங்கள் யோகம் பயிற்சி நிலையம் வைத்து நடத்தலாம். ஏன் என்றால் இப்பொழுது எல்லாம் பலர் அவர்களது உடலில் அக்கறை செலுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அதன் காரணமாக உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த. இயற்கையான வழிகளை நாடுகின்றன. உடலுக்கு எப்பொழுதுமே புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய ஒன்று தான் யோகா ஆகவே நீங்கள் யோகா பயிற்சி நிலையம் வைத்து நடத்துனீர்கள் என்றால் அதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Siru Tholil Ideas in Tamil 2022
Advertisement